அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – 2

३२ वृद्धिरादैच्‌ |१ | १ | १ ||

आदैच्च वृद्धिसंज्ञ स्यात्‌ ।।.

32 வ்ருʼத்³தி⁴ராதை³ச்‌ | 1 | 1 | 1 ||

ஆதை³ச்ச வ்ருʼத்³தி⁴ஸஞ்ஜ்ஞ ஸ்யாத்‌ || .

ஆதை³ச்ச = ஆத் மற்றும் ஐச் (ஆ, ஐ, ஔ) ஆகியவை
வ்ருʼத்³தி⁴ஸஞ்ஜ்ஞ ஸ்யாத்‌ = வ்ருத்தி ஸ்ம்ஜ்ஞா ஆகும்

இது ஒரு ஸம்ஜ்ஞா சூத்திரம். ஆ, ஐ, ஔ ஆகியவை வ்ருத்³தி⁴ எழுத்துக்கள் எனப்படும். ஆத் என்பது ஆ என்கிற எழுத்தை மட்டுமே குறிக்கும் (தபரஸ்தத்காலஸ்ய சூத்திரப்படி). ஐச் என்பது ப்ரத்யாஹாரம் (ஐஔச்).


३३ वृद्धिरेचि |६ | १ | ८८ ||

आदेचि परे वृद्धिरेकादेश स्यात्‌ । गुणापवाद । कृष्णैकत्वम्‌ । गङ्‌गौघ । देवैश्वर्यम्‌ । कृष्णौत्कण्ठ्‌यम्‌ ।।.

33 வ்ருʼத்³தி⁴ரேசி | 6 | 1 | 88 ||

ஆதே³சி பரே வ்ருʼத்³தி⁴ரேகாதே³ஶ ஸ்யாத்‌ | கு³ணாபவாத³ | க்ருʼஷ்ணைகத்வம்‌ | க³ங்‌கௌ³க⁴ | தே³வைஶ்வர்யம்‌ | க்ருʼஷ்ணௌத்கண்ட்²‌யம்‌ || .

ஆதே³சி பரே – ஆத் (அ, ஆ), ஏச் (ஏ, ஓ, ஐ, ஔ) ஆகிய எழுத்துக்களுக்கு பதிலாக
வ்ருʼத்³தி⁴ ஏகாதே³ஶ ஸ்யாத்‌ – ஒரே வ்ருத்தி எழுத்து இடம் பெரும்

இங்கே ஆத் என்பது அ வின் ஐந்தாம் உருபு. அ, ஆ என்ற எழுத்துக்களுக்கு பிறகு, ஏசி பரே – ஏச் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்தால், வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் ஏகாதேசம் ஆகும். இந்த சூத்திரத்தை கு³ணாபவாத³ (गुणापवाद) சூத்திரம் – அதாவது ஆத்³கு³ண: சூத்திரத்தை இந்த சூத்திரம் மறுதலிக்கிறது.

ஆத்³கு³ண: சூத்திரப் படி அ, ஆ எழுத்துக்களில் முடியும் சொல்லை தொடர்ந்து அச் ப்ரத்யாஹார எழுத்தில் துவங்கும் சொல் வரும் போது அங்கே முன்னும் பின்னும் உள்ள எழுத்துக்களுக்கு பதிலாக குணம் (அத் ஏங்‌ கு³ண – ஆ,ஏ,ஓ) ஆதேசம் ஆகும். வ்ருʼத்³தி⁴ரேசி சூத்திரப் படி அ, ஆ எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் சொல் ஏச் பிரத்யஹார எழுத்து (ஏ ஓ, ஐ, ஔ) வரும் போது, வ்ருʼத்³தி⁴ (வ்ருத்³தி⁴ ஆத் ஐச் – ஆ, ஐ, ஔ) எழுத்துக்கள் ஏகாதேசம் ஆகும்.

அதாவது முதல் சொல்லில் அ, ஆ எழுத்துக்களைத் தொடர்ந்து இரண்டாவது சொல் அ, இ, உ, ரு’, ல்ரு எழுத்துக்களில் துவங்கினால், அந்த இடத்தில் குண அக்ஷரங்கள் முன்னும் பின்னும் வரும் எழுத்துக்களுக்கு பதிலாக ஏகாதேசம் ஆகும். முதல் சொல்லில் அ, ஆ எழுத்துக்களைத் தொடர்ந்து இரண்டாவது சொல் ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய எழுத்துக்களில் துவங்கினால், அந்த இடத்தில் வ்ருத்தி அக்ஷரங்கள் (வ்ருத்³தி⁴ ஆத் ஐச் – ஆ, ஐ, ஔ) முன்னும் பின்னும் வரும் எழுத்துக்களுக்கு பதிலாக ஆதேசம் ஆகும்.

உதாரணம்:

कृष्ण एकत्वम् – कृष्ण् + अ + ए + कत्वम् = कृष्ण् + ऐ + कत्वम् = कृष्णैकत्वम्

க்ருʼஷ்ண ஏகத்வம் – க்ருʼஷ்ண் + அ + ஏ + கத்வம் = க்ருʼஷ்ண் + ஐ + கத்வம் = க்ருʼஷ்ணைகத்வம்

गङ्गा + ओघ: = गङ् + ओ + घ = गङ्गौघ:

க³ங்கா³ + ஓக⁴: = க³ங் + ஓ + க⁴ = க³ங்கௌ³க⁴:

