பாரதியார் பாமாலை

புது நெறி காட்டிய புலவன்
— பாரதிதாசன்

பைந்த மிழ்த்தேர்ப் பாகன், அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையயைக் கவிழ்க்கும் கவியரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம்பாட வந்த மறவன், புதிய
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்
என்னென்று சொல்வேன் என்றென்று சொல்வேன்
தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வா றென்பதை எரடுத்துரைக் கின்றேன்.
கடவுளைக் குறிப்பதே கவிதை என்றும்
பிறபொருள் குறித்துப் பேசேல் என்றும்
கடவுளைரக் குறிக்குமக் கவிதைரயும் பொருள்விளங்
கிட எழு துவதும் ஏற்கா தெரன்றும்
பொய்ம்மதம் பிறிதெனப் புளுகுவீர் என்றும்
கொந்தும் தன்சாதிக் குண்டு சட்டிதான்
இந்த உலகமென் றெழுதுக என்றும்
பழமை அனத்தையும் பற்றுக என்றும்
புதுமை அனத்தையும் பதைப்பீர் என்றும்
கொள்ளுமிவ் வுலகம் கூத்தாடி மீசைபோல்
எள்ளத் தனைநிலை இலாத தென்றும்
எழிலுறு பெண்கள்பால் இனிபுறும் போதும்
அழிவுபெண்ணாலென் றறைக என்றும்
கலம்பகம் பார்த்தொரு கலம்ப கத்தையும்
அந்தாதி பார்த்தொர் அந்தாதி தனையும்
மாலைபார்த்தொரு மாலை தன்னையும்
காவியம் பார்த்தொரு காவியந் தன்னையும்
வரைந்து சாற்றுக்கவி திரிந்து பெற்று
விரைந்து தன்பேரை மேலே எழுதி
இருநூறு சுவடி அருமையாய் அச்சிட்
டொருநூற்றாண்டில் ஒன்றிரண்டு பரப்பி
வருகதே புலமை வழக்காறென்றும்
இன்றைய தேவையை எழுதேல் என்றும்
முன்னாள் நிலையிலே முட்டுக என்றும்
வழக்கா றொழிந்ததை வைத்தெழு தித்தான்
பிழைக்கும் நிலைமை பெறலாம் என்றும்
புதுச்சொல் புதுநடை போற்றேல் என்றும்
நந்மிழ்ப் புலவர் நவின்றனர் நாளும்
அந்தப் படியே அவரும் ஒழுகினர்.
தமிழனை உன்மொழி சாறுறெனக் கேட்டால்
தமிழ்மொழி என்று சாற்றவும் அறியா
இருள்நிலை யடைந்திருந் திட்டதின் பத்தமிழ்
செய்யுள் ஏட்டைத் திரும்பியும் பார்த்தல்
செய்யா நிலையைச் சேர்ந்தது தீந்தமிழ்.
விழுந்தார் விழித்தே எழுந்தார் என அவன்
மொழிந்த பாங்கு மொழியக் கேளீர்
“வில்லினை யெடடா – கையில்
வல்லினை எடடா – அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்திசெய் திடடா”
என்று கூறு, இருக்கும் பகையரைப்
பகைத் தெழும்படி பகர லானான்.
“பாருக்குள்ளே நல்ல நாடு – இந்த பாரதநாடு”
என்பது போன்ற எழிலும் உணர்வீம்
இந்நாட்டில் அன்பும் ஏற்றப் பாடினான்.
இந்நாடு மிகவும் தொன்மையானது
என்பதைரப் பாரதி இயம்புதல் கேட்பீர்.
“தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவள்
என்றுணராத இயல்பினளா மெங்கள் தாய்”
மக்கள் கணக்கும் வழங்கும் மொழியம்
மிக்குள பண்பையும் விளக்கு கின்ற
கற்பனைத் திறத்தைக் காணுவீர்
“முப்பது கோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் – அவள்
செப்பும் மொழிபதி னெட்டுரையாள் – எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.”
இந்நாட் டின்தெற் கெல்லை இயம்புவான்:
“நீலத்திரை கடல் ஓரத்திலே – நின்று
நித்தம் தவம்செய் குமரியெல்லை”
கற்பனைக் கிலக்கியம் காட்டிவிட்டான்!
சீதந்திர ஆர்வம்முதிர்ந்திடு மாறு
மக்க ளுக்கவன் வழங்குதல் கேட்பீர்
“இதந்தரு மனையி னீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்
பதம்திரு இரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும்
விதம்தருகோடி இன்றல் விளைத்தெனை யழித்திட்டாலும்
சுதந்திரதேவி நினைனைத்தொழுதிடல் மறக்கி லேனே.”
பாரதி பெரிய உள்ளம் பார்த்திடுவீர்கள்;
“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு”
“விடுதலை விடுதலை விடுதலை”
“மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே” – என்றறைந்தார் அன்றோ?
பன்னீராயிரம் பாடிய கம்பனும் இப்பொழுது மக்கள்பால்
இன்தமிழ் உணர்வை
எமுப்பிய துண்டோ? இல்லவே இல்லை.
“செந்தமிழ் நாட்டைத் தேனாக்கிக் காட்டுவான்.
“செந்தமிழ் நாடென்னும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிரலே” – என்றான்.
சினம் பொங்கும் ஆண்டவன் செவ்விழி தன்னை
முனம் எங்கும் இல்லாத மொழியா லுரைத்தான்.

