தமிழ்நாட்டு மன்னர்களான சோழ, பாண்டிய, சேர மன்னர்கள் சம்ஸ்க்ருத மொழியை பெரிதும் போற்றி வளர்த்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்களில் பெரும்பாலானவர் கல்வி செல்வம் நிறைந்தவர்கள், கவிஞர்களைப் போற்றியவர்கள். தமிழ் கவிஞர்களை மட்டுமல்ல, சம்ஸ்க்ருத கவிஞர்களையும் தான்! மகாபாரதம் முதல் காளிதாசனின் காவியங்கள் வரை பாண்டியர்கள் இடம்பெற்றுள்ளனர். பாண்டியர்கள் சமஸ்க்ருதத்தை வெறுத்ததில்லை. தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழுக்கு தொண்டு செய்த பாண்டியர்களே சம்ஸ்க்ருதத்தையும் போற்றி வந்துள்ளனர். தமிழ் தேசத்தில் வடமொழி எவ்வாறு இருந்தது என்பது பலர் தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே தம் மனச்சாய்வுக்கு ஏற்ப, சம்ஸ்க்ருதம் ஒரு வட இந்திய மொழி என்பன போன்ற கருத்துக்களை நம்புகிறார்கள்.
மேலும் படிக்கPost Category → வரலாறு
வியாகரண மண்டபம்
அதாவது ஈச்வரன் கையிலிருந்து உண்டான சப்தத்தை வைத்துக் கொண்டு பாணினி வியாகரணம் பண்ணினார் என்னும் கருத்து இதில் குறிக்கப்படுகிறது. “கையாட்டியதால் வியாகரண ஸூத்திரங்கள் ஏற்பட்டன. காலையாட்டியதால் அதற்கு பாஷ்யத்தை உண்டு பண்ணினாய்” என்று ச்லோகம் சொல்லுகிறது. மஹாபாஷ்யத்தைச் செய்த பதஞ்ஜலி ஆதிசேஷாவதாரம். ஆதிசேஷன் பரமேச்வரன் காலில் பாதரஸமாக இருக்கிறார்! இதை நினைத்துத்தான் காலாட்டி பாஷ்யத்தை உண்டு பண்ணினார் என்று கவி சொன்னது! “சப்தமும் அர்த்தமும் உன்னாலேயே ஏற்பட்டது”என்று அவர் முடிக்கிறார். வியாகரணத்திற்கு இப்படிப் பல காரணங்களால் பரமேச்வரன் மூல புருஷனாய் இருப்பதால், அவருடைய கோயிலில் வ்யாகரண தான மண்டபங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன என்று தெரிந்து கொண்டேன்
மேலும் படிக்கசம்ஸ்க்ருதம் தெரியாத மன்னன்
சம்ஸ்க்ருத மொழியின் அழகினை உணர்ந்து இனி தன் அரசவையில் அனைவரும் சம்ஸ்க்ருதத்தில் தான் பேச வேண்டும் என்று உத்தரவிட்டான். தனக்கே சம்ஸ்க்ருதம் சரியாகத் தெரியாத போதும் இப்படி ஒரு உத்தரவு போட்டு விட்டான்….. சிறு குளத்தில் அரசன் நீராடிக் கொண்டிருந்த போது அங்கே நாகனிகை வர நேர்ந்தது. அவளைக் கண்டு, கொஞ்சம் நீரை அள்ளி அவள் மீது வீசினான் மன்னன்….
மேலும் படிக்கசோழர் காலத்திய சம்ஸ்க்ருத கவிதைகள்
குழந்தை பிறப்பதை உதிக்கும் சூரியனின் இளம் சூட்டுடன் ஒப்பிடுவது கவிஞரின் கற்பனை வளத்தின் உச்சம். வெற்றுச் சொற்களால் அரசனை புகழ்ந்து விட்டுப் போகாமல் உள்ளபடியே தம் கவித்திறனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து படிக்கும் போதும் தன் உணர்ச்சியை நமக்குள் பதிந்து விடுகிறார் இந்த பெயர் தெரியாத கவிஞர். இக்கவிதையை படிக்கும் போதே கவிஞரின் உள்ளத்தில் குழந்தைக்காக எழும் வாஞ்சை உணர்வுகளை உணர முடியும்.
மேலும் படிக்கசமஸ்க்ருதத்தில் பெண் கவிஞர்கள்!
“தாழையே! ரம்பம் போலிருக்கின்றன உன் முள்ளிலைகள்; உன்னிடம் தேன் என்பது மருந்துக்கும் கிடையாது. உன் பூவிலுள்ள பொடிகளோ, காற்றடித்தால் கண்ணை அவித்துவிடும். ஆனாலும் உன்னை வண்டு அண்டுகிறதே! ஏன்? உன் பூவின் மணம் என்ற ஒரு குணத்தால், உன் குறைகளெல்லாம் மறைந்து போகின்றன!”
மேலும் படிக்க