देव + ऐश्वर्यम् = देव् अ + ऐ + श्वर्यम् = देवैश्वर्यम्

தே³வ ஐஶ்வர்யம் = தே³வ் அ + ஐ + ஶ்வர்யம் = தே³வைஶ்வர்யம்

कृष्ण औत्कण्ठ्यम् = कृष्ण् अ + औ + त्कण्ठ्यम् = कृष्णौत्कण्ठ्यम्

க்ருʼஷ்ண ஔத்கண்ட்²யம் = க்ருʼஷ்ண் அ + ஔ + த்கண்ட்²யம் = க்ருʼஷ்ணௌத்கண்ட்²யம்


३४ एत्येधत्यूठ्‌सु |६ | १ | ८९ ||

अवर्णादेजाद्योरेत्येधत्योरूठि च परे वृद्धिरेकादेश स्यात्‌ । उपैति । उपैधते । प्रष्ठौह । एजाद्यो किम्‌ ? उपेत । मा भवान्प्रेदिधत्‌ । (अक्षादूहिन्यामुपसंख्यानम्‌) । अक्षौहिणी सेना । (प्रादूहोढोढ्‌येषैष्येषु) । प्रौह । प्रौढ । प्रौढि । प्रैष । प्रैष्य । (ऋते च तृतीयासमासे) । सुखेन ऋत सुखार्त । तृतीयेति किम्‌ ? परमर्त । (प्रवत्सतरकम्बलवसनार्णदशानामृणे) । प्रार्णम्‌, वत्सतरार्णम्‌, इत्यादि ।।.

34 ஏத்யேத⁴த்யூட்²‌ஸு | 6 | 1 | 89 ||

அவர்ணாதே³ஜாத்³யோரேத்யேத⁴த்யோரூடி² ச பரே வ்ருʼத்³தி⁴ரேகாதே³ஶ ஸ்யாத்‌ | உபைதி | உபைத⁴தே | ப்ரஷ்டௌ²ஹ | ஏஜாத்³யோ கிம்‌ ? உபேத | மா ப⁴வாந்ப்ரேதி³த⁴த்‌ | (அக்ஷாதூ³ஹிந்யாமுபஸங்க்²யாநம்‌) | அக்ஷௌஹிணீ ஸேநா | (ப்ராதூ³ஹோடோ⁴ட்⁴‌யேஷைஷ்யேஷு) | ப்ரௌஹ | ப்ரௌட⁴ | ப்ரௌடி⁴ | ப்ரைஷ | ப்ரைஷ்ய | (ருʼதே ச த்ருʼதீயாஸமாஸே) | ஸுகே²ந ருʼத ஸுகா²ர்த | த்ருʼதீயேதி கிம்‌ ? பரமர்த | (ப்ரவத்ஸதரகம்ப³லவஸநார்ணத³ஸா²நாம்ருʼணே) | ப்ரார்ணம்‌, வத்ஸதரார்ணம்‌, இத்யாதி³ || .

அவர்ணாத் – அவர்ணத்தில் இருந்து
ஏச் ஆத்³யோ – ஏச் ப்ரத்யாஹாரத்தில் துவங்கும்
ஏத், ஏத⁴த்யோ: உடி² ச – ஏதி, எத⁴தி மற்றும் உட்² ஆகியவை தொடர்ந்து வந்தால்
வ்ருʼத்³தி⁴ரேகாதே³ஶ ஸ்யாத்‌ – எகாதேசமாக (சந்தியில் சேரும் இரண்டு எழுத்துக்களுக்கும் பதிலாக) வ்ருத்தி ஆகும்

அ, ஆ எழுத்துக்களைத் தொடர்ந்து ஏ எழுத்தில் துவங்கும் (இண் தாது) ஏதி, எத⁴தி மற்றும் உ எழுத்தில் துவங்கும் உட்² ஆகியவை தொடர்ந்து வந்தால் வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் முதற்சொல்லின் கடைசி எழுத்துக்கும் இரண்டாவது சொல்லின் முதல் எழுத்துக்கும் பதிலாக ஏகாதேசமாக வரும்.

उप + एति = उपैति
உப + ஏதி = உபைதி

उप + एधति = उपैधति
உப + ஏத⁴தி = உபைத⁴தி

प्रष्ठ + ऊह = प्रष्ठौह:
ப்ரஷ்ட² + ஊஹ = ப்ரஷ்டௌ²ஹ:

ஏஜாத்³யோ கிம்‌ ? உபேத |

இதே இண் தாது ஏதி என்று உருவாகாமல் இத: (इत:) அல்லது இதி³த⁴த் (इदिधत् ) என்று உருவாகும் போது அதில் வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் ஏகாதேசமாக வராது, குண எழுத்துக்களே ஏகாதேசமாக ஆகும்.

உதாரணம்:

उप + इत: = उपैत:
உப + இத: = உபைத:

प्र + इदिधत् = प्रेदिधत्
ப்ர + இதி³த⁴த் = ப்ரேதி³த⁴த்

अव + एति = अवैति
அவ + ஏதி = அவைதி

अक्षादूहिन्यामुपसंख्यानम्‌

அக்ஷாதூ³ஹிந்யாமுபஸங்க்²யாநம்‌

அக்ஷாத் = அக்ஷ என்ற சொல் அ-வில் முடியும் சொல்லுக்கு பின்
ஊஹிந்யாம் = ஊ-வில் துவங்கும் ஊஹிநி என்ற சொல் தொடர்ந்து வரும் போது
உபஸங்க்²யாநம்‌ = அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் (வ்ருʼத்³தி⁴ ஆகும்)

அக்ஷ என்ற சொல்லும் ஊஹிநி என்ற சொல்லும் சேர்ந்து வரும் போது வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் ஏகாதேசமாக அமையும்.

