அச் ஸந்தி⁴ ப்ரகரணம்

१५ इको यणचि ६ | १ | ७७ ||

इक स्थाने यण्‌ स्यादचि संहितायां विषये । सुधी उपास्य इति स्थिते ।।.

15 இகோ யணசி 6 | 1 | 77 ||

இக: யண் அசி

இக: ஸ்தா²நே யண்‌ ஸ்யாத³சி ஸம்ʼஹிதாயாம்ʼ விஷயே | ஸுதீ⁴ உபாஸ்ய இதி ஸ்தி²தே || .

இக: ஸ்தா²நே = இக் என்ற ப்ரத்யாஹாரம் குறிக்கும் எழுத்துக்கள் (இ, உ, ரு, ல்ரு) (இக: என்பது இக் என்ற சொல்லின் ஆறாம் வேற்றுமை)
யண்‌ ஸ்யாத் = யண் ப்ரத்யாஹாரம் குறிக்கும் எழுத்துக்கள் (ய, வ, ர, ல) வரும்
அசி = அச் ப்ரத்யாஹாரத்தின் எழுத்துக்கள் (அ, இ, உ, ரு, ல்ரு, ஏ ஓ, ஐ, ஔ) தொடர்ந்து வரும் போது. (அசி என்பது அச் என்கிற சொல்லின் ஏழாம் வேற்றுமை)
ஸம்ʼஹிதாயாம்ʼ விஷயே = சொற்களை சேர்ப்பது சம்ஹிதா – அவ்வாறு சேர்க்கும் விஷயத்தில்
ஸுதீ⁴ உபாஸ்ய இதி ஸ்தி²தே = ஸுதீ⁴ + உபாஸ்ய என்று இருக்கையில் (உதாரணம்)

इक् – इ उ ऋ लृ
अच् – अ इ उ ऋ लृ ए ओ ऐ
यण् – य व र ल

இரு சொற்கள் ஸந்தி⁴ செய்யப் படும் போது (சேர்ந்து உச்சரித்தல், பயன்படுத்தலின் போது), அதில் இக் பிரத்யஹாரத்தில் உள்ள எழுத்துக்களைத் தொடர்ந்து அச் பிரத்யஹாரத்தில் உள்ள எழுத்துக்கள் வருமானால், அந்த இக் பிரத்யஹார எழுத்துக்களுக்கு பதிலாக யண் பிரத்யஹாரத்தில் உள்ள எழுத்துக்கள் இடம் பெறும்.

உதாரணம்:
ஸுதீ⁴ + உபாஸ்ய: = ஸுத்⁴யுபாஸ்ய: / ஸுத்³த்⁴யுபாஸ்ய:

இதை உயிர் தனியாக மெய் தனியாக எழுதினால் இவ்வாறு வரும்:
ஸ் + + த்⁴ + + + ப் + ஆ + ஸ் + ய் + அ:

இதில் பார்த்தால் ஸ்-க்கு பிறகு வரும் உ, த்⁴ க்கு பிறகு வரும் ஈ, ப்-க்கு முன்னால் வரும் உ என்று இவை மூன்றுமே இக் ப்ரத்யாஹாரத்தில் உள்ள எழுத்துக்கள். இந்நிலையில் எந்த எழுத்தின் மீது இந்த சூத்திரத்தை பயன்படுத்துவது என்ற குழப்பம் வரும். அடுத்த சூத்திரத்தில் அதற்கு விடை கிடைக்கும்.


१६ तस्मिन्निति निर्दिष्टे पूर्वस्य १ | १ | ६६ ||

सप्तमीनिर्देशेन विधीयमानं कार्यं वर्णान्तरेणाव्यवहितस्य पूर्वस्य बोध्यम्‌ ।।.

16 தஸ்மிந்நிதி நிர்தி³ஷ்டே பூர்வஸ்ய 1 | 1 | 66 ||

தஸ்மிந் இதி நிர்தி³ஷ்டே பூர்வஸ்ய

ஸப்தமீநிர்தே³ஸே²ந விதீ⁴யமாநம்ʼ கார்யம்ʼ வர்ணாந்தரேணாவ்யவஹிதஸ்ய பூர்வஸ்ய போ³த்⁴யம்‌ || .

ஸப்தமீநிர்தே³ஸே²ந (தஸ்மிந் இதி) – ஏழாம் வேற்றுமையில் குறிப்பிடப் பெற்றுள்ள எழுத்துக்கு
விதீ⁴யமாநம்ʼ கார்யம்ʼ – குறிப்பிடப் பட்டுள்ள வேலை (ஸந்தி⁴ காரியம்)
வர்ணாந்தரேண – எழுத்துக்களின் நடுவே
அவ்யவஹிதஸ்ய பூர்வஸ்ய – வேறு எந்த எழுத்துக்களும் இடையில் இல்லாத அதற்கு முன்னால் உள்ள எழுத்தில்
போ³த்⁴யம்‌ – அறியப் படுகிறது

இந்த சூத்திரம் ஏழாம்வேற்றுமையில் உள்ள ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு முன்னால் வேறு எந்த எழுத்துக்களும் இல்லாமல் உடனடியாக முன்னால் இருக்கிற எழுத்தின் மீது தான் ஸந்தி⁴ கார்யம் நடை பெறவேண்டும் என்று கூறுகிறது. இதி என்பது சப்தத்தை அர்த்தமாகவும், அர்த்தத்தை சப்தமாகவும் ஆகவும் மாற்றவல்லது. இங்கே ‘தஸ்மிந்’ இதி என்பதில் தஸ்மிந் என்கிற சப்தத்தை இதி என்பது தொடர்ந்து வருவதால் அதனை அர்த்தமாக மாற்றுகிறது. தஸ்மிந் என்பது ஏழாம் வேற்றுமை. இவ்வாறு ஏழாம் வேற்றுமை வரும்போது முன்னால் இருக்கிற எழுத்தின் மீது தான் ஸந்தி⁴ கார்யம் நடை பெறவேண்டும் என்று கூறுகிறது. இதன் படி

ஸ் + உ + த்⁴ + + + ப் + ஆ + ஸ் + ய் + அ:

இதில் அச் ப்ரத்யாஹார எழுத்தான ப்-க்கு முன்னால் உள்ள எழுத்தான ஊ என்பதே ஏழாம் வேற்றுமையில் குறிப்பிடப் பட்டுள்ள அசி ஆகும். இதற்கு முன்னால் வேறு எந்த எழுத்துக்களும் இடையில் வராமல் இக் ப்ரத்யாஹார எழுத்தான ஈ இருக்கிறது. ஆகவே ஸந்தி⁴ கார்யம் ஈ-யின் மீது தான் நடைபெற வேண்டும். இதர அச் எழுத்துக்களுக்கும் அதற்கு முன்னால் இக் எழுத்துக்கள் இல்லை அல்லது நடுவில் வேறு எழுத்து இடையிடுகிறது. ஆக எங்கே ஸந்தி⁴ கார்யம் நடை பெற வேண்டும் என்று தெரிந்து விட்டது. இப்போது இக் எழுத்தான ஈ-க்கு பதிலாக யண் ப்ரத்யாஹாரத்தில் உள்ள எந்த எழுத்து வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஈ-க்கு பதிலாக ய, வ, ர, ல இந்த நான்கு எழுத்துக்களில் எது வரலாம்? அடுத்த சூத்திரத்தைப் பார்ப்போம்.

