அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – முன்னுரை

संहितैकपदे नित्या नित्या धातूपसर्गयोः ।
नित्या समासे वाक्ये तु सा विवक्षामपेक्षते ॥

ஸம்ʼஹிதைகபதே³ நித்யா நித்யா தா⁴தூபஸர்க³யோ​: |
நித்யா ஸமாஸே வாக்யே து ஸா விவக்ஷாமபேக்ஷதே ||

சம்ஸ்க்ருத இலக்கணம் கற்கத் துவங்கும் போது ஸந்தி⁴ விதிகள் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதுவே அடிப்படை. மேற்கண்ட ஸ்லோகம் ஸந்தி⁴ எப்போதெல்லாம் நிகழும் என்று கூறுகிறது: (1) ஸம்ʼஹிதைகபதே³ நித்யா – சில எழுத்துக்களைச் சேர்த்து இடைவெளியின்றி ஒரே வார்த்தையாக உச்சரிக்கையில், உதா: கஸ்²சித் (कश्चित्) (2) நித்யா தா⁴தூபஸர்க³யோ​ – வினைச்சொல்லுக்கு (தாது) முன்னால் உபசர்க்கம் (ஸம், வி, ப்ர, பர போன்ற முன்னொட்டு சொல்) வரும்போது; உதா: ப்ரத்யாக³ச்சா²மி (प्रत्यागच्छामि) (3) நித்யா ஸமாஸே – இரு சொற்கள் சேரும் போது; வாக்யே து ஸா விவக்ஷாமபேக்ஷதே – இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஸந்தி⁴ சேர்க்கலாம் என்று கூறுகிறது.

ஸந்தி⁴ விதிகளை சம்ஸ்க்ருத இலக்கணத்தில் ஐந்து விதமாக பிரித்துள்ளனர். பஞ்ச ஸந்தி⁴ ப்ரகரணம் என்று இலக்கண நூல்களில் அழைக்கப் படுகிறது. அவையாவன:

  1. ஸ்வர ஸந்தி⁴ (அச் ஸந்தி⁴)
  2. வ்யஞ்ஜன ஸந்தி⁴ (ஹல் ஸந்தி⁴)
  3. ப்ரக்ருʼதிபா⁴வ ஸந்தி⁴
  4. விஸர்க³ ஸந்தி⁴
  5. ஸ்வாதி³ ஸந்தி⁴

லகு சித்தாந்த கௌமுதியில் இதில் மூன்று ஸந்தி⁴கள் மட்டுமே கற்றுத் தரப் படுகின்றன. அவை அச் ஸந்தி⁴, ஹல் ஸந்தி⁴, மற்றும் விஸர்க³ ஸந்தி⁴ ஆகியவை. அச் என்பது ஒரு பிரத்யாஹாரம் (அ, இ, உ, ரு, லு, ஏ, ஓ, ஐ, ஔ) ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே போல ஹல் என்பது மெய் எழுத்துக்கள் அனைத்தையும் குறிக்கும் பிரத்யாஹாரம். இவ்வாறு உயிர் எழுத்துக்களின் சேர்க்கை அச் ஸந்தி⁴யிலும், மெய் எழுத்துக்கள் சேருவதை ஹல் ஸந்தி⁴ பிரகரணத்திலும் விளக்கப் படுகிறது.

அச் ஸந்தி⁴ ப்ரகரணம் என்று பெயர் இருந்தாலும் இந்த அத்தியாயத்திலும் மேலும் சில ஸம்ஜ்ஞா சூத்திரங்களை லகு சித்தாந்த கௌமுதி ஆசிரியர் தருகிறார்.

2 Comments அச் ஸந்தி⁴ ப்ரகரணம் – முன்னுரை

  1. vasanthasyamalam

    என் சந்தேஹங்களுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை? தெரிந்து கொள்ளலாமா?

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)