(वा॰) अक्ष + ऊहिनी = अक्ष् + अ + ऊ + हिनी = अक्षौहिनी सेना
அக்ஷ + ஊஹிநீ = அக்ஷ் + அ + ஊ + ஹிநீ = அக்ஷௌஹிநீ ஸேநா

(वा॰) प्रादूहोढोढ्‌येषैष्येषु

ப்ராதூ³ஹோடோ⁴ட்⁴‌யேஷைஷ்யேஷு |

ப்ராத்³ = ப்ர விலிருந்து (துவங்கி)

ஊஹ ஊட⁴ ஊடி⁴‌ = ஊ-வில் துவங்கும் ஊஹ, ஊட⁴, ஊடி⁴‌ ஆகிய எழுத்துக்கள்
ஏஷ ஏஷ்ய = ஏ-வில் துவங்கும் ஏஷ, ஏஷ்ய ஆகிய சொற்கள் தொடர்ந்து வரும் போது (வ்ருʼத்³தி⁴ ஆகும்)

உதாரணம்:

प्र + ऊढ = प्र् + अ +ऊ + ढ = प्रौढ
ப்ர + ஊட⁴ = ப்ர் + அ +ஊ + ட⁴ = ப்ரௌட⁴

प्र + ऊढि = प्र् + अ +ऊ + ढि = प्रौढि
ப்ர + ஊடி⁴ = ப்ர் + அ +ஊ + டி⁴ = ப்ரௌடி⁴

प्र + एष = प्र् + अ +ए + ष = प्रैष
ப்ர + ஏஷ = ப்ர் + அ +ஏ + ஷ = ப்ரைஷ

प्र + एष्य = प्र् + अ +ए + ष्य = प्रैष्य
ப்ர + ஏஷ்ய = ப்ர் + அ +ஏ + ஷ்ய = ப்ரைஷ்ய

(वा॰)ऋते च तृतीयासमासे

ருʼதே ச த்ருʼதீயாஸமாஸே

ரு’த என்னும் ரு’ வில் துவங்கி அ-வில் முடியும் சொல்லிலும், மூன்றாவது உருபு தத்புருஷ ஸமாசத்திலும் வ்ருʼத்³தி⁴ ஆகும்

உதாரணம்:

(सुखेन + ऋत:) सुखार्त: = सुख (टा) + ऋत: = सुख् + अ + ऋ + त: = सुख् + आर् + त: = सुखार्त:

(ஸுகே²ந + ருʼத:) ஸுகா²ர்த: = ஸுக² (டா) + ருʼத: = ஸுக்² + அ + ருʼ + த: = ஸுக்² + ஆர் + த: = ஸுகா²ர்த:

இந்த உதாரணத்தில் அ + ரு’ = அர் என்று குணம் ஆகாமல் ஆர் என்று வ்ருத்தி ஆகிறது. இதுவே த்ருதீயா விபக்தி ஸமாசமாக இல்லாவிட்டால் அர் என்ற குண அக்ஷரங்களே வந்திருக்கும்.

உதாரணமாக,

परम + ऋत: = परम् + अ + ऋ + त: = परम् + अर् + त: = परमर्त:

பரம + ருʼத: = பரம் + அ + ருʼ + த: = பரம் + அர் + த: = பரமர்த:

(உரண் ரபர: சூத்திரப்படி அ + ரு’ = அர் என்று ஆகிறது. வ்ருʼத்³தி⁴ ஆவதில்லை).

(वा॰) प्रवत्सतरकम्बलवसनार्णदशानामृणे

ப்ர வத்ஸதர கம்ப³ல வஸநார்ண த³ஸா²நாம் ருʼணே |

ரு’ணம் என்னும் சொல் ப்ர, வத்ஸதர, கம்பல³, வஸந, ரு’ண, த³ஸ ஆகிய சொற்களுடன் சேரும் போது வ்ருʼத்³தி⁴ ஆகும்.

प्र + ऋणम् = प्र् + अ + ऋ + णम् = प्र् + आर् + णम् = प्रार्णम्

ப்ர + ருʼணம் = ப்ர் + அ + ருʼ + ணம் = ப்ர் + ஆர் + ணம் = ப்ரார்ணம்

वत्सतर + ऋणम् = वत्सतर् + अ + ऋ + णम् = वत्सतर् + आर् + णम् = वत्सतरार्णम्

வத்ஸதர + ருʼணம் = வத்ஸதர் + அ + ருʼ + ணம் = வத்ஸதர் + ஆர் + ணம் = வத்ஸதரார்ணம்

कम्बल + ऋणम् = कम्बल् + अ + ऋ + णम् = कम्बल् + आर् + णम् = कम्बलार्णम्

கம்ப³ல + ருʼணம் = கம்ப³ல் + அ + ருʼ + ணம் = கம்ப³ல் + ஆர் + ணம் = கம்ப³லார்ணம்

वसन + ऋणम् = वसन् + अ + ऋ + णम् = वसन् + आर् + णम् = वसनार्णम्

வஸந + ருʼணம் = வஸந் + அ + ருʼ + ணம் = வஸந் + ஆர் + ணம் = வஸநார்ணம்

ऋण + ऋणम् = ऋण् + अ + ऋ + णम् = ऋण् + आर् + णम् = ऋणार्णम्

ருʼண + ருʼணம் = ருʼண் + அ + ருʼ + ணம் = ருʼண் + ஆர் + ணம் = ருʼணார்ணம்

दश + ऋणम् = दश् + अ + ऋ + णम् = दश् + आर् + णम् = दशार्णम्

த³ஶ + ருʼணம் = த³ஶ் + அ + ருʼ + ணம் = த³ஶ் + ஆர் + ணம் = த³ஸா²ர்ணம்


३५ उपसर्गा: क्रियायोगे । १ । ४ । ५९ ॥

प्रादय क्रियायोगे उपसर्गसंज्ञा स्यु । प्र परा अप सम्‌ अनु अव निस्‌ निर्‌ दुस्‌ दुर्‌ वि आङ्‌ नि अधि अपि अति सु उत्‌ अभि प्रति परि उप – एते प्रादय ।।.