இகோ யணசி சூத்திரத்தில் இக: என்பது இக் என்ற பதத்தின் ஆறாம் வேற்றுமை. அசி என்பது ஏழாம் வேற்றுமை. இந்த சூத்திரம் ஒரு விதியில் ஏழாம் வேற்றுமையில் சொல் இருந்தால் அதற்கு முன்னால் உள்ள எழுத்தின் மீது ஸந்தி⁴ கார்யம் நடை பெற வேண்டும் என்று கூறுகிறது. இதைப் போல வேறு இரண்டு பரிபாஷா சூத்திரங்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
சில பரிபாஷா சூத்திரங்கள்:

 • தஸ்மாதி³த்யுத்தரஸ்ய 1| 1| 66 – தஸ்மாத் என்பது ஐந்தாம் வேற்றுமை. இவ்வாறு ஐந்தாம் வேற்றுமையில் ஒரு சொல் இருந்தால் அதைத் தொடர்ந்து வரும் எழுத்தின் மீது ஸந்தி⁴ கார்யம் நடை பெற வேண்டும்
 • ஷஷ்டீ² ஸ்தா²நே யோகா³ 1| 1| 49 – ஷஷ்டி என்பது ஆறாம் வேற்றுமையைக் குறிக்கும் – இவ்வாறு ஸந்தி⁴ காரியத்தில் ஆறாம் வேற்றுமையில் வரும் எழுத்துடன் சேர்க்கை நடைபெற வேண்டும்.

१७ स्थानेऽन्तरतम १ | १ | ५०

प्रसङ्‌गे सति सदृशतम आदेश स्यात्‌ । सुध्य्‌ उपास्य इति जाते ।।.

17 ஸ்தா²நே(அ)ந்தரதம 1 | 1 | 50

ப்ரஸங்‌கே³ ஸதி ஸத்³ருʼஶதம ஆதே³ஶ ஸ்யாத்‌ | ஸுத்⁴ய்‌ உபாஸ்ய இதி ஜாதே || .

ப்ரஸங்‌கே³ ஸதி (ஸ்தா²நே) – அந்த இடத்தில்
ஸத்³ருʼஶதம (அந்தரதம:) – அதே போன்ற எழுத்து (உச்சரிக்கும் இடம், முயற்சி ஆகியவற்றில் ஒரே மாதிரியான)
ஆதே³ஶ ஸ்யாத்‌ – ஆதேசம் ஆகும் (அந்த இடத்தை எடுத்துக் கொள்ளும்).
ஸுத்⁴ய்‌ உபாஸ்ய இதி ஜாதே – ஸுத்⁴ய்‌ உபாஸ்ய என்று ஆகும் இடத்தில்

எழுத்துக்கள் உருவாகும் இடம் மற்றும் முயற்சி குறித்த விளக்கங்கள் இங்கே. இதன் படி இ/ஈ என்ற எழுத்து “தாலு” என்கிற மேலண்ணத்தில் உண்டாகிறது. இதே போன்று ய, வ, ர, ல ஆகிய எழுத்துக்களில் ய மட்டுமே “தாலு” அதாவது மேலண்ணத்தில் உண்டாகிறது. ஆகவே ய-வின் மெய் எழுத்தான ய் என்ற எழுத்து ஈக்கு பதிலாக ஆதேசமாக வருகிறது.
அதனால் ஸுத்⁴ய்‌ + உபாஸ்ய என்று ஆகிறது.

 • ஆதேசம் என்றால் பதிலி என்று அர்த்தம். ஒரு எழுத்துக்கு பதிலாக வரும் வேறொரு எழுத்து ஆதேசம் ஆகும்.
 • ஆகமம் என்பது புதியதாக வந்து சேரும் எழுத்து.
 • லோபம் என்பது மறைந்து போகும் எழுத்து.

१८ अनचि च ८ | ४ | ४७ ||

अच परस्य यरो द्वे वा स्तो न त्वचि । इति धकारस्य द्वित्वेन सुध्ध्य्‌ उपास्य इति जाते ।।.

18 அநசி ச 8 | 4 | 47 ||

அச பரஸ்ய யரோ த்³வே வா ஸ்தோ ந த்வசி | இதி த⁴காரஸ்ய த்³வித்வேந ஸுத்⁴த்⁴ய்‌ உபாஸ்ய இதி ஜாதே || .

அச பரஸ்ய யர: = அச் ப்ரத்யாஹாரத்தை அடுத்து வரும் யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள்
த்³வே வா ஸ்த: = இரண்டாக ஆகலாம் (வா என்பது விகல்பத்தை குறிக்கும், விகல்பத்துடன் – சில இடங்களில் ஆகலாம்)
ந து அசி (அநசி) – உயிர் எழுத்துக்கள் அல்ல.

அச் என்கிற ப்ரத்யாஹாரம் எல்லா உயிர் எழுத்துக்களையும் கொண்டது. யர் என்பது ஹ-வை தவிர மற்ற எல்லா மேய்யேழுத்துக்களையும் கொண்டது. இவ்வாறு உயிரெழுத்தை தொடர்ந்து வரும் மெய் எழுத்துக்களில் (ஹ மற்றும் உயிரெழுத்துக்களைத் தவிர) வரும் போது விகல்பத்துடன் (சில இடங்களில் ஆகலாம், சில இடங்களில் இல்லை) இரண்டு எழுத்துக்களாக ஆகலாம்.
இவ்வாறு த⁴காரம் இரண்டு முறை ஏற்பட்டு ஸுத்⁴த்⁴ ய்‌ + உபாஸ்ய என்று ஆகிறது.


१९ झलां जश्‌ झशि ८ | ४ | ५३ ||

स्पष्टम्‌ । इति पूर्वधकारस्य दकार ।।.

19 ஜ²லாம்ʼ ஜஶ்‌ ஜ²ஶி 8 | 4 | 53 ||

ஸ்பஷ்டம்‌ | இதி பூர்வத⁴காரஸ்ய த³கார || .

ஜ⁴லாம்ʼ = ஜ⁴ல் ப்ரத்யாஹாரத்தில் உள்ள எழுத்துக்கு
ஜஶ்‌ = ஜஶ்‌ ப்ரத்யாஹாரத்தில் உள்ள எழுத்து
ஜ⁴ஶி = ஜ⁴ஶ்‌ ப்ரத்யாஹார எழுத்து தொடர்ந்து வரும் போது

झल् – झ, भ, घ, ढ, ध, ज, ब, ग, ड, द, ख, फ, छ, ठ, थ, च, ट, त, क, प, श, ष, स, ह
जश् – झ, भ, घ, ढ, ध, ज, ब, ग, ड, द

ஜ⁴ல் ப்ரத்யாஹாரத்தில் உள்ள எழுத்துக்கள் (झ, भ, घ, ढ, ध, ज, ब, ग, ड, द, ख, फ, छ, ठ, थ, च, ट, त, क, प, श, ष, स, மற்றும் ह), ஜ⁴ஶ்‌ ப்ரத்யாஹார (झ, भ, घ, ढ, ध, ज, ब, ग, ड, द) எழுத்துக்களைத் தொடர்ந்து வரும் போது அது ஜஶ்‌ ஆக மாறும்.

ஸு த்⁴ த்⁴ ய்‌ + உபாஸ்ய: என்பதில் த்⁴ என்பது மூன்றாவது த³-காரமாக மாறும். அதனால் ஸு த்³ த்⁴ ய்‌ + உபாஸ்ய: என்று ஆகிறது.


