செய்திகள்

சமஸ்க்ருதம் குறித்த புதிய தகவல்கள்

‘கல்கி’ இதழில் சங்கதம் குறித்து…

kalki-review

வடமொழியான சம்ஸ்க்ருதம் வழக்கொழிந்து விட்டது என்று பேசப்படும் வேளையில், சங்கதம் டாட் காம் வலைத்தளம் அம்மொழியை எளிமைப் படுத்தித் தருகிறது. சம்ஸ்க்ருதப் பாடங்கள் எளிய தமிழில் உள்ளன. அத்தோடு சம்ஸ்க்ருத இலக்கிய நூல்கள், கட்டுரைகள், கதைகள் ஆகியவை தமிழ் வாசகர்களுக்காக வழங்கப் பட்டுள்ளன. அற்புதமான முயற்சி.

அநேகமாக தெரிந்தது தான்!

one

ஒரு குழுவில் எல்லாரும் ஒரு முடிவுக்கு ஒப்புக் கொண்டால் ஏகோபித்து ஏற்றுக் கொள்ளப் பட்டது, ஏகமனதாக ஏற்கப் பட்டது என்று சொல்கிறோம். இங்கே ஒன்று என்ற பொருளில் வரும் “ஏகம்” என்பதுடன் மற்ற சொற்களை சேர்த்துக் கொள்வது சாதாரணமாக நிகழ்கிறது. ஏகதேசமாக முடிவெடுத்தார் என்பது யாரையும் கேட்காமல் தானே தனியாக முடிவெடுத்தார் என்று அர்த்தம் – இதிலும் ஏகம் இருக்கிறது.
இதில் ஒரு விஷயம், சம்ஸ்க்ருதத்தில் எ, ஏ என்று இரண்டு எழுத்து கிடையாது – ए என்கிற ஒற்றை எழுத்தே எ மற்றும் ஏ-க்கு பொதுவாக உச்சரிக்கப் படுகிறது. பெரும்பாலான வட இந்திய மொழிகளும் இவ்வாறே எழுத்துக்களை கொண்டுள்ளன. அதனாலேயே வடநாட்டவர் பலரும் Pencil/Pen போன்றவற்றை பேன்சில், பேன் என்று சொல்லிக் கேட்கிறோம்.

வரலாற்றில் மறைந்த மகான்கள் – கவீந்திராசார்யர்

dhara-shikoh

கவீந்திராசாரியார் கோதாவரி நதி பாய்ந்த பிரதேசத்தில் பிறந்தவர். பின்னர் நிஜாம் ஷாஹியின் பிரதேசங்கள் ஷாஜகான் மன்னருக்கு பணிந்து அவர் ஆட்சியுடன் இணைக்கப் பட்ட காலத்தில் கவீந்திராசாரியார் தில்லிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம். எதனால் இடம் பெயர நேர்ந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. முகலாய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை கண்டு, அதை வெளிப்படையாக தைரியமாக கவீந்திராசாரியார் போராடி இருக்கிறார். மக்களை இணைத்து தில்லி அரசவைக்கு சென்று தாங்கள் படும் இன்னல்களை மிக அழகாக எடுத்துரைத்து வாதாடியிருக்கிறார். இவர் எடுத்துரைத்த விதத்தில் ஷாஜகான் – தாரா ஷிகோஹ் உள்ளிட்ட மன்னர் பரம்பரையினர் கண்களிலேயே கண்ணீர் பெருகியது என்று செவிவழி செய்திகள் கூறுகின்றன. அது வரை எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசவை பிரமுகர்களுக்கு இது பெரும் வியப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இதனால் புனித யாத்திரை வரி விலக்கப் பட்டது.

ப்ரத்யாஹாரம் என்றால் என்ன?

nataraja

சம்ஸ்க்ருத வியாகரணத்தில் ப்ரத்யாஹாரம் என்பவை மிகவும் அடிப்படையும் முக்கியமானதும் கூட. எழுத்துக்களை தொகுத்து அவற்றை குறிப்பாக – ஸமிஜ்ஞை ஆக கொண்டு இலக்கண விதிகள் விதிக்கப் படுகின்றன. பாணினி இறைவன் நடராஜனாக ஆடிய தாண்டவத்தின் அவஸான (முடிகிற) காலத்தில் உண்டான 14 சப்தங்களையும் கொண்டு இந்த ப்ரத்யாஹார ஸமிஜ்ஞைகள் உருவானதாக கூறுவது மரபு.

