சிலப்பதிகாரச் செல்வி! அற்புதங்களின் தாய்! கற்பிற்கரசி! தமிழர்களின் தனிப்பெரும் அடையாளம், பெருமை, பேரருளின் அம்மை, கண்ணகி வரலாறு பேசும் நவரத்ன மாலா புதிதாக இயற்றியது.. கண்ணகிக்கு ஈழத்தின் பல பாகங்களிலும் அநேக ஊர்களில் எல்லாம் பழங்காலம் தொட்டு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் வற்றாப்பளை போன்றவை உலகப்புகழ் பெற்றவை. இவ்வாறு கண்ணகி ஆலயங்கள் நிமிர்ந்து நின்ற போதும், இன்றைக்கு ஆகம வழிப்பட்ட ஆராதனைகளும் உற்சங்களும் கண்ணகா பரமேஸ்வரிக்கு முன்னெடுக்கப்படும் போதும், சம்ஸ்கிருத வழி துதிப்பாக்கள் இந்த அன்னைக்கு இன்று வரை இல்லாதே இருக்கின்றன (அண்மையில் வெளியான அஷ்டோத்திரசதம் தவிர..) இந்நிலையில் இந் நவரத்னஸ்துதி அம்பிகை திருவடிகளில் சமர்ப்பிக்கின்றோம்..
மேலும் படிக்கPost Category → கவிதைகள்
காதல், காற்று, கவிதை…
கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…
மேலும் படிக்கஅண்ணா ஹசாரே துதி
அண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்!
மேலும் படிக்கபோஜராஜன் சபையில்…
போஜராஜன் தன் தலைநகரான தாரா நகரை கலைகளின் சிகரமாகவே வைத்திருந்தான். அவனது சபையில் காளிதாசன், பாணன், வரருசி, தண்டி என்று சம்ஸ்க்ருத கவிஞர்கள் பலரும் வீற்றிருந்தார்கள். அரசர்களை அண்டி பரிசு பெற்று செல்வது பாணர்கள் – கவிஞர்கள் வழக்கம். இதனால் போஜ மகாராஜனின் அவையில் தினம் ஒரு சுவையான சம்பவம் நிகழும்.
மேலும் படிக்கவீரமரணம் எய்தியவனின் வீட்டில் ஒரு காட்சி…
ஆங்கிலக் கவிஞர் லார்ட் டென்னிசன்-னின் பிரபலமான கவிதை இது. போருக்குச் சென்று வீர மரணம் எய்திய வீரனின் சடலம் அவன் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டு கிடத்தப் படுகிறது. அவனது மனைவி தன் அன்பான கணவனின் சடலத்தைக் கண்டு சிறிதும் அசையாமல் பேசாமல் அழாமல் இருக்கிறாள். மனதை உருக்கும் இந்த சூழ்நிலையை விவரிக்கும் இந்த ஆங்கிலக் கவிதையை சமஸ்க்ருதத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க