२० संयोगान्तस्य लोप: ८ | २ | २३ ||

संयोगान्तं यत्पदं तस्य लोप स्यात्‌ ।।.

20 ஸம்ʼயோகா³ந்தஸ்ய லோப: 8 | 2 | 23 ||

ஸம்ʼயோக³ அந்தஸ்ய லோப:

ஸம்ʼயோகா³ந்தம்ʼ யத்பத³ம்ʼ தஸ்ய லோப ஸ்யாத்‌ || .

ஸம்ʼயோகா³ந்தம்ʼ யத்பத³ம்ʼ = ஒரு பதத்தில், ஏதாவது எழுத்துக்கள் சேர்க்கப் பட்டால்,
தஸ்ய = அந்த எழுத்துக்களுக்கு
லோப ஸ்யாத்‌ = லோபம் ஆகும் (மறையும்)

இந்த சூத்திரத்தின் படி ஸந்தி⁴யில் ஈடுபட்டுள்ள சொல்லின் இறுதியில் உள்ள எழுத்துக்கள் லோபம் ஆகும் என்று கூறுகிறது. இதனை சரியாக புரிந்து கொள்ள அடுத்து வரும் பரிபாஷா சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்


२१ अलोऽन्त्यस्य १ | १ | ५२ ||

षष्ठीनिर्दिष्टोऽन्त्यस्याल आदेश स्यात्‌ । इति यलोपे प्राप्ते – (यण प्रतिषेधो वाच्य) । सुद्ध्‌युपास्य ।
मद्ध्वरि । धात्त्रंश । लाकृति ।।.

21 அலோ(அ)ந்த்யஸ்ய 1 | 1 | 52 ||

ஷஷ்டீ²நிர்தி³ஷ்டோ(அ)ந்த்யஸ்யால ஆதே³ஶ ஸ்யாத்‌ | இதி யலோபே ப்ராப்தே – (யண ப்ரதிஷேதோ⁴ வாச்ய) | ஸுத்³த்⁴‌யுபாஸ்ய |
மத்³த்⁴வரி | தா⁴த்த்ரம்ʼஶ | லாக்ருʼதி || .

ஷஷ்டீ²நிர்தி³ஷ்டஸ்ய = ஆறாம் வேற்றுமையில்
அந்த்யஸ்ய அல: = கடைசியில் வரும் அல் ப்ரத்யாஹார எழுத்து
ஆதே³ஶ ஸ்யாத்‌ = ஆதேசம் ஆகும்

अल् – எல்லா எழுத்துக்களும்

ஆறாம் வேற்றுமையில், கடைசியில் வரும் அல் ப்ரத்யாஹார எழுத்து (அதாவது எல்லா எழுத்துக்களும் அ.. முதல் ஹல் வரை) மீது காரியம் நடைபெறும். (முந்தைய சூத்திரம் இந்த பரிபாஷா சூத்திரம் விளக்கியபடி பார்க்கும் போது கடைசி எழுத்து மட்டுமே மறையும் என்று பொருள் தருகிறது).

இகோ யணசி சூத்திரத்தில் இக; என்று ஆறாம் வேற்றுமையில் குறிப்பிடப் படுவதை நினைவிற் கொள்ள வேண்டும்.

இதன் படி ஸு த்³ த்⁴ ய்‌ + உபாஸ்ய: என்பதில் ய் என்ற எழுத்து மட்டுமே லோபம் ஆகும்.

वा॰ यण: प्रतिषेधो वाच्य:

யண: ப்ரதிஷேதோ⁴ வாச்ய:

யண: = யண் ப்ரத்யாஹாரத்தின் எழுத்துக்கள்
ப்ரதிஷேத⁴: = மறுப்பு, தடுத்தல்
வாச்ய: = சொல்லப் பட்டது

यण् – य व र ल

இவ்வாறு காத்யாயனரின் வார்த்திகம் ய் என்ற எழுத்து லோபம் ஆவதை தடுக்கிறது.

இவ்வாறு ய் என்ற எழுத்து லோபம் ஆகாததால் ஸுத்³த்⁴ய்‌ + உபாஸ்ய: என்றே தொடர்கிறது. ஸுத்³த்⁴யுபாஸ்ய: என்ற ரூபம் சித்தம் ஆகிறது. அதாவது கிடைக்கிறது. இதில் த-காரத்தை இரண்டாக ஆக்கும் போது விகல்பத்துடன் செய்யப் பட்டது. அதாவது த-காரம் இரண்டாக ஆகாதபோது ஸுத்⁴யுபாஸ்ய: என்று ரூபமும் சரியான ஒன்றுதான்.

இதே போல இகோ யணசி சூத்திரப் படி மத்³த்⁴வ்ரி, தா⁴த்த்ரம்ʼஶ, லாக்ருʼதி: ஆகிய பதங்களும் எவ்வாறு உருவாகின்றன என்று காணலாம்.

1. மத்³த்⁴வ்ரி (मध्द्वरि)

மது⁴ + அரி = மத்³த்⁴வ்ரி என்று பதம் எவ்வாறு ஆகிறது என்று கீழ்கண்டவாறு காணலாம்.

 1. ம் + அ + த் + உ + அ + ர் + இ = என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இகோ யணசி சூத்திரத்தின் படி இக் எழுத்துக்களின் இடத்தில் யண் எழுத்து வரவேண்டும் என்று தெரிகிறது. இதில் இக் = இ உ ரு ல்ரு எழுத்துக்கள் வரிசையில் உ மற்றும் இ இருக்கிறது.
 2. தஸ்மிந்நிதி நிர்தி³ஷ்டே பூர்வஸ்ய சூத்திரத்தின் படி அசி என்ற ஏழாம் வேற்றுமையில் அமைந்த எழுத்துக்கு முன்னால் இருக்கிற இக் ப்ரத்யாஹார எழுத்து வரும் போது அந்த எழுத்தின் மீதே ஸந்தி⁴ நடை பெற வேண்டும் என்று அறிகிறோம். இதனால் மது³ என்ற எழுத்தில் உள்ள உ என்ற எழுத்தின் மீது ஸந்தி⁴ காரியம் நடைபெற வேண்டும்.
 3. ஸ்தா²நே(அ)ந்தரதம சூத்திரத்தின் படி உ என்ற எழுத்துக்கு ஈடான யண் ப்ரத்யாஹார எழுத்து வ ஆகும். (உபூபத்⁴மாநீயாநாமோஷ்டௌ², வகாரஸ்ய த³ந்தோஷ்ட²ம்‌ என்ற சூத்திரங்கள் படி உ என்ற எழுத்தும், வ என்ற எழுத்தும் உதட்டில் உருவாவதால் சம ஸ்தா²ந எழுத்துக்கள்). இதனால் ம் + அ + த்⁴ + வ் + அ + ர் + இ – என்று ஆகிறது.
 4. அநசி ச – சூத்திரத்தின் படி உயிரெழுத்தை (அ) தொடர்ந்து வரும் மெய் எழுத்துக்களில் (ஹ மற்றும் உயிரெழுத்துக்களைத் தவிர) வரும் போது விகல்பத்துடன் இரண்டாக ஆகலாம். அதன் படி ம் + அ + த்⁴ + த்⁴ + வ் + அ + ர் + இ என்று ஆகிறது.
 5. ஜ²லாம்ʼ ஜஶ்‌ ஜ²ஶி சூத்திரத்தின் படி மத்⁴த்⁴ + வ் + அரி என்பதில் முதல் த்³ என்று மாறும். இதனால் மத்³த்⁴ + வ் + அரி – என்ற நிலை ஏற்படுகிறது.
 6. ஸம்ʼயோகா³ந்தஸ்ய லோப: சூத்திரத்தின் படி புத்திதாக சேர்ந்த (ஆதேசம் ஆன) த்⁴த்⁴வ் ஆகிய எழுத்துக்கள் லோபம் ஆக வேண்டும். ஆனால் அலோ(அ)ந்த்யஸ்ய சூத்திரத்தின் படி கடைசி எழுத்தான வ் மட்டுமே லோபம் ஆக வேண்டும். யண: ப்ரதிஷேதோ⁴ வாச்ய: என்ற சூத்திரத்தின் படி யண் ப்ரத்யாஹார எழுத்துக்கள் லோபம் ஆகாது.

