லகு சித்தாந்த கௌமுதி

॥ श्रीगणेशाय नमः ॥
नत्वा सरस्वतीं देवीं शुद्धां गुण्यां करोम्यहम्।
पाणिनीयप्रवेशाय लघुसिद्धान्तकौमुदीम्॥

சரஸ்வதி தேவியை வணங்கி தெளிந்த மனதுடன்
பாணிநீய வியாகரனத்தில் நுழைய எளிதான
லகுசித்தாந்த கௌமுதி எனும் இலக்கண நூலை படைக்கிறேன்

பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. சித்தாந்த கௌமுதி குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

நூலின் அமைப்பு:
இந்த நூலில் பாணினியின் அஷ்டாத்யாயி இலக்கண நூலில் இருந்து மிக முக்கியமான சுமார் ஆயிரத்து முன்னூறு சூத்திரங்களை மட்டும் எடுத்து அவற்றை பொருத்தமான பெயருடன் பிரகரணங்களாக பிரித்து, அவை ஒவ்வொன்றிலும் பாணினியின் சூத்திரத்தை கொடுத்து அதற்கு ரத்தின சுருக்கமான உரையுடன் (வ்ருத்தி) அமைத்திருக்கிறார் ஆசிரியர். எளிய அற்புதமான இந்நூலில் இருந்து உதாரணங்களுடன் தமிழில் தருகிறோம்.