ஸ்ரீஹர்ஷர் எனும் மகா கவிஞனின் கதை

வடமொழியில் தலைசிறந்த ஐம்பெருங் காவியங்களில் ஒன்று நைஷதம். மகாபாரதத்தில் வரும் நிஷத நாட்டு மன்னன் நளன் மற்றும் தமயந்தி கதையை ஒரு மகா காவியமாக ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் இயற்றி இருக்கிறார். “நைஷதம் வித்வத் ஔஷதம்” என்றொரு பழமொழி உண்டு. இருபத்தி இரண்டு அத்தியாயங்களுடன் கூடிய, பல முடிச்சுகள் நிறைந்த கடினமான காவியம் இது. இது தவிரவும் ஸ்ரீ ஹர்ஷர் அத்வைத தத்துவ சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி உள்ளார். இந்த மகா கவிஞனை ஜயந்த சந்திரன் என்ற மாமன்னன் ஆதரவளித்து தன் அவைப் புலவராக கொண்டான்.

மேலும் படிக்க

கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்

ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.

மேலும் படிக்க

வால்மீகி இராமாயணத்தின் உரைவளம்

கவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன்! சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார்?! ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்!! कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् | आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् || वाल्मीकेर्मुनिसिंहस्य… மேலும் படிக்க

சம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்

வால்மீகி முனிவர் ஆதிகாவியமாக இராமகாதையை இயற்றிச் சென்றார். அதற்கு பிறகு பல கவிஞர்களும் பல காலகட்டங்களில் இக்காவியத்தை பலவிதமாக எழுதியிருக்கிறார்கள். வடமொழியில் மட்டுமே இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காவியங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. ஒவ்வொரு கவிஞனும் தம் காலத்திற்கேற்ற செய்திகளைச் சேர்த்து, தன் திறமைக்கேற்ப மெருகூட்டி இந்த மகத்தான காதையை மீண்டும் மீண்டும் புதுமையாக்கித் தந்திருக்கிறார்கள். இவற்றுள் போஜ மகாராஜனின் சம்பு ராமாயணம் சற்று வித்தியாசமானது. பொதுவாக கத்யமாக உரைநடையிலோ, பத்யமாக கவிதை வடிவிலோ தான் காவியங்கள்… மேலும் படிக்க

காலத்தை வென்ற கவிஞன் காளிதாசன்!

இளம்பிறை போல் வளைந்துள்ளன மொட்டவிழாத சிவந்த பலாச மலர்கள் வசந்தத்துடன் கூடிக் களித்த வனமகள் மேனி மீது நகக் கீறல்களென. தன் இணை பருகிய மலர்க்கலத்தில் எஞ்சிய தேனை சுவைக்கிறது வண்டு. தீண்டலின் சுகத்தில் கண்மூடிய பெண்மானைக் கொம்புகளால் வருடுகிறது ஆண்மான். கமல மலரின் நறுமணம் ஊறும் நீரைக் களிற்றுக்குத் துதிக்கையால் ஊட்டுகிறது பிடி தாமரைக் குருத்தை நீட்டித் தன்னவளை உபசரிக்கிறது சக்ரவாகம். பெருமரங்களின் திரண்ட கிளைகளைத் தழுவுகின்றன செறிந்த மலர்முலைக் கொத்துக்களும் அசையும் தளிர் இதழ்களும்… மேலும் படிக்க

ஆதிகவியின் முதல் கவிதை

கவிஞன் என்பவன் ஆன்மாவின் வழியாகவோ, உணர்வுகளின் வழியாகவோ காணும் காட்சியுடன் ஒன்றிவிடுகிறான். போர்க்களத்தில் முன்னால் சீறிப்பாயும் வீரனும் அவன் தான்; சடலங்களுக்கு நடுவில் கண்ணீர் விடும் தாயும் அவன் தான்; புயலில் அலைவுறும் மரமும் அவன்தான்; சூரியக் கதிர்கள் வெதுவெதுப்பாக நுழையும் பூவிதழ்களும் அவன்தான்; காணும் உலகத்துடன் ஒன்றி அதுவாகவே ஆகி விடுவதால் தான், அவனுக்கு அவை புலப்படுகின்றன. பகுத்துப் பார்க்கும் அறிவின் கண்ணால் காணாமல், ஆன்மாவின் வழியாக அறிவதால்தான் அவனால் அவற்றை சொற்களில் வெளிப்படுத்த முடிகிறது…. மேலும் படிக்க

ரகுவம்சம் – சில பாடல்கள்

ரகுவம்சம் சம்ஸ்க்ருத மகாகவி காளிதாசனின் தலைசிறந்த காவியங்களுள் முக்கியமானது. இது கேட்டு ரசிக்கத் தக்க வகையில் உள்ள ஸ்ரவ்ய காவ்ய வகுப்பைச் சேர்ந்தது. (சாகுந்தலம் போன்ற நாடகங்கள் த்ருச்ய காவியம் – பார்த்து ரசிக்கத் தக்கவை). அதோடு சம்ஸ்க்ருதத்தில் ஐம்பெருங்காவியங்களில் பஞ்ச மகா காவியங்கள் ஒன்று ரகுவம்சம் [..]

மேலும் படிக்க