35 உபஸர்கா³: க்ரியாயோகே³ | 1 | 4 | 59 ||

ப்ராத³ய க்ரியாயோகே³ உபஸர்க³ஸஞ்ஜ்ஞா ஸ்யு | ப்ர பரா அப ஸம்‌ அநு அவ நிஸ்‌ நிர்‌ து³ஸ்‌ து³ர்‌ வி ஆங்‌ நி அதி⁴ அபி அதி ஸு உத்‌ அபி⁴ ப்ரதி பரி உப – ஏதே ப்ராத³ய ||

ப்ராத³ய = ப்ர என்று துவங்கும் சொற் தொகுதிகள்
க்ரியாயோகே³ = வினைச்சொற்களுடன் சேரும்போது
உபஸர்க³ஸஞ்ஜ்ஞா ஸ்யு = உபசர்க்கம் என்ற ஸம்ஜ்ஞாவால் அழைக்கப் படுகின்றன.

ப்ர-வில் துவங்கும் சொற்தொகுதிகள் வினைச்சொற்களுடன் சேர்ந்து இருக்கும் போது உபசர்க்கம் என்று அழைக்கப் படும். வினைச்சொற்கள் தாதுவில் (வேர்ச்சொல்) இருந்து உருவாகின்றன. வேர்சொற்களுக்கு பல அர்த்தங்கள் இருக்கும் (अनेकार्था: हि धातव:). இத்துடன் ப்ர முதலிய உபசர்க்கங்கள் சேரும் போது வெவ்வேறு விதமான அர்த்தங்கள் ஏற்படுகின்றன.

ப்ர (प्र), பரா(परा), அப(अप), ஸம்(सम्), அநு(अनु), அவ(अव), நிஸ்/நிர்(निस्/निर्), து³ஸ்(து³ர்)(दुस्(दुर्)), வி(वि), ஆங்(आङ्), நி(नि), அதி⁴(अधि), அபி(अपि), அதி (अति), ஸு(सु),உத்³(उद्), அபி⁴(अभि), ப்ரதி(प्रति), பரி(परि), உப(उप) ஆகியவை ப்ராதிகணம் என்னும் தொகுப்பில் உள்ள உபசர்க்கங்கள்.

उपसर्गेण धात्वर्थो बलादन्यत्र नीयते।

प्रहार-आहार-संहार-विहार-परिहार वत् ।।

உபஸர்கே³ண தா⁴த்வர்தோ² ப³லாத³ந்யத்ர நீயதே|

ப்ரஹார-ஆஹார-ஸம்ʼஹார-விஹார-பரிஹார வத் ||

உபஸர்கே³ண = உபசர்க்கத்தினால், தா⁴து – வினை வேர்ச்சொல், அர்த² = அர்த்தம், ப³லாத்³ = தம் பலத்தில், அந்யத்ர = வேறெங்கோ, நீயதே = இழுத்து செல்கின்றது. உதாரணமாக ஹ்ரு என்பது தாது. அதன் உபயோகத்தில் ஹரதி என்கிற வினைச்சொல் உருவாகிறது. ஹரதி – திருடுதல். இதுவே உபசர்க்கங்களுடன் சேரும் போது பொருள் பலவாறு மாறுகிறது. (ப்ர + ஹ்ரு) ப்ரஹார = அடித்தல்,

ஆ-ஹார = உண்ணுதல், சம்-ஹார – அழித்தல், வி-ஹார = உலாவுதல், பரிஹார – விட்டு விடுதல்!


३६ भूवादयो धातव । १ । ३ । १ ॥

क्रियावाचिनो भ्वादयो धातुसंज्ञा स्यु ।।.

36 பூ⁴வாத³யோ தா⁴தவ | 1 | 3 | 1 ||

க்ரியாவாசிநோ பூ⁴வாத³யோ தா⁴துஸஞ்ஜ்ஞா ஸ்யு: || .

க்ரியாவாசிந: = செயலைப் பற்றி பேசுவது (வினைச்சொற்கள்)
பூ⁴வாத³ய: (பூ⁴ வா ஆத³ய:) = பூ⁴ (இருத்தல்), வா (வீசுதல்)
தா⁴துஸஞ்ஜ்ஞா ஸ்யு: = தா⁴து எனப்படும்

வினைச்சொற்களின் தொகுப்பு கணபாடம் எனப்படுகிறது. அதில் வினைச்சொற்கள் பத்து கணங்களாக தொகுக்கப் பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு கணமும் அதில் முதல் வினைச்சொல்லின் பெயரால் அழைக்கப் படுகின்றன. அவற்றில் முதல் கணம் ப்⁴வாதிகணம் – பூ⁴ என்கிற தாதுவில் துவங்குகிறது. பூ⁴ என்கிற தாதுவில் இருந்து ப⁴வதி (இருக்கிறது/இருக்கிறான்/இருக்கிறாள்) ஆகிய வினைச்சொற்கள் உருவாகின்றன. இத்தகையை வினைச்சொற்களின் வேர்ச்சொற்கள் தாதுக்கள் என்று அழைக்கப் படுகின்றன. குறிப்பாக, இந்த சொற்கள் வினையைக் குறிக்கும் போது (க்ரியாவாசிந:) மட்டுமே தாதுக்கள் என்று அழைக்கப் படும். பூ⁴ என்பது பூமியையும் குறிக்கும் – அப்போது அது தாது என்று அழைக்கப் படமாட்டாது.


३७ उपसर्गादृति धातौ । ६ । १ । ९१ ॥

अवर्णादुपसर्गाद् ऋकारादौ धातौ परे वृद्धिरेकादेश: स्यात्‌ । प्रार्च्छति ।।.