சிலப்பதிகாரத்தில் வடமொழி பஞ்சதந்திர கதைகள்

Kathasaritsagara_24512

கீரிப்பிள்ளை கதை ஒரு இன்றியமையாத நீதியை, இளங்கோவடிகள் கோவலனுக்கு மாடலன் கூறியதாக அமைத்துள்ளார். அதில், ஒரு பெண், கீரிப்பிள்ளையைக் கொன்ற கதை வருகிறது. இந்த கதை, “பஞ்ச தந்திரம்’ எனும், சமஸ்கிருத நூலில் உள்ளது. அது, முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கதையை மேலும் விரித்து இளங்கோவடிகள் கூறியுள்ளார். அதை, “வடமொழி வாசகம் செய்த நல்லேடு கடன் அறி மாந்தர் கைநீ கொடுக்க’ என்று குறிக்கிறார். வட மொழி வாசகம் என்பது பற்றி, அரும்பத உரை ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் தமது உரையில் கூறும்போது, இது ஒரு “கிரந்தம்’ என்று குறித்து, அதை, “அபரீட்ச ந கர்த்தவ்யம், கர்த்தவ்யம் சுபரீட்சிதம் பர்ஷா பவதி சந்தாபம் பிராம்மணி நகுலம் யதா’ என, சமஸ்கிருத மொழியில் அப்படியே கொடுத்திருக்கின்றனர். இதை அடியார்க்கு நல்லார், “கவி’ என்றும் கூறுகிறார்.

வேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை

Palm manuscript

ஆகமங்கள் வழிபாட்டை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி சொல்லித்தருபவை. வேதாந்த உண்மைகளை, வடமொழி பயிற்சி இல்லாத தமிழர்கள், அறிந்து கொள்ள வேண்டும், என்ற சீரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திருமடம், கோவிலூர் மடம். “குரு’ என்பவர் பழுக்காத வாழைப்பழத்தாரில் உள்ள, ஒரு பழுத்த பழத்தோடு ஒப்பிடப்படுகிறார். இந்த பழுத்த பழத்தின் அண்மையே, ஏனைய காய்களை பழுக்க வைத்துவிடும்.கற்றோருக்கு கண்கள் இரண்டோடு, கல்வியும் சேர்த்து மூன்று விழியாகிறது. ஈகை புரிவோருக்கு நகக்கண்கள் சேர்த்து, ஏழு கண்கள் ஆகின்றது. ஞானிகள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள். ஆதலால் அவர்களுக்கு கண்கள் எண்ணிலடங்காதவை.

சமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீடியா’

Palmleaf

சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளில் உள்ள அனைத்துக்கும் விளக்கம், அவை எங்குள்ளன, எத்தனை பேர் பொழிப்புரை எழுதியுள்ளனர் போன்ற தகவல்களைக் கொண்ட, சென்னை பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத, “என்சைக்ளோபீடியா’ உலகளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுவரை வெளிவராத சமஸ்கிருத ஓலைச் சுவடிகளை அகர வரிசையில் தொகுத்து, அரும்பொருள் சொல்லகராதியான, “என்சைக்ளோபீடியா’வை, உருவாக்கியுள்ளனர். 40 தொகுப்புகள் வெளியிட திட்டமிட்டு, 25 தொகுப்புகளை வெளியிட் டுள்ளனர். மேலும், 15 தொகுப்புகளை வெளியிடும் பணியை, பல்கலையின் சமஸ்கிருத துறை மேற்கொண்டுள்ளது.

ராமாயணம் படிக்கலாம் வாங்க…

rama_calendar6

வால்மீகி ராமாயணத்தை ஒவ்வொரு சுலோகமாகப் படிக்கவேண்டும் என்று ஆசையா? நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் என்று இந்த எண்ணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறதா? அல்லது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பமா? சம்ஸ்க்ருதம் தெரியாமல் எப்படி படிப்பது என்று தெரியவில்லையா?

இந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்

cover

பழமையும் இனிமையும் வாய்ந்த சம்ஸ்க்ருத மொழி நூல்கள், இலக்கியங்களைப் படிக்க நம்மில் பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் ‘தேவ மொழி’ என்று கூறி பலருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப் பட்டதால் அதற்கு சாத்தியமில்லாமல் போய்விட்டது. ஆனால் கணினி யுகத்தில் எல்லாமே சாத்தியம். www.sangatham.com என்ற இணைய தளத்துக்கு நீங்கள் சென்றால் போதும், எளிய தமிழில் பகவத் கீதை, லகு சித்தாந்த கௌமுதி உள்ளிட்ட சம்ஸ்க்ருத நூல்கள், சம்ஸ்க்ருத இலக்கணம், கட்டுரைகள், சம்ஸ்க்ருதத்தைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் டிப்ஸ் ஆகியவை கொட்டிக் கிடக்கின்றன. எல்லாப் பதிவுகளும் தூய தமிழில் இருப்பது சிறப்பு. சம்ஸ்க்ருத மொழி பயன்பாடு குறித்த சர்ச்சைக்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. காளிதாசன் சிலை குறித்த தகவல் ரொம்ப புதுசு.

சென்னையில் “ஸம்ஸ்க்ருத உத்ஸவம் – 2012″

sb-logo

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டு நிறைவு நினைவாகவும், இந்த வருட ஸம்ஸ்க்ருத தினத்தைக் கொண்டாடவும், டி.ஜி வைஷ்ணவ கல்லூரி ஸம்ஸ்க்ருதத்துறையும் ஸம்ஸ்க்ருத பாரதியும் இணைந்து 3 நாள் ஸம்ஸ்க்ருத உத்ஸவத்தை நடத்தவிருக்கிறது. இந்நிகழ்ச்சி குறித்த அழைப்பிதழ் விவரங்கள்….