***

பாரதி தரிசனம்
– ஜடாயு

இனியொரு விதி செய்த
பிரமன்
அதை எந்த நாளும் காக்கச் சொன்ன
திருமால்
ஜகத்தினை அழிக்கப் புறப்பட்ட
ஜடாதரன்
பகைவனுக்கருளும் நன்னெஞ்சம் வேண்டிப் பாடிய
புத்தன்

ஒளிவளரும் தமிழ் வாணி
செம்மைத் தொழில் புரிந்தசெல்வத் திருமகள்
காலனைச் சிறு புல்லென மதித்துக்
காலால் மிதிக்கத் துடித்த
காளி

பெண்மை வாழ்கவென்று கூத்திட்ட
பெருமகன்
ஆதலினால் காதல் செய்வீர் என்று
அறைகூவி அழைத்த
அன்புத்தூதுவன்
சாதிகள் இல்லையடி பாப்பா என்று
சத்தியம் செய்த
சமத்துவத் தந்தை

வேடிக்கை மனிதரைப் போலே வீழ விரும்பாத
வேதாந்தி
நிலைகெட்ட மனிதரை நினைத்து நெஞ்சு பொறுக்காமல்
நிம்மதி கெட்ட
நிஜப் புரட்சிக்காரன்
வீர சுதந்திரம் வேண்டி
வெகுண்டெழுந்த வேங்கை
வையத்தலைமை எனக்கருள்வாய் எனக் கேட்ட
வல்லரசாதிக்கவாதி

வானம் வசப்படும் என்று நம்பிய
வருங்கால மனிதன்
காணி நிலம் வேண்டும் தொடங்கி
கனவு மெய்ப்பட வேண்டும் வரையில்
கற்பனைகளில் மிதந்த
கனவு சாதனையாளன்
வாதனை பொறுக்கவில்லை எனக் கதறிய
வாழ்க்கைப் போராளி
எத்தனை கோடி இன்பம் என்று
எண்ணிப் பார்த்து மெய்சிலிர்த்த
ஏகாந்த யோகி

பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர் என்றவனை
அன்று பைத்தியக்காரன் என்று
பார்த்துச் சிரித்த மக்கள் கூட்டத்தின்
வழித் தோன்றல்களை
இன்றும் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கும்
அழியாக் கவிதைகளை
அள்ளித் தந்துவிட்டுப் போன
அமரகவி