37 உபஸர்கா³த்³ருʼதி தா⁴தௌ | 6 | 1 | 91 ||

அவர்ணாது³பஸர்கா³த்³ ருʼகாராதௌ³ தா⁴தௌ பரே வ்ருʼத்³தி⁴ரேகாதே³ஶ: ஸ்யாத்‌ | ப்ரார்ச்ச²தி ||

அவர்ணாது³பஸர்கா³த் = அவர்ணத்தில் (அ, ஆ) முடியும் ஒரு உபசர்கத்தை தொடர்ந்து
ருʼகாராதௌ³ = ரு’வில் துவங்கும்
தா⁴தௌ பரே = ஒரு வினைச்சொல் (தாது) தொடர்ந்து வரும் போது
வ்ருʼத்³தி⁴ரேகாதே³ஶ: ஸ்யாத்‌ = வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் (ஆ, ஏ, ஓ) ஏகாதேசமாக அமையும்

ரு'(ऋ)காரத்தில் துவங்கும் தாதுவுக்கு முன் அவர்ணத்தில் (அ, ஆ) முடியும் உபசர்க்கம் வரும் போது அங்கே சந்தி எழுத்தாக வ்ருʼத்³தி⁴ எழுத்துக்கள் ஏகாதேசமாக அமையும்.

உதாரணம்:

ப்ர(प्र) + ருʼச்ச²தி (ऋच्छति) = ப்ர்(प्र्) + அ (अ) + ரு'(ऋ) + ʼச்ச²தி (च्छति) = ப்ர்(प्र्) + ஆர்(आर्) + ʼச்ச²தி (च्छति) = ப்ரார்ச்ச²தி(प्रार्च्छति) (வேகமாகச் செல்கிறான்)


३८ एङि पररूपम्‌ । ६ । १ । ९४ ॥

आदुपसर्गादेङादौ धातौ परे पररूपमेकादेश स्यात्‌ । प्रेजते । उपोषति ।।.

38 ஏஙி பரரூபம்‌ | 6 | 1 | 94 ||

ஆது³பஸர்கா³தே³ஙாதௌ³ தா⁴தௌ பரரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ | ப்ரேஜதே | உபோஷதி || .

ஆது³பஸர்கா³த் = அவர்ணத்தில் (அ, ஆ) முடியும் உபசர்க்கத்தை தொடர்ந்து
ஏஙாதௌ³ தா⁴தௌ பரே = ஏங் ப்ரத்யாஹார எழுத்தில் (ஏ, ஓ) துவங்கும் வினைச்சொல் தொடர்ந்து வந்தால்
பரரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ = அந்த தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து – பரரூபம் (ஏ, ஓ) ஏகாதேசமாக வரும்

அ வர்ணத்தில் முடியும் உபசர்க்க சொற்களுக்கு பின்னால், ஏ, ஓ ஆகிய எழுத்துக்களில் துவங்கும் வினைச்சொற்கள் வருமாயின் அந்த (பரரூப) வினைச்சொல்லின் முதல் எழுத்துக்கள் (ஏ அல்லது ஓ) ஏகாதேசமாக வரும்.

உதாரணங்கள்:

प्र + एजते = प्र् + अ + ए + जते (पररूप) = प्र् + ए + जते = प्रेजते

ப்ர + ஏஜதே = ப்ர் + அ + ஏ + ஜதே (பரரூப) = ப்ர் + ஏ + ஜதே = ப்ரேஜதே

இந்த சூத்திரம் வ்ருʼத்³தி⁴ரேசி (वृद्धिरेचि) சூத்திரத்தின் அபவாத சூத்திரம். இந்த சூத்திரத்தை ஏத்யேத⁴த்யூட்²‌ஸு சூத்திரம் மறுக்கிறது.


३९ अचोऽन्त्यादि टि । १ । १ । ६४ ॥

अचां मध्ये योऽन्त्य स आदिर्यस्य तट् टिसंज्ञं स्यात्‌ । (शकन्ध्वादिषु पररूपं वाच्यम्‌) । तच्च टे । शकन्धु । कर्कन्धु मनीषा । आकृतिगणोऽयम्‌ । मार्त्तण्ड ।।.

39 அசோ(அ)ந்த்யாதி³ டி | 1 | 1 | 64 ||

அசாம்ʼ மத்⁴யே யோ(அ)ந்த்ய ஸ ஆதி³ர்யஸ்ய தட் டிஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ | (ஶகந்த்⁴வாதி³ஷு பரரூபம்ʼ வாச்யம்‌) | தச்ச டே | ஶகந்து⁴ | கர்கந்து⁴ மநீஷா | ஆக்ருʼதிக³ணோ(அ)யம்‌ | மார்த்தண்ட³ || .

அசாம்ʼ மத்⁴யே யோ(அ)ந்த்ய: = ஒரு சொல்லின் இறுதியில் கடைசியாக உள்ள உயிரெழுத்து
ஸ ஆதி³ர்யஸ்ய = மெய்யெழுத்துக்கு முன்பாக உள்ள அந்த எழுத்து
தட் டிஸஞ்ஜ்ஞம்ʼ ஸ்யாத்‌ = அது டி ஸம்ஜ்ஞா எனப்படும்.

ஒரு சொல்லின் இறுதியில், மெய்யெழுத்து எதுவும் இருந்தால் அதற்கு முன்னதாக, உள்ள உயிரெழுத்து டி என்கிற ஸம்ஜ்ஞா ஆகும். உதாரணமாக மநஸ் (मनस्) என்கிற சொல்லில் म् अ न् अ स् ஆகிய எழுத்துக்கள் உள்ளன. இதில் டி ஸம்ஜ்ஞா ஸ்(स्) என்கிற எழுத்துக்கு முன்னால் உள்ள அ (अ) டி ஆகும். கடைசியில் மெய் எழுத்து எதுவும் இல்லாமல் உயிரெழுத்து மட்டும் இருந்தாலும், உதாரணமாக, ஶக (शक) = ஶ்(श्) + அ(अ) + க்(क्) + அ(अ) – இதில் கடைசி அ எழுத்து டி ஆகும்.

