ஞான கர்ம சந்யாச யோகம்
‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன்.
பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.
श्रीभगवानुवाच
इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्।
विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवेऽब्रवीत्॥१॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
இமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்|
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்³ரவீத் ||4-1||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
இமம் அவ்யயம் யோக³ம் = இந்த அழிவற்ற யோகத்தை
அஹம் விவஸ்வதே ப்ரோக்தவாந் = நான் சூரியனுக்கு (விவஸ்வான்) சொன்னேன்
விவஸ்வாந் மநவே ப்ராஹ = விவஸ்வாந் மனுவுக்கு சொன்னான்
மநு: இக்ஷ்வாகவே அப்³ரவீத் = மனு இக்ஷ்வாகு மன்னனுக்கு சொன்னார்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
एवं परम्पराप्राप्तमिमं राजर्षयो विदुः।
स कालेनेह महता योगो नष्टः परन्तप॥२॥
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது³:|
ஸ காலேநேஹ மஹதா யோகோ³ நஷ்ட: பரந்தப ||4-2||
பரந்தப = எதிரிகளை எரிப்பவனே !
ஏவம் பரம்பராப்ராப்தம் = இவ்விதம் வழிவழியாக வந்த
இமம் ராஜர்ஷய: விது³: = இந்த யோகத்தை ராஜ ரிஷிகள் அறிந்திருந்தனர்
ஸ: யோக³ மஹதா காலேந = அந்த யோகம் வெகுகாலமாக
இஹ நஷ்ட: = இவ்வுலகில் இழக்கப் பட்டது
இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.
स एवायं मया तेऽद्य योगः प्रोक्तः पुरातनः।
भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्॥३॥
ஸ ஏவாயம் மயா தேऽத்³ய யோக³: ப்ரோக்த: புராதந:|
ப⁴க்தோऽஸி மே ஸகா² சேதி ரஹஸ்யம் ஹ்யேதது³த்தமம் ||4-3||
மே ப⁴க்த: ஸகா² ச அஸி = என்னுடைய பக்தனும் நண்பனும் ஆவாய்
இதி ஸ: ஏவ புராதந: அயம் யோக³: = ஆகவே அதே பழமையான இந்த யோகத்தை
அத்³ய மயா தே ப்ரோக்த: = இன்று என்னால் உனக்கு சொல்லப் பட்டது
ஹி எதத் உத்தமம் ரஹஸ்யம் = ஏனெனில் இந்த யோகம சிறந்தது ரகசியமானது
அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.
अर्जुन उवाच
अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः।
कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति॥४॥
அர்ஜுந உவாச
அபரம் ப⁴வதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:|
கத²மேதத்³விஜாநீயாம் த்வமாதௌ³ ப்ரோக்தவாநிதி ||4-4||
அர்ஜுந உவாச = அர்ஜுனன் சொல்லுகிறான்
ப⁴வத: ஜந்ம அபரம் = உன் பிறப்பு பிந்தியது
விவஸ்வத: ஜந்ம பரம் = விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது
த்வம் ஆதௌ³ ப்ரோக்தவாந் இதி = நீ இதை ஆதியில் சொன்னவனென்று
ஏதத் கத²ம் விஜாநீயாம் = நான் தெரிந்துகொள்வதெப்படி?
அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?
श्रीभगवानुवाच
बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन।
तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप॥५॥
ஸ்ரீப⁴க³வாநுவாச
ப³ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந|
தாந்யஹம் வேத³ ஸர்வாணி ந த்வம் வேத்த² பரந்தப ||4-5||
ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
பரந்தப அர்ஜுந = அர்ஜுனா
மே தவ ச = எனக்கும் உனக்கும்
ப³ஹூநி ஜந்மாநி வ்யதீதாநி = பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன
தாநி ஸர்வாணி த்வம் ந வேத்த² = அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய்
அஹம் வேத³ = நான் அறிவேன்
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्।
प्रकृतिं स्वामधिष्ठाय संभवाम्यात्ममायया॥६॥
அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|
ப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||
அஜ: அவ்யய ஆத்மா ஸந் அபி = பிறப்பற்றவனாகவும் அழிவற்றவனாகவும்
பூ⁴தாநாம் ஈஸ்²வர: அபி ஸந் = உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும்
ஸ்வாம் ப்ரக்ருதிம் அதி⁴ஷ்டா²ய = யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று
ஆத்ம மாயயா ஸம்ப⁴வாமி = என்னுடைய மாயையால் பிறப்பெய்துகிறேன்
ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥७॥
யதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர்ப⁴வதி பா⁴ரத|
அப்⁴யுத்தா²நமத⁴ர்மஸ்ய ததா³த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||
பா⁴ரத யதா³ யதா³ = பாரதா, எப்போதெப்போது
த⁴ர்மஸ்ய க்³லாநி = தர்மம் அழிந்துபோய்
அத⁴ர்மஸ்ய அப்⁴யுத்தா²நம் ப⁴வதி = அதர்மம் எழுச்சி பெறுமோ
ததா³ ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம்யஹம் = அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்
பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.
परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्।
धर्मसंस्थापनार्थाय संभवामि युगे युगे॥८॥
பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||
ஸாதூ⁴நாம் பரித்ராணாய = நல்லோரைக் காக்கவும்
து³ஷ்க்ருதாம் விநாஸா²ய ச = தீயன செய்வோரை அழிக்கவும்
த⁴ர்ம ஸம்ஸ்தா²பநார்தா²ய = அறத்தை நிலை நிறுத்தவும்
யுகே³ யுகே³ ஸம்ப⁴வாமி = நான் யுகந்தோறும் பிறக்கிறேன்
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन॥९॥
ஜந்ம கர்ம ச மே தி³வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:|
த்யக்த்வா தே³ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந ||4-9||
அர்ஜுந! = அர்ஜுனா!
மே ஜந்ம கர்ம ச தி³வ்யம் = எனது பிறப்பும் செய்கையும் தெய்வத்தன்மை கொண்டது
ஏவம் ய: தத்த்வத: வேத்தி = இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன்
ஸ: தே³ஹம் த்யக்த்வா = உடலைத் துறந்த பின்னர்
புநர்ஜந்ம ந ஏதி = மறுபிறப்பு எய்துவதில்லை
மாம் ஏதி = என்னை எய்துகிறான்
எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः।
बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः॥१०॥
வீதராக³ப⁴யக்ரோதா⁴ மந்மயா மாமுபாஸ்²ரிதா:|
ப³ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்³பா⁴வமாக³தா: ||4-10||
வீத ராக³ ப⁴ய க்ரோதா⁴= விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய்
மந்மயா: = என் மயமாய்
மாம் உபாஸ்²ரிதா: = என்னை அடைக்கலம் புகுந்து
ப³ஹவ: ஜ்ஞாநதபஸா பூதா = ஞானத்தவத்தால் தூய்மை பெற்று
மத்³பா⁴வம் ஆக³தா: ப³ஹவ: = என்னியல்பு எய்தினோர் பலர்
விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர்.
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः॥११॥
யே யதா² மாம் ப்ரபத்³யந்தே தாம்ஸ்ததை²வ ப⁴ஜாம்யஹம்