தத்துவ விளக்கங்களைக் தமிழிலும் வடமொழியிலும் கலந்தளித்து களித்த சமயம் வைணவம். திராவிட வேதம் என்று தமிழ் நூல்களை போற்றுகிறது அது. தமிழ் – சம்ஸ்க்ருதம் இரண்டும் இரு கண்களாகப் போற்றி உபய வேதாந்தம் என்றே பெயர்பெற்றது தமிழ்நாட்டு வைணவம். உபய என்றால் இரண்டு என்று அர்த்தம். அத்தகைய சமயத்தின் கண்ணெனப் போற்றப் படுவது ஆண்டாளின் திருப்பாவை என்றால் மிகையில்லை. பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளே பக்தர்களால் மிகவும் உகந்து கொண்டாடப் படுகிறாள். ஆண்டாள் இயற்றிய திருப்பாவைக்கு ஈடான வடமொழி நூல் என்று சொல்லக் கூடியவை இல்லை என்றே சொல்லி விடலாம்.
இந்நிலையில் திருப்பாவையை எளிய, படித்து மகிழக் கூடிய அளவில் வடமொழியில் சீருடன் மொழிபெயர்த்து ஸ்ரீரங்கம் ராமானுஜ சித்தாந்த வித்யா பீடம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளார்கள். ர.பரதன் என்பார் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ளார். ஆண்டாள் வடித்த தெய்வத் தமிழ் திருப்பாவையில் வலிமையுள்ள சொற்கள் பல உண்டு. தினமும் திருப்பாவை சொல்லி வருகிறவர்களுக்கு தன்னையறியாமல் மனதில் இருந்து இந்த வலிவுள்ள சொற்கள் துள்ளிக் கொண்டு இருக்கும். தெய்வ அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டு இருக்கும். அத்தகைய சொற்கள் இந்த வடமொழி மொழிபெயர்ப்பிலும் ஒளியுடன் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. சம்ஸ்க்ருதத்தில் ஆர்வம கொண்டவர்களுக்கு இப்புத்தகம் ஒரு பக்தி பூர்வமான வாசிப்பு இன்பம் அளிக்கும்.
உதாரணமாக சில பாடல்கள்:
மார்கழித் திங்கள்…
மார்க³ஶீர்ஷாக்²யமாஸோ(அ)யம்ʼ பௌர்ணமாஸீதி³னம்ʼ ஶுப⁴ம்ʼ |
ஆயாத ஸ்னாதுமிச்ச²ந்த்யோ! ஹே விலக்ஷணபூ⁴ஷணா: ! ||
ருத்³த⁴ஶ்ரீகோ³குலவாஸா:! ஶ்ரிமத்யோ! கோ³பபா³லிகா:! |
தீக்ஷணம்ʼ ஶக்த்யாயுத⁴ம்ʼ த்⁴ருʼத்வா து³ஷ்டனாஶோக்³ரகர்மணாம் ||
விதா⁴துர்னந்த³கோ³பஸ்ய குமாரோ வினயான்வித: |
நந்த³பத்னீ யஶோதா³ யா ஸௌந்த³ர்யப⁴ரிதேக்ஷணா ||
தஸ்யாஸ்து ஸிம்ʼஹபோதோ வ க்ருʼஷ்ணோ க³ம்பீ⁴ரசேஷ்டித: ||
ஶ்யாமலாங்க³: ஸ ரக்தாக்ஷ: ஸூர்யேந்து³ஸத்³ருʼஶானன: |
நாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி |
அதோ லக்³னா வ்ரதே ஸ்னாம ஶ்லாகே⁴ரன் யேன பூ⁴ப⁴வா: ||
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் |
मार्गशीर्षाख्यमासोऽयं पौर्णमासीदिनं शुभं | |
அன்றிவ்வுலகம் அளந்தாய்…
பூர்வமேதஜ்ஜக³த்க்ராந்த! பாதா³ப்⁴யாம்ʼ தவ மங்க³லம் |
க³த்வா த³க்ஷிணலங்காம்ʼ, தாம்ʼ ஹந்த:! ஸௌ²ர்யாய மங்க³லம் ||
ஸ²கடம்ʼ பத்ப்ரஹாரேண ப⁴ங்க்த:! கீர்த்யை ஸுமங்க³லம் |
வத்ஸம்ʼ த³ண்ட³வதா³தா³ய க்ஷேப்த:! பத்³ப்⁴யாம்ʼ ஸுமங்க³லம் ||
ச²த்ரவச்சை²லமுத்³த⁴ர்தர்கு³ணப்³ருʼந்தா³ய மங்க³லம் |
ஸ²த்ருன் விஜித்ய ஹந்த்ரே தே ஹஸ்தே ஸ²க்த்யை ஸுமங்க³லம் ||
இத்த²ம்ʼ தவ சரித்ராணி ஸ்துத்வா படஹலப்³த⁴யே |