இவ்வாறு மது⁴ + அரி = மத்³த்⁴வ்ரி என்ற பதம் சித்தம் ஆகிறது.

***

2. தா⁴த்த்ரம்ʼஶ (धात्त्रम्श:)

தா⁴த்ரு + அம்ஸ: = தா⁴த்த்ரம்ʼஶ என்று பதம் எவ்வாறு ஆகிறது என்று கீழ்கண்டவாறு காணலாம்.

 1. தா + த் + ரு + அ + ம் + ஸ் + அ: என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இகோ யணசி சூத்திரத்தின் படி இக் எழுத்துக்களின் இடத்தில் யண் எழுத்து வரவேண்டும் என்று தெரிகிறது. இதில் இக் = இ உ ரு ல்ரு எழுத்துக்கள் வரிசையில் ரு இருக்கிறது.
 2. ஸ்தா²நே(அ)ந்தரதம சூத்திரத்தின் படி ரு (ऋ) என்ற எழுத்துக்கு ஈடான யண் ப்ரத்யாஹார எழுத்து ர ஆகும். (ருʼடுரஷாணாம்ʼ மூர்தா⁴ என்ற சூத்திரப் படி ரு, டு வர்க்கம் (ட ட² ட³ ட⁴ ண), ர, ஷ ஆகியவை தலையின் உச்சியில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்). இதனால் தா + த் + ர் + அ + ம் + ஸ் + அ: என்று ஆகிறது.
 3. அநசி ச சூத்திரத்தின் படி அச் ப்ரத்யாஹாரத்தை அடுத்து வரும் யர் ப்ரத்யாஹார எழுத்துக்கள் வந்தால் அந்த அச் எழுத்து இரண்டாக ஆகலாம் என்பதால் தா + த் + த் + ர் + அ + ம் + ஸ் + அ:
 4. இந்த ஸந்தி⁴யில் ஜ²லாம்ʼ ஜஶ்‌ ஜ²ஶி சூத்திரம் பிரயோகம் பண்ண முடியாது ஏனெனில் ஜ²ல் ப்ரத்யாஹார எழுத்து எதுவும் இல்லை. ஆகவே இந்த நிலையிலேயே தா⁴த்த்ரம்ʼஶ என்ற பதம் கிடைத்து விடுகிறது.

***

3. லாக்ருʼதி: (लाकृति:)

ல்ரு + ஆக்ருதி: = லாக்ருʼதி: என்று பதம் எவ்வாறு ஆகிறது என்று கீழ்கண்டவாறு காணலாம்.

 1. ல்ரு + ஆ + க்ரு + தி: = என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இகோ யணசி சூத்திரத்தின் படி இக் எழுத்துக்களின் இடத்தில் யண் எழுத்து வரவேண்டும் என்று தெரிகிறது. இதில் இக் = இ உ ரு ல்ரு எழுத்துக்கள் வரிசையில் ல்ரு என்கிற அக்ஷரம் இருக்கிறது.
 2. ஸ்தா²நே(அ)ந்தரதம சூத்திரத்தின் படி ல்ரு (ऋ) என்ற எழுத்துக்கு ஈடான யண் ப்ரத்யாஹார எழுத்து ல ஆகும். (ல்ருʼதுலஸாநாம்ʼ த³ந்தா என்ற சூத்திரப் படி ல்ரு, து வர்க்கம் (த த² த³ த⁴ ந), ல, ஸ ஆகியவை பற்களில் உருவாகும் ஸவர்ண ஒலிகள்). இதனால் ல் + ஆ + க்ரு + தி: என்று ஆகிறது. அதனால் லாக்ருதி: என்ற பதம் கிடைத்து விடுகிறது.

२२ एचोऽयवायाव | ६ | १ | ७८ ||

एच क्रमादय्‌ अव्‌ आय्‌ आव्‌ एते स्युरचि ।।

22 ஏசோ(அ)யவாயாவ | 6 | 1 | 78 ||

ஏச க்ரமாத³ய்‌ அவ்‌ ஆய்‌ ஆவ்‌ ஏதே ஸ்யுரசி ||

ஏச: க்ரமாத் – ஏச் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு (ஏ ஓ ஐ ஔ) முறையே
அய் அவ் ஆய் ஆவ் – (இவ்வாறு)
ஏதே ஸ்யு: அசி – அச் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு முன்னால் இவ்வாறு ஆகும்

एच् – ए ओ ऐ औ

ஏச் (ஏ ஓ ஐ ஔ) ப்ரத்யாஹார எழுத்துக்கள் அச் ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு முன்னால் இருக்கும் போது அவை முறையே அய் அவ் ஆய் ஆவ் என்று ஆகும்.. ஏச் என்பது ஸ்தா²நி எழுத்துக்கள். அய், அவ், ஆய், ஆவ் என்பவை ஆதேசம் ஆகும். (ஆதேசம் – replacement)

இது ஒரு விதி சூத்திரம். இந்த சூத்திரத்தில் க்ரமாத் என்பது முறையே என்று கூறுவது குறித்து விளக்கமாக புரிந்து கொள்ள அடுத்த சூத்திரத்தைப் பார்க்க வேண்டும். அடுத்த சூத்திரத்தை பரிபாஷா சூத்திரம் என்று கூறுவர்.


२३ यथासंख्यमनुदेश समानाम्‌ | १ | ३ | १० |

समसंबन्धी विधिर्यथासंख्यं स्यात्‌ । हरये । विष्णवे । नायक । पावक ।।.

23 யதா²ஸங்க்²யமநுதே³ஶ ஸமாநாம்‌ | 1 | 3 | 10 |

ஸமஸம்ப³ந்தீ⁴ விதி⁴ர்யதா²ஸங்க்²யம்ʼ ஸ்யாத்‌

ஸமஸம்ப³ந்தீ⁴ (ஸமாநம்) = சமமான
யதா²ஸங்க்²யம்ʼ = எண்ணிக்கையில்
விதி⁴ (அநுதேஸ) ஸ்யாத் = விதி (ஆதேசம்) ஆகும்

இது ஒரு பரிபாஷா சூத்திரம். இரண்டு வரிசைகளாக (க்ரம) வரிசைப் படி எழுத்துக்களை பகுத்து வைக்கும் போது அவை ஒன்றுக் கொன்று சமானம் ஆகும். இரண்டு வரிசையில் ஒரு வரிசையின் முதல் எழுத்து அடுத்த வரிசையின் முதல் எழுத்தாக மாறி இடம் பெரும். இரண்டாவது எழுத்து அடுத்த வரிசையின் இரண்டாவது எழுத்தாக மாறி இடம் பெரும்…

இந்த விதியின் உதவியுடன் இதற்கு முந்தைய விதியில் க்ரமாத் என்ற பதத்திற்கு அர்த்தத்தை நோக்கினால், அவை ஏ + அச் = அய், ஓ + அச் = அவ், ஐ + அச் = ஆய், ஔ + அச் = ஆவ் என்று ஆகும் என்று புரிந்து கொள்ளலாம்.