(वा॰) शकन्ध्वादिषु पररूपं वाच्यम्)। तच्च टेः। शकन्धुः। कर्कन्धुः मनीषा। आकृतिगणो ऽयम्। मार्त्तण्डः॥

ஶகந்த்⁴வாதி³ஷு பரரூபம்ʼ வாச்யம்| தச்ச டே:| ஶகந்து⁴:| கர்கந்து⁴: மநீஷா| ஆக்ருʼதிக³ணோ (அ)யம்| மார்த்தண்ட³:||

ஶகந்த்⁴வாதி³ஷு = ஶகந்த்⁴வாதி³ கணத்தை சேர்ந்த தாதுக்கள்
பரரூபம்ʼ வாச்யம் = தொடர்ந்து வரும் சொல்லின் முதல் எழுத்து (பரரூபம்) ஏகாதேசமாக வரும்
தச்ச டே = அவ்வாறு ஏகாதேசமாக வரும் போது டி ஸம்ஜ்ஞாவினால் குறிப்பிடப் படும் எழுத்து மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் மெய்யெழுத்துக்களுக்கு பதிலாக ஏகாதேசம் ஆகும்

ஶக (शक) + அந்து⁴: (अन्धु:) = ஶக் (शक्) + அ(अ) + அ(अ) + ந்து⁴:(न्धु:) = டி எழுத்து (ஶக வரும் கடைசி அ) மற்றும் அந்து⁴: இதில் வரும் முதல் அ வுக்கு பதிலாக, அந்து⁴: வில் வரும் அ (பரரூபம்) ஏகாதேசமாக வரவேண்டும்.

कर्क + अन्धु: = कर्क् + अ + अन्धु: (पररूप एकादेश:) = कर्कन्धु:

கர்க + அந்து⁴: = கர்க் + அ + அந்து⁴: (பரரூப ஏகாதே³ஶ:) = கர்கந்து⁴:

मनस् + ईशा = मन् + अस् + ई + शा = (अस् = टि) = मन् + ई + शा (पररूप एकादेश) = मनीशा

மநஸ் + ஈஸா² = மந் + அஸ் + ஈ + ஸா² = (அஸ் = டி) = மந் + ஈ + ஸா² (பரரூப ஏகாதே³ஶ) = மநீஸா²

पतत् + अञ्जलि = पत् + अत् + अ + ञ्जलि = पत् + अ + ञ्जलि (पररूप एकादेश:) = पतञ्जलि

பதத் + அஞ்ஜலி = பத் + அத் + அ + ஞ்ஜலி = பத் + அ + ஞ்ஜலி (பரரூப ஏகாதே³ஶ:) = பதஞ்ஜலி

ஆக்ருʼதிக³ணோ (அ)யம்|:

आकृत्या स्वरूपेण कार्यदर्शनेन गण्यते परिचयते इति आकृतिगण:

ஆக்ருʼத்யா ஸ்வரூபேண கார்யத³ர்ஶநேந க³ண்யதே பரிசயதே இதி ஆக்ருʼதிக³ண:

கணம் என்பது கூட்டம். வினைச்சொற்களை கூட்டம் கூட்டமாக பிரித்து அமைத்துக் கொடுக்கும் சாத்திரம் கணபாடம் எனப்படுகிறது. இந்த கணபாடத்தில் உள்ள கணங்களுக்கு உரிய விதிகளை, கனபாடத்தில் சொல்லப்படாத வேறு சில சொற்களுக்கும் பொருந்துமாயின், அந்த சொற்கள் எந்த கணத்தின் விதிகளின் கீழ் வருகிறதோ அந்த கணத்தையே சேர்ந்தவையாக கருத வேண்டும். இவ்வாறு இருக்கும் சொற்களுக்கு என்று ஏற்பட்ட பெயர் ஆக்ருதி கணம் ஆகும். ஶகந்த்⁴வாதி³ கணம் ஒரு ஆக்ருதி கணம் எனப்படுகிறது.

मार्तण्ड: (मृत + अण्ड:), समर्थ: (सम + अर्थ:)

ஶகந்த்⁴வாதி³ கணத்தை தவிர்த்து மார்தண்ட³: (ம்ருʼத + அண்ட³:), ஸமர்த²: (ஸம + அர்த²:) போன்ற வேறு சில சொற்களும் இதே பரரூப விதியின் கீழ் வருகின்றன.


४० ओमाङोश्च । ६ । १ । ९५ ॥

ओमि आङि च आत्परे पररूपमेकादेश स्यात्‌ । शिवायोंं नम । शिव एहि ।।.

40 ஓமாஙோஶ்ச | 6 | 1 | 95 ||

ஓமி ஆஙி ச ஆத்பரே பரரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ | ஶிவாயோம்ம்ʼʼ நம | ஶிவ ஏஹி || .

ஓமி ஆஙி ச ஆத்பரே = ஓம் மற்றும் ஆங் ஆகியவை அவர்ணத்தைத் தொடர்ந்து வரும் போது
பரரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ = பரரூபம் (ஓ, ஆ) ஏகாதேசமாக அமையும்

ஒரு சொல் அ, ஆ வில் முடியும் போது, அதனைத் தொடர்ந்து ஓம் அல்லது ஆங் (ஆ) என்கிற உபசர்க்க எழுத்துக்கள் தொடர்ந்தால், அந்த தொடர்ந்து வரும் (பரரூப) எழுத்தை ஏகாதேசமாகக் கொள்ளவேண்டும்.

