செய்திகள்

சமஸ்க்ருதம் குறித்த புதிய தகவல்கள்

சென்னையில் “ஸம்ஸ்க்ருத உத்ஸவம் – 2012″

sb-logo

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு நிறைவு நினைவாகவும், இந்த வருட ஸம்ஸ்க்ருத தினத்தைக் கொண்டாடவும், டி.ஜி வைஷ்ணவ கல்லூரி ஸம்ஸ்க்ருதத்துறையும் ஸம்ஸ்க்ருத பாரதியும் இணைந்து 3 நாள் ஸம்ஸ்க்ருத உத்ஸவத்தை நடத்தவிருக்கிறது. இந்நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் விவரங்கள்….

லகு சித்தாந்த கௌமுதி (தமிழில்)

video_t

மிகவும் எளிமையாக சம்ஸ்க்ருத இலக்கணம் கற்க, அறிஞர்கள் அஆசிரியர்களால் பரிந்துரைக்கப்படும் நூல்களுள் முக்கியமானது இந்த லகுசித்தாந்த கௌமுதி (அல்லது லகு கௌமுதி) என்னும் நூல். பாணிநீய வியாகரணத்தை – வடமொழி இலக்கணத்தை – எளிமையாகக் கற்க சித்தாந்த கௌமுதி என்ற நூல் பட்டோஜி தீக்ஷிதரால் இயற்றப் பட்டது. அதுவும் கடினமாக இருக்கவே, அதிலும் எளிமைப் படுத்தி வரதராஜாசார்யரால் இயற்றப் பட்ட நூல் – லகு சித்தாந்த கௌமுதி. லகு சித்தாந்த கௌமுதியை எளிய தமிழில் உதாரணங்களுடன் ஆடியோ வீடியோ பதிவுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணன் சுவாமிஜி அவர்கள் வெளியிட்டுள்ளார்.

2010 Commonwealth baton receiving ceremony: Sanskrit in London

2010 காமன்வெல்த் ஜோதி இலண்டன் நகரை அடைந்த போது, அங்கே சம்ஸ்க்ருதத்தில் வாழ்த்துப் பாடப்பட்டது. இங்கிலாந்தின் பள்ளிக்குழந்தைகள் வேத கோஷம் எழுப்புவது இந்த வீடியோவில் அருமையாக பதிவு செய்யப் பட்டுள்ளது.

சம்ஸ்க்ருத சுலோகங்களில் சந்தங்களின் வகைகள்

video_t

வெங்கடேச சுப்ரபாதம் கேட்டிருப்பீர்கள். அதில் சுப்ரபாதம், ஸ்தோத்திரம்,
மங்களாசாசனம் என்று ஒவ்வரு பகுதியும் ஒவ்வொரு சந்தத்தில் இருக்கும்.
இது போல முப்பத்தி இரண்டு சந்தங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும்
எப்படி உச்சரிக்க வேண்டும் என்று அழகாக இங்கே ஒருவர பதிவு
செய்திருக்கிறார்.

காதல், காற்று, கவிதை…

hill-rain

கோடையில் வெந்து கொண்டிருக்கும் பிரதேசங்களைக் குளிர்விக்கிறது இந்தப் பருவக் காற்று. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலம் இந்திய தீபகற்பத்தின் நெஞ்சை நிறைக்கும் சுவாசம். தென்னாட்டின் மலைமுகடுகளை மலயகிரி என்றும் அதிலிருந்து வீசும் காற்றை மலய மாருதம் என்றும் சம்ஸ்கிருத நூல்கள் கொண்டாடுகின்றன. வால்மீகி, காளிதாசன் தொடங்கி அனேகமாக எல்லா சம்ஸ்கிருத கவிஞர்களும் பருவக் காற்றின் தண்மையையும், மென்மையையும் திகட்டத் திகட்ட வர்ணித்திருக்கின்றனர். பருவக் காற்று மண்ணின் நறுமணத்தையும், மழைமேகத்தையும் மட்டுமல்ல, காதலையும் சேர்த்து சுமந்து வரும் போலும்! சிருங்கார ரசம் ததும்பும் இந்தப் பாடல்கள்…

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

question_mark

அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்னால் ஓர் இந்தியக் கல்விமான் என்பவன் தனது தாய்மொழி, அதற்கு இணையாக சம்ஸ்க்ருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவனாக இருந்தான். இந்த இரு மொழிப் புலமை எந்தத் திணிப்பும் இல்லாமலேயே இந்திய மொழிகளுக்கு உரிய அறிஞர்களின் இயல்பாய் வளர்ந்திருந்தது. அதிலும் தமிழர்கள் சம்ஸ்க்ருத மொழியில் பெரும் புலமை பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டியிருக்கிறார்கள் [..]