உதாரணம்:
ஹரே (हरे) + ஏ (ए) = ஹ + ர் + + ஏ = ஹ + ர் + அய் + ஏ = ஹரயே (हरये) (ஹரிக்காக)
விஷ்ணோ + ஏ = விஷ்ண் + + ஏ = விஷ்ண் + அவ் + ஏ = விஷ்ணவே (விஷ்ணுவுக்காக)
நை (नै) + அக: (अक:) = ந் + + அக: = ந் + ஆய் + அக: = நாயக: (नायक:) (தலைவர்)
பௌ (पौ) + அக: (अक:) = ப் + ஔ + அக: = ப் + ஆவ் + அக: = பாவக: (पावक:) (தீ)

இதே போல மேலும் சில உதாரணங்கள்:

ஸே² (शे) + அநம் (अनम्) = ஸ் + + அ + நம் = ஸ் + அய் + அநம் = ஶயநம் (शयनम्) (தூங்குவது)
நே (ने) + அநம் (अनम्) = ந் + + அநம் = ந் + அய் + அநம் = நயநம் (नयनम्) (கண்)
போ⁴ (भो) + அநம் (अनम्) = ப்⁴ + + அநம் = ப்⁴ + அவ் + அநம் = ப⁴வநம் (भवनम्) (வீடு)
போ (पो) + அந: (अन:) = ப் + + அந: = ப் + அவ் + அந: = பவந:(पवन:) (காற்று)
கை³ (गै) + அக:(अक:) = க்³ + + அக: = க்³ + ஆய் + அக: = கா³யக: (गायक:) (பாடகர்)
பௌ⁴ (भौ) + உக:(उक:) = ப் + + உ + க: = ப்⁴ + ஆவ் + உ + க: = பா⁴வுக:(भावुक:)


२४ वान्तो यि प्रत्यये | ६ | १ | ७९ ||

यकारादौ प्रत्यये परे ओदौतोरव्‌ आव्‌ एतौ स्त । गव्यम्‌ । नाव्यम्‌ ।

24 வாந்தோ யி ப்ரத்யயே | 6 | 1 | 79 ||

யகாராதௌ³ ப்ரத்யயே பரே ஓதௌ³தோரவ்‌ ஆவ்‌ ஏதௌ ஸ்த | க³வ்யம்‌ | நாவ்யம்‌ |

யகார ஆதௌ³ ப்ரத்யயே பரே = ய என்ற எழுத்து ப்ரத்யயமாக இருக்கும் போது அதற்கு  முன்னால்
ஓதௌ³தோ: = ஓ மற்றும் ஔ ஆகிய எழுத்துக்களுக்கு
அவ் ஆவ் = (இவ்வாறு)
எதௌ ஸ்த: = ஆகும்

வாந்தோ யீ ப்ரத்யயே என்பதில் யீ என்பது ய-வின் ஏழாம் வெற்றுமை. ய-காரம் ஒரு பிரத்யயமாக (suffix) இருக்கும் போது அதற்கு முன்னால் ஓ மற்றும் ஔ இருந்தாலும் அதுவும் முறையே அவ், ஆவ் என்று ஆகும். வா + அந்த = என்பது வ காரத்தில் முடியும் சொற்கள் – ஏசோ(அ)யவாயாவ சூத்திரத்தின் படி சேரும் அவ், ஆவ் ஆகியவற்றைக் குறிக்கும்.

உதாரணம்:

கோ³(गो) + யம்(यम्)  = க் + ஓ + யம் = க்³ + அவ் + யம் =  க³வ்யம்(गव्यम्)   (பசுவில் இருந்து கிடைப்பது)

நௌ (नौ)  + யம்(यम्)  = ந் + ஔ + யம் = ந் + ஆவ் + யம் = நாவ்யம் (नाव्यम्) (நீரில் மிதந்து செல்லத்தக்கது)

இந்த சூத்திரம் இரண்டு விதிகளை கூறுகிறது (1) முதல் வார்த்தை ஓ அல்லது ஔ என்ற எழுத்தில் முடியவேண்டும் (2) இரண்டாவது வார்த்தை ய-வில் தொடங்கும் ப்ரத்யய எழுத்தாக இருக்க வேண்டும் (யம் போன்றது). இந்த நிலையில் தான் அவ், ஆவ் என்று எழுத்துக்களை முறையே ஓ, ஔ எழுத்துக்களுக்கு பதிலாக இட வேண்டும்.

கவனிக்க: இந்த விதியில் ப்ரத்யயம் என்ற சொல்லுக்கு ய-காரம் விசேஷணமாக (adjective) வருகிறது. சம்ஸ்கிருதத்தில் விசேஷணம் (சிறப்பு), விசேஷ்யம் (சிறப்பிக்கப் படுவது) இரண்டும் ஒரே விபக்தியில் வரும். பொதுவாக விசேஷண சொல்லை – தத் அந்தஸ்ய என்று அதன் முடிவில் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கே ய-காரம் விசேஷணமாக இருந்த போதும், யஸ்மிந் விதி⁴ஸ்ததா³தா³வல்க்³ரஹணே ( यस्मिन् विधिस्तदादावल्ग्रहणे ) என்ற வார்த்திகத்தின் படி இந்த இடத்தில் ஏழாம் வேற்றுமையில் ஒரே எழுத்தாக இருக்கும் ய-காரம் ஆதியில் உள்ளதாக புரிந்து கொள்ள வேண்டும்

वा॰ अध्वपरिमाणे च । गव्यूति

(அத்⁴வபரிமாணே ச) | க³வ்யூதி

இது வாந்தோ யி ப்ரத்யயே சூத்திரத்துக்கு கூடுதலான விதி ஒன்றை விதிக்கிறது. அத்⁴வ = ஒரு வழியின் தூரம், பரிமாணே ச = அளவைகளிலும், வாந்தோ யி ப்ரத்யயே விதி செயல்படும். உதாரணமாக யூதி: (यूति:) என்பதன் ஒரு பொருள் நான்கு காத தூரத்தை குறிக்கும், மற்றொரு பொருள் நுகத்தடியை குறிக்கும்.

கோ³ (गो) + யூதி: (यूति:) = க்³ + ஓ + யுதி: = க்³ + அவ் + யுதி: = க³வ்யுதி: (யுதி: என்பது தூரத்தைக் குறிக்கும் போது)

கோ³ (गो) + யூதி: (यूति:) = கோ யுதி: (யுதி: என்பது நுகத்தடியைக் குறிக்கும் போது) – இதில் ஸந்தி⁴ காரியம் இல்லை


२५ अदेङ्‌ गुण: | १ | १ | २ ||

अत्‌ एङ्‌ च गुणसंज्ञ स्यात्‌ ।।.

25 அதே³ங்‌ கு³ண: | 1 | 1 | 2 ||

அத்³ ஏங் கு³ண:

அத்‌ ஏங்‌ ச கு³ணஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ || .

அத் ஏங் = ஹ்ரஸ்வ ஆகாரமும் ஏங் ப்ரத்யாஹார எழுத்துக்களும்
கு³ணஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ = குணம் என்கிற ஸம்ஜ்ஞா ஆகும்

அ, ஏ, ஓ ஆகியவை குண ஸம்ஜ்ஞா ஆகும். இதில் கவனிக்க வேண்டியது, ஹ்ரஸ்வ அகாரம் மற்றும் ஏ, ஓ மட்டுமே குணம் என்று கூறப் பட்டுள்ளது.

இதில் “அத்” (அத் ஏங்‌ கு³ண) என்பது எவ்வாறு ஹ்ரஸ்வ அகாரத்தை மட்டும் குறிக்கிறது என்று தெரிந்து கொள்ள அடுத்த சூத்திரத்தைப் பார்க்க வேண்டும்.


२६ तपरस्तत्कालस्य | १ | १ | ७० ||

त परो यस्मात्स च तात्परश्चोच्चार्यमाणसमकालस्यैव संज्ञा स्यात्‌ ।।.

26 தபரஸ்தத்காலஸ்ய | 1 | 1 | 70 ||

த பரோ யஸ்மாத்ஸ ச தாத்பரஶ்‌சோச்சார்யமாணஸமகாலஸ்யைவ ஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ || .

த: பரோ யஸ்மாத் ஸ ச = எந்த எழுத்து த் என்கிற எழுத்துக்கு முன்னால் வருகிறதோ
தாத் பர: ச = எந்த எழுத்தைத் தொடர்ந்து த் என்கிற எழுத்து வருகிறதோ
உச்சார்யமாண = அந்த உச்சரிக்கப் படும் எழுத்து
ஸமகாலஸ்ய ஏவ = அது உச்சரிக்கப் படும் காலத்தை மட்டுமே குறிக்கும்
ஸம்ஜ்ஞா ஸ்யாத்‌ = ஸம்ஜ்ஞா ஆகும்

த் என்கிற எழுத்துக்கு முன்னாலும், பின்னாலும் உச்சரிக்கப் படும் எழுத்து அது எந்த காலத்தில் (ஹ்ரஸ்வ, தீர்க்க, ப்லூத) உச்சரிக்கப் படுகிறதோ அதை மட்டுமே குறிக்கும். இந்த விதி அதே³ங்‌ கு³ண சூத்திரத்தில் உபயோகிப்பதாலேயே அ, ஏ, ஓ ஆகியவற்றை மட்டுமே குண ஸம்ஜ்ஞா எழுத்துக்களாக கூறப்பட்டுள்ளன.

இந்த விதி “அணுதி³த்ஸவர்ணஸ்ய சாப்ரத்யய” என்ற சூத்திரத்தை மறுதலிக்கிறது. அதனால் இந்த சூத்திரத்தை (தபர…) அபவாத சூத்திரம் என்று கூறப் படுகிறது. பொதுவாக இலக்கணத்தில் அ என்ற எழுத்தை எடுத்துக் கொண்டால் அதன் எல்லா காலங்களையுமே (ஹ்ரஸ்வ, தீர்க்க, ப்லுத) குறிக்கும். ஆனால் த் என்கிற எழுத்துடன் சேரும் போது, அத் = ஹ்ரஸ்வ அகாரம், ஆத் – தீர்க்க அகாரம் என்பது போல அந்தந்த காலத்தை மட்டுமே குறிக்கிறது.

 • வியாகரண சூத்திரங்களில் ஒரு விதியை விதிப்பது உத்சர்க்கம் என்று அழைக்கப் படுகிறது.
 • ஒரு முறை விதித்த விதியை மறுதலித்து கூறும் விதி அபவாதம் எனப்படும்

२७ आद्गुण |६ | १ | ८७ ||

अवर्णादचि परे पूर्वपरयोरेको गुण आदेश स्यात्‌ । उपेन्द्र । गङ्‌गोदकम्‌ ।।.

27 ஆத்³கு³ண | 6 | 1 | 87 ||

அவர்ணாத³சி பரே பூர்வபரயோரேகோ கு³ண ஆதே³ஶ ஸ்யாத்‌ | உபேந்த்³ர | க³ங்‌கோ³த³கம்‌ |

அவர்ணாத் – அவர்ணத்திலிருந்து (இது அவர்ண: என்பதன் ஐந்தாம் உறுபு)
அசி பரே – அச் ப்ரத்யாஹார எழுத்துக்கள் தொடர்ந்து இருக்கையில்
பூர்வபரயோ: – ஸந்தி⁴ சேரும் இரண்டு எழுத்துக்களிலும்
ஏகோ கு³ண ஆதே³ஶ ஸ்யாத்‌ – ஒரே குண அக்ஷரம் இடம் பெரும்.

अच् – अ इ उ ऋ लृ ए ओ ऐ
गुण अक्षराणि – अ ए ओ (२५ अदेङ्‌ गुण:)

அவர்ணத்தில் முடியும் சொல்லை தொடர்ந்து அச் ப்ரத்யாஹார எழுத்தில் துவங்கும் சொல் வரும் போது, முதல் சொல்லின் கடைசி எழுத்துக்கும் இரண்டாவது சொல்லின் முதல் எழுத்துக்கும் பதிலாக அவற்றின் ஸவர்ண எழுத்தான ஒரு குண அக்ஷரம் (அத் ஏங்‌ கு³ண – அ, ஏ, ஓ ஆகியவை குண அக்ஷரங்கள், இவற்றில் ஒன்று) இடம் பெரும் (replace).

உதாரணம்:

 • உப + இந்த்ர: = உ + ப் + அ + இ + ந்த்ர:இங்கே கவனிக்க வேண்டியது அ என்பது (அகுஹவிசர்ஜநீயாநாம் கண்ட:), இ என்பது (இசுயஸாநாம் தாலு), ஆகையால் ஏதை³தோ: கண்ட² தாலு (தொண்டையிலும் மேலன்னத்திலும் உருவாகும்) என்பதால் ஏ என்கிற எழுத்து அந்தர தமமான எழுத்து ஆகிறது. இதுவே அ மற்றும் இக்கு பதிலாக வரும். அதனால் உ + ப் + ஏ + ந்த்ர: என்று ஆகி = உபேந்த்ர: என்ற சொல் அடையப் படுகிறது.
 • க³ங்‌கா³ + உத³கம்‌ = க³ங்க்³ + ஆ + உ + த³கம் = ஆ என்பது தொண்டையில் உண்டாகும் ஒலி, உ என்பது உதட்டில் உண்டாவது – இவற்றுக்கு அந்தர தமமான எழுத்து ஓ (ஓதௌ³தோ கண்டோ²ஷ்டம்‌))))) உதட்டிலும், தொண்டையிலும் உருவாகிறது. ஆகவே இந்த இரண்டு எழுத்துக்கும் பதிலாக ஓ என்கிற குண அக்ஷரம் இடம் பெரும். ஆகவே க³ங்‌கா³ + உத³கம்‌ = க³ங்கோ³த³கம் என்று ஆகிறது.

२८ उपदेशेऽजनुनासिक इत्‌ | १ | ३ | २ ||

उपदेशेऽनुनासिकोऽजित्संज्ञ स्यात्‌ । प्रतिज्ञानुनासिक्या पाणिनीया । लण्सूत्रस्थावर्णेन सहोच्चार्यमाणो रेफो रलयो संज्ञा ।।.