உதாரணம்:

शिवाय + ओम् नम: = शिवाय् + अ + ओम् + नम: = शिवायोम् नम:

ஶிவாய + ஓம் நம: = ஶிவாய் + அ + ஓம் + நம: = ஶிவாயோம் நம:

இதில் அ + ஓ என்பது வ்ருத்தி ஆகி ஔ என்று ஆகி இருக்க வேண்டும். இந்த விதி அதனைத் தடுத்து ஓம் என்ற மந்திர எழுத்து வரும் போது பரரூப எழுத்தை (தொடர்ந்து வரும் எழுத்தை) – ஓ – எடுத்து ஏகாதேசமாகப் போடவேண்டும் என்று கூறுகிறது.

இன்னொரு உதாரணம்:

शिव + एहि

ஶிவ + ஏஹி

இதில் ஏஹி என்பதை இரண்டாக உடைத்தால்

शिव + आ(ङ्) + इहि

ஶிவ + ஆ(ங்) + இஹி

(ஆ + இ சேர்த்து குணம் ஆகி ஏ என்று ஆகி இருக்கிறது.) இதில் ஆங் என்பது உபசர்க்கம். (பார்க்க: உபஸர்கா³ க்ரியாயோகே³ சூத்திரம்). ஹலந்த்யம் சூத்திரத்தினால் ங் என்பது இத் ஆகி விடுகிறது. இந்த சொற்களை மேலும் பிரித்தால்:

शिव् + अ + आ(ङ्) + इहि

ஶிவ் + அ + ஆ(ங்) + இ + ஹி

இதில் அ + ஆ என்கிற எழுத்துக்களை முதலில் சேர்க்க வேண்டுமா, ஆ + இ என்கிற எழுத்துக்களை முதலில் சேர்க்க வேண்டுமா என்பதில் குழப்பம் வரும். அதற்கு பதிலாவது, ஆ + இ என்பது அந்தரங்கம் (ஒன்றுக்குள் ஒன்று) என்றும் அ + ஆ என்பது பஹிரங்கம் (வெளியில் இருந்து வருவது) என்றும் கூறப் படுகிறது. இதில் முதலில் அந்தரங்க கார்யத்தையும் பிறகு பஹிரங்க கார்யத்தையும் செய்ய வேண்டும் (கணினி செயல்திட்டத்தில்(Program) உள்ளுக்குள் உள்ள அடைப்புக் குறிக்குள் இருப்பதை முதலில் கணிப்பது போன்றது).

धातुपसर्गयो: कार्यं अन्तरङ्गं अन्यद् बहिरङ्गं | असिद्धं बहिरङ्गं अन्तरङ्गे |

தா⁴துபஸர்க³யோ: கார்யம்ʼ அந்தரங்க³ம்ʼ அந்யத்³ ப³ஹிரங்க³ம்ʼ | அஸித்³த⁴ம்ʼ ப³ஹிரங்க³ம்ʼ அந்தரங்கே³ |

இவ்வாறு ஆ + இ சேர்ந்து ஏஹி ஆன பின்னால் ஏஹி என்பது உபசர்க்கம் அல்ல. அப்போது எப்படி ஓமாஙோஶ்ச சூத்திரம் பிரயோகிக்கத் தக்கதாகும் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு, அடுத்து வரும் சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்.


४१ अन्तादिवच्च । ६ । १ । ८५ ॥

योऽयमेकादेश स पूर्वस्यान्तवत्परस्यादिवत्‌स्यात् । शिवेहि ।।.

41 அந்தாதி³வச்ச | 6 | 1 | 85 ||

யோ(அ)யமேகாதே³ஶ ஸ பூர்வஸ்யாந்தவத்பரஸ்யாதி³வத்‌ ஸ்யாத்| ஶிவேஹி || .

யோ(அ)யமேகாதே³ஶ = ஓமாஙோஶ்ச சூத்திரத்தில் எந்த எழுத்து ஏகாதேசமாகிறதோ

ஸ பூர்வஸ்யாந்தவத் = அது முன் உள்ள சொல்லுக்கு கடைசி எழுத்து போன்றதும்

பரஸ்யாதி³வத்‌ ஸ்யாத் = பின்னுள்ள எழுத்துக்கு முதல் எழுத்து போன்றதும் ஆகும் .

ஓமாஙோஶ்ச சூத்திரத்தில் ஆ(ங்) + இ சேர்ந்து ஏ என்று ஆகும் போது அந்த ஏ என்கிற எழுத்து ஆ(ங்) என்ற சொல்லில் கடைசி எழுத்து, இஹி என்ற எழுத்தின் முதல் எழுத்துமாக, இரண்டு எழுத்துக்களையும் சேர்ந்த ஒன்றாக ஆகி விடுகிறது. இதனால் ஏஹி என்பதில் உள்ள ஏ-வை உபசர்க்கமாக கருதலாம். ஆகையால் ஓமாஙோஶ்ச பிரயோகிக்கத் தக்கதாக ஆகி விடுகிறது. ஆகவே

शिव् + अ + ए + हि = (पररूप) = शिव् + ए + हि = शिवेहि

ஶிவ் + அ + ஏ + ஹி = (பரரூப) = ஶிவ் + ஏ + ஹி = ஶிவேஹி (சிவா இங்கே வா!)