வயமத்³ய ஸமாயாதா அஸ்மாஸு த்வம்ʼ த³யஸ்வ போ⁴: ||
அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி |
पूर्वमेतज्जगत्क्रान्त! पादाभ्यां तव मङ्गलम् | |
சிற்றம் சிறு காலே…
ப்ரத்யூஷஸ்யுபக³ம்ய த்வாம்ʼ ஸேவித்வா, ஸ்வர்ணபா⁴ஸ்வதீ |
தவ பாதா³ம்பு⁴ஜே ஸ்துத்வா ப்ரார்த்²யமானம்ʼ ப²லம்ʼ ஸ்²ருʼணு ||
த்வம்ʼ நனு வினியுஜ்யாஸ்மான் அந்தரங்கீ³யவ்ருʼத்திஷு |
கைங்கர்யப்ரதிஸம்ப³ந்தி⁴ ப⁴வ கோ³பகுலோத்³ப⁴வ! ||
வயம்ʼ பே⁴ரீமிமாம்ʼ லப்³து⁴ம்ʼ கோ³விந்தா³த்³யாத்ர நாக³தா: |
அவதாரேஷ்வஜஸ்ரம்ʼ த்வத்ஸம்ப³ந்தி⁴ன்யோ ப⁴வாம ஹி ||
தவைகஸே²ஷபூ⁴தாஸ்²ச த்வத்ப்ரீத்யேகப்ரயோஜனா: |
ப⁴வேமைதத்³விருத்³தா⁴ன்ன: காமானன்யான் நிவர்தய ||
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்- |
प्रत्यूषस्युपगम्य त्वां सेवित्वा, स्वर्णभास्वती | |
***
பாவைப் பாசுரங்களின் சிறப்பு அதன் பொருள்பொதிந்த வலிமையான வார்த்தைகள் சம்ஸ்க்ருதத்திலும் அருமையாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
உதாரணமாக:
நாராயணோ ஹி பே⁴ரீம்ʼ ந ஆஶ்ரிதாப்⁴யோ ஹி தா³ஸ்யதி (नारायणो हि भेरीं न आश्रिताभ्यो हि दास्यति)
நாராயணனே நமக்கே பறைதருவான்
வாசா தன்னாம ஸங்கீர்த்ய மனஸா சிந்தயேம தம் (वाचा तन्नाम संकीर्त्य मनसा चिन्तयेम तम्)
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க…
மந்தி³ராஹ்வானஶங்க²ஸ்ய ஶ்வேதஸ்ய துமுலத்⁴வனிம் கிம்ʼ ந ஶ்ரௌஷீ…
(मन्दिराह्वानशङ्खस्य श्वेतस्य तुमुलध्वनिम् किं न श्रौषी)
வெள்ளைவிளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
கீசுகீச்சிதி ஸர்வத்ர பா⁴ரத்³வாஜாக்²யபக்ஷிபி⁴: (कीचुकीच्चिति सर्वत्र भारद्वाजाख्यपक्षिभि:)
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து…
இவ்வாறு பல பாசுரங்கள் எளிமையான சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. இப்புத்தகம் கிடைக்கும் இடம்:
ர. பரதன்,
ராமானுஜ சித்தாந்த வித்யாபீடம்
178, கீழ உத்தர வீதி,
ஸ்ரீரங்கம் – 620006.
அத்புதம்.. அத்புதம்..
அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம் -இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
நாம் தமிழர்களே, திரவிடர்களே அல்ல என்று திருமதி ஜெயஷ்ரி அவர்கள் தமது ஆராய்ச்சி கட்டுரையில் சொல்லி உள்ளார்கள், பிறகு திராவிட வேதம் என்று யார் பெயரிட்டார்கள், முனோர்களா, அல்லது தற்கால மக்களா? தயவு செய்து விளக்குங்கள்…………..
செய்யவேண்டியது இதுவல்ல… சங்கத (பிறமொழி) சாத்திரங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தலே தலையாய கடமையாகும். பாரதியும் அதையே வலியுறுத்துகிறார். நம் தமிழ் மொழி நூல்களை பிற மொழிகளுக்கு பெயர்ப்பது அம்மொழியை தாய் மொழியாகக் கொண்டவரின் வேலை.
நன்றி
தாசெ
ஜெய் ஶ்ரீ ஸீதாராம்.
என்னே ஆண்டாளின் பெருமை.
Pingback: எதற்கெடுத்தாலும் பிறாமண சூழ்ச்சியா? – தமிழர்களே இந்தியாவின் பூர்வீகக்குடிகள்