28 உபதே³ஸே²(அ)ஜநுநாஸிக இத்‌ | 1 | 3 | 2 ||

உபதே³ஸே² அச் அநுநாஸிக இத்‌

உபதே³ஸே²(அ)நுநாஸிகோ(அ)ஜித்ஸஞ்ஜ்ஞ ஸ்யாத்‌ | ப்ரதிஜ்ஞாநுநாஸிக்யா பாணிநீயா | லண்ஸூத்ரஸ்தா²வர்ணேந ஸஹோச்சார்யமாணோ ரேபோ² ரலயோ ஸம்ஜ்ஞா ||

உபதே³ஸே² – உபதேசத்தில்
அநுநாஸிக: அச் – அச் ப்ரத்யாஹார எழுத்து (உயிர் எழுத்துக்கள்) அநுநாசிகமாக உச்சரிக்கப் பட்டால்
இத் ஸஞ்ஜ்ஞ ஸ்யாத்‌ – இத் ஸம்ஜ்ஞா ஆகும்.

अच् – अ इ उ ऋ लृ ए ओ ऐ

உபதேசத்திலே (மாஹெஸ்வர சூத்திரங்கள் துவங்கி எல்லா சூத்திரங்களிலும்) எந்த எழுத்து அநுநாசிகத்துடன் ஒலிக்கிறதோ, அது இத் ஆகும்.

ப்ரதிஜ்ஞாநுநாஸிக்யா பாணிநீயா

அநுநாசிக முறையில் எழுத்துக்களை உச்சரிப்பது (अँ, आँ…) பாணிநி, பதஞ்சலி, காத்யாயந மகரிஷிகளால் உபதேசிக்கப் பட்டிருக்க வேண்டும். நடைமுறையில் இவற்றின் உபயோகம் காண்பது அரிது.

லண்ஸூத்ரஸ்தா²வர்ணேந ஸஹோச்சார்யமாணோ ரேபோ² ரலயோ ஸம்ஜ்ஞா

மாஹேஸ்வர சூத்திரங்களில் உள்ள “லண்” சூத்திரத்தில் உள்ள அ எழுத்து இத் ஆகிறது. இதனால் இதற்கு முந்தய சூத்திரத்தில் உள்ள (ஹயவரட்) ரேப²ம் (ர-காரத்தை ரேப²ம் என்று சொல்ல வேண்டும்) ர எனும் போது அதற்கு அடுத்த சூத்திரமான லண் சூத்திரத்தில் உள்ள ல-காரத்தையும் சேர்த்தே குறிக்கும். ஹயவரட் என்ற சூத்திரம் ஹ்,ய்,வ், ர் ஆகிய எழுத்துக்களையே குறிக்கிறது – உச்சரிப்பதர்காக அ சேர்த்து ஹ, ய, வ, ர என்று சொல்லப் படுகிறது (ஹகாராதிஷு அகார: உச்சாரணார்த்தே). ஆகவே ர என்பது லண் சூத்திரத்தில் உள்ள அ- என்கிற இத் வரை ர்(ட்) ல்(அண்) குறிப்பதாகும். அதனால் ர என்பது ர் மற்றும் ல் இரண்டையும் குறிப்பதாகும்

தஸ்ய லோப: எனும் சூத்திரப்படி இத் எழுத்துக்கள் லோபம் ஆகி விடும்.


२९ उरण्‌ रपर | १ | १ | ५१ ||

ऋ इति त्रिंशत संज्ञेत्युक्तम्‌ । तत्स्थाने योऽण्‌ स रपर सन्नेव प्रवर्तते । कृष्णर्द्धि । तवल्कार ।।.

29 உரண்‌ ரபர | 1 | 1 | 51 ||

ருʼ இதி த்ரிம்ʼஶத ஸஞ்ஜ்ஞேத்யுக்தம்‌ | தத்ஸ்தா²நே யோ(அ)ண்‌ ஸ ரபர ஸந்நேவ ப்ரவர்ததே | க்ருʼஷ்ணர்த்³தி⁴ | தவல்கார || .

ருʼ இதி த்ரிம்ʼஶத ஸஞ்ஜ்ஞேத்யுக்தம்‌ – ரு’ என்பது முப்பது எழுத்துக்களைக் குறிக்கும்
தத்ஸ்தா²நே – அதன் இடத்தில் (அதற்கு பதிலாக)
யோ(அ)ண்‌ – எந்த அண் ப்ரத்யாஹார எழுத்துக்கள் (அ, இ, உ)
ஸ ரபர ஸந்நேவ ப்ரவர்ததே – ரபர எழுத்தாக (அர், இர், உர், அல், இல், உல்) என்று ஆகும்

अण् – अ इ उ

உரண் என்பதில் உ: என்பது ரு’ காரத்தின் ஆறாவது உருபு. ஆறாவது உருபு எந்த எழுத்தில் வருகிறதோ பதிலாக இன்னொரு இன்னொரு எழுத்து இடம் பெறும். அதன் படிக்கு இங்கே, ரு’ காரத்துக்கு பதிலாக (அதன் வேறு பாடுகள் 18 + ல்ரு காரத்தின் 12 ஆக முப்பது வேறுபாடுகளுக்கும்) அண் ப்ரத்யாஹார எழுத்துக்கள் ரபரத்துடன் (ல-பரத்துடனும்) இணைந்து வரும்.

உதாரணங்கள்:

க்ருʼஷ்ண (कृष्ण) + ருʼத்³தி⁴ (ऋद्धि) = க்ருʼஷ்ண் + அ + ருʼத்³தி⁴: = க்ருʼஷ்ண் + அர் + த்³தி⁴: = க்ருʼஷ்ணர்த்³தி⁴: (कृष्णर्द्धि:)

தவ (तव) + ல்ருʼகார: (लृकार:) = தவ் + அல் + கார: = தவல்கார: (तवल्कार:)

ஸப்த (सप्त) + ருʼஷய:(ऋषय:) = ஸப்த் + அர் + ஷய: = ஸப்தர்ஷய: (सप्तर्षय:)

க்³ரீஷ்ம (ग्रीष्म) + ருʼது (ऋतु) = க்³ரீஷ்ம் + அர் + து: = க்³ரீஷ்மர்து: (ग्रीष्मर्तु:)

மஹா (महा) + ருʼஷி (ऋषि) = மஹ் + ஆ + ரு’ஷி: = மஹ் + அர் + ஷி: = மஹர்ஷி: (महर्षि:)


३० लोप शाकल्यस्य | ८ | ३ | १९ ||

अवर्णपूर्वयो पदान्तयोर्यवयोर्लोपो वाऽशि परे ।।.

30 லோப ஶாகல்யஸ்ய | 8 | 3 | 19 ||

அவர்ணபூர்வயோ பதா³ந்தயோர்யவயோர்லோபோ வா(அ)ஶி பரே || .

பதா³ந்தயோ – சொல்லின் முடிவில்
யவயோ – ய், வ் ஆகிய எழுத்துக்களும்
அவர்ணபூர்வயோ: – அவற்றுக்கு முன்னால் அ வர்ண எழுத்து (அ, ஆ) இருக்கும் போது
அஶி பரே – அஶி ப்ரத்யாஹார எழுத்துக்களுக்கு முன்னால்
லோப: வா – விகல்பத்துடன் லோபம் ஆகலாம்

ஒரு பதம் (சொல்) அய், அவ், ஆய், ஆவ் என்று முடிகிற இடத்தில் அதனைத் தொடர்ந்து வரும் சொல் அஶ்‌ (अश्) ப்ரத்யாஹார எழுத்தில் துவங்குமானால், அதில் ய், வ், ஆகிய எழுத்துக்கள் விகல்பத்துடன் லோபம் ஆகலாம்.

பதம் என்பதற்கு சாதாரணமாக சொல் என்று அர்த்தம். ஆனால் பாணினியின் வியாகரணத்தில் பதம் என்பது சம்ஜ்ஞா ஆகும். ஸுப³ந்தம்ʼ திஙந்தம்ʼ ச பத³ஸஞ்ஜ்ஞம்ʼ – ஸுப் என்பது பெயர்கள், திங் என்பது வினைச்சொற்கள் (பார்க்க சம்ஜ்ஞா பிரகரணம்) – பதம் என்பது பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல்லைக் குறிக்கும்.

உதாரணங்கள்:

ஹரே (हरे) + இஹ(इह) = ஹர் + ஏ + இஹ = ஹர் + அய் + இஹ (ஏசோ(அ)யவாயாவ: (एचोऽयवायाव:) )

இப்போது லோப ஶாகல்யஸ்ய (लोप शाकल्यस्य) சூத்திரத்தால் ய் என்பது நீங்கி ஹர் + அ + இஹ என்று ஆகும். இதன் மீது ஆத்³கு³ண (आद्गुण) சூத்திரம் பிரயோகிக்க ஏதுவாகும். அடுத்த சூத்திரம் இதனை தடுக்கிறது.

இதே போல,

விஷ்ணோ(विष्णो) + இஹ(इह) = விஷ்ண்(विष्ण्) + ஓ(ओ) + இஹ(इह) = விஷ்ண் + அவ் + இஹ (ஏசோ(அ)யவாயாவ:) = விஷ்ண் + அ + இஹ (லோப ஶாகல்யஸ்ய)


३१ पूर्वत्रासिद्धम्‌ |८ | २ | १|

सपादसप्ताध्यायीं प्रति त्रिपाद्यसिद्धा, त्रिपाद्यामपि पूर्वं प्रति परं शास्त्रमसिद्धम्‌ । हर इह, हरयिह । विष्ण इह, विष्णविह ।।.

31 பூர்வத்ராஸித்³த⁴ம்‌ | 8 | 2 | 1|

ஸபாத³ஸப்தாத்⁴யாயீம்ʼ ப்ரதி த்ரிபாத்³யஸித்³தா⁴, த்ரிபாத்³யாமபி பூர்வம்ʼ ப்ரதி பரம்ʼ ஶாஸ்த்ரமஸித்³த⁴ம்‌ | ஹர இஹ, ஹரயிஹ | விஷ்ண இஹ, விஷ்ணவிஹ || .

ஸபாத³ஸப்தாத்⁴யாயீம்ʼ ப்ரதி – ஏழு அத்தியாயம் மற்றும் ஒரு பாதத்துக்கு
த்ரிபாத்³யஸித்³தா⁴ – மீதமுள்ள மூன்று பாதங்கள் தெரிவதில்லை
த்ரிபாத்³யாமபி – அந்த மூன்று பாதத்திலும்
பூர்வம்ʼ ப்ரதி பரம்ʼ – முன்னுள்ளதற்கு பின் உள்ளது
ஶாஸ்த்ரமஸித்³த⁴ம்‌ – விதிகள் தெரிவதில்லை

அஷ்டாத்யாயி என்பது எட்டு அத்யாயங்களும், ஒவ்வொரு அத்யாயத்திலும் நான்கு பாதங்கள் (பகுதிகள்) கொண்டது. அதை ஏழு அத்யாயங்களும் ஒரு பாதமும் (1.1.1 லிருந்து 8.1 அத்யாயம் முடிய, 8.2.1 துவங்கி 8.3 அத்யாயம் முடிய) ஒரு பாகமாகவும் மீதமுள்ள மூன்று பாதங்களை ஒரு பாகமாகவும் பிரிக்கப் பட்டிருக்கிறது. ஏழு அத்யாயங்களும் ஒரு பாதமும் கூடிய சூத்திரங்களை பொருத்தவரை மீதமுள்ள மூன்று பாதங்களில் உள்ள சூத்திரங்கள் தெரிவதில்லை (இல்லாதது போல). மேலும் மூன்று பாதங்களினுள்ளும் கூட முன்புள்ள சூத்திரத்துக்கு பின்பு வரும் சூத்திரம் தெரிவதில்லை (இல்லாதது போல).

இந்த சூத்திரமே மூன்று பாதத்தில் வரும் முதல் சூத்திரம். (8.2.1). இது ஒரு அதிகார சூத்திரம்.

முந்தைய சூத்திரத்தில்:

ஹரே (हरे) + இஹ(इह) உதாரணத்தில் ஹர் + அய் + இஹ = (லோப ஶாகல்யஸ்ய) = ஹர் + அ + இஹ என்று ஆனது. இப்போது ஆத்³கு³ண: (आद्गुण) சூத்திரம் இங்கே அ + இ = ஏ என்று செயல் படக் கூடும். ஆனால் இந்த சூத்திரம் அதனைத் தடுக்கிறது.

ஏனெனில் லோப ஶாகல்யஸ்ய சூத்திரம் வருவது 8.3.19. ஆத்³கு³ண: சூத்திரம் 6.1.87. ஆகவே ஆத்³கு³ண: சூத்திரத்துக்கு லோப ஶாகல்யஸ்ய சூத்திரம் அஸித்தம் (தெரியாது). ஆகவே அந்த சூத்திரத்தின் பார்வையில்

ஹர + அய் + இஹ என்று தான் தெரியும். ய் என்ற எழுத்து லோப ஶாகல்யஸ்ய சூத்திரப்படி லோபம் (மறைந்தது) ஆனது தெரியாது. ஆகவே அய் + இஹ என்று இருக்கும் போது ஆத்³கு³ண: ஆத்³கு³ண: சூத்திரத்தை பயன்படுத்த முடியாது.

ஹரே (हरे) + இஹ(इह) = ஹர் + ஏ + இஹ = ஹர் + அய் + இஹ

லோப ஶாகல்யஸ்ய பயன் படுத்தினால் = ஹர் + அ + இஹ = ஹர இஹ (ஸந்தி⁴ இல்லை)

லோப ஶாகல்யஸ்ய பயன் படுத்த வில்லை என்றால் = ஹர் + அய் + இஹ = ஹரயிஹ (हरयिह )

விஷ்ணோ(विष्णो) + இஹ(इह) = விஷ்ண் + ஓ + இஹ = விஷ்ண் + அவ் + இஹ

லோப ஶாகல்யஸ்ய பயன் படுத்தினால் = விஷ்ண இஹ (ஸந்தி⁴ இல்லை)

லோப ஶாகல்யஸ்ய பயன் படுத்த வில்லை என்றால் = விஷ்ணவிஹ (हरयिह)

இதே போல மேலும் சில உதாரணங்கள்:

ते + आगता: = त् + ए + आगता: = त् + अय् + आगता: = तयागता: |

தே + ஆக³தா: = த் + ஏ + ஆக³தா: = த் + அய் + ஆக³தா: = தயாக³தா: |1 Comment அச் ஸந்தி⁴ ப்ரகரணம்

 1. Sivakumar

  Sir ,

  I completed certificate course in Sanskrit and currently doing Diploma course in Sanskrit at Madras Sanskrit College, week end course.

  I want to learn step by step of panini grammar, it’s my life time ambition, Kindly guide me help me.

  My mother tongue is Tamil.

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)