வேறு சில உதாரணங்கள்:

अव + आङ् + इहि = अवेहि

அவ + ஆங் + இஹி = அவேஹி (அறிந்திருத்தல்)

कृष्ण + आङ् + इहि = कृष्णेहि

க்ருʼஷ்ண + ஆங் + இஹி = க்ருʼஷ்ணேஹி


४२ अक सवर्णे दीर्घ । ६ । १ । १०१ ॥

अक सवर्णेऽचि परे पूर्वपरयोर्दीर्घ एकादेश स्यात्‌ । दैत्यारि । श्रीश । विष्णूदय । होतॄकार ।।.

42 அக ஸவர்ணே தீ³ர்க⁴ | 6 | 1 | 101 ||

அக ஸவர்ணே(அ)சி பரே பூர்வபரயோர்தீ³ர்க⁴ ஏகாதே³ஶ ஸ்யாத்‌ | தை³த்யாரி | ஸ்ரீஶ | விஷ்ணூத³ய | ஹோத்ரூʼகார || .

அக: = அக் ப்ரத்யாஹாரத்தில் உள்ள எழுத்துக்களுக்கு (அ, இ, உ, ரு’, ல்ரு’)

ஸவர்ணே(அ)சி பரே = அதே ஸவர்ண எழுத்துக்கள் தொடர்ந்து வந்தால்

பூர்வபரயோ = முன்னும் பின்னும் உள்ள எழுத்துக்களுக்கு பதிலாக

தீ³ர்க⁴ ஏகாதே³ஶ ஸ்யாத்‌ = தீ³ர்க⁴ எழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ரு, ல்ரு) ஏகாதேசமாக வரும்.

அக் ப்ரத்யாஹார எழுத்துக்கள், அக் ப்ரத்யாஹார எழுத்துக்களுடன் சேரும் போது தீர்க்கம் ஆகும்.

உதாரணம்:

दैत्य + अरि: = दैत्य् + अ + अ + रि: = दैत्यारि:

தை³த்ய + அரி: = தை³த்ய் + அ + அ + ரி: = தை³த்யாரி:

श्री + ईश: = श्र् + ई + ई + श: = श्रीश:

ஸ்ரீ + ஈஶ: = ஶ்ர் + ஈ + ஈ + ஶ: = ஸ்ரீஶ:

विष्णु + उदय: = विष्ण् + उ + उ + दय: = विष्णूदय:

விஷ்ணு + உத³ய: = விஷ்ண் + உ + உ + த³ய: = விஷ்ணூத³ய:

होतृ + ऋकार: = होत् + ऋ + ऋ + कार: = होतृकार:

ஹோத்ருʼ + ருʼகார: = ஹோத் + ருʼ + ருʼ + கார: = ஹோத்ருʼகார:

कमल + आकार = कमलाकर:

கமல + ஆகார = கமலாகர:


४३ एङ: पदान्तादति । ६ । १ । १०९ ॥

पदान्तादेङोऽति परे पूर्वरूपमेकादेश स्यात्‌ । हरेऽव । विष्णोऽव ।।

43 ஏங: பதா³ந்தாத³தி | 6 | 1 | 109 ||

பதா³ந்தாதே³ஙோ(அ)தி பரே பூர்வரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ | ஹரே(அ)வ | விஷ்ணோ(அ)வ ||

பதா³ந்தாத் ஏங: = ஏங் ப்ரத்யாஹாரத்தில் (ஏ, ஓ) முடியும் சொற்களுக்கு பின்
அதி பரே = ஹ்ரஸ்வ அ-காரம் (அ) தொடர்ந்து வந்தால்
பூர்வரூபமேகாதே³ஶ ஸ்யாத்‌ = முதல் எழுத்து (முதல் சொல்லின் கடைசி எழுத்து) ஏகாதேசமாக ஆகும்

ஏங் ப்ரத்யாஹாரத்தில் (ஏ, ஓ) முடியும் சொற்களுக்கு பின் ஹ்ரஸ்வ அ-காரம் (அ) தொடர்ந்து வந்தால் முதல் சொல்லின் கடைசி எழுத்து (அதாவது ஏ அல்லது ஓ) ஏகாதேசமாக ஆகும்.

உதாரணம்:

हरे + अव = हर् + ए + अ + व = हरेऽव

ஹரே + அவ = ஹர் + ஏ + அ + வ = ஹரே(அ)வ

विष्णो + अव = विष्ण् + ओ + अ + व = विष्णोऽव

விஷ்ணோ + அவ = விஷ்ண் + ஓ + அ + வ = விஷ்ணோ(அ)வ

விஷ்ணோவ என்றே எழுதலாம் என்றாலும் அ இருப்பதை குறிப்பால் உணர்த்தவே விஷ்ணோ(அ)வ என்று எழுதப் படுகிறது.

இந்த சூத்திரம் ஏசோ(அ)யவாயாவ: சூத்திரத்தின் அபவாதம். அந்த சூத்திரப்படி ஏச் (ஏ ஓ ஐ ஔ) எழுத்துக்கள் அச் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு முன்னால் இருக்கும் போது அவை முறையே அய் அவ் ஆய் ஆவ் என்று ஆகும். இந்த சூத்திரம் அதை மறுக்கிறது.

இந்த சூத்திரப் படி ஒரு பதம் ஏ அல்லது ஓ வில் முடியும் போது (பதம் என்பது என்ன? பார்க்க: ஸுப்திஙந்தம்ʼ பத³ம்‌))) அது பூர்வ ஏகாதேசம் ஆகும். பதம் அல்லாமல் அபதாந்தமாக (வினைச்சொல்லாகவோ, பெயர் சொல்லாகவோ இல்லாமல்) இருந்தால் அப்போது ஏசோ(அ)யவாயாவ: சூத்திரமே பிரயோகம் ஆகும்.

உதா: நே + அ: = ந் + அய் + அ = நய

போ⁴ + அ: = ப்⁴ + ஓ + அ: = ப்⁴ + அவ் + அ = ப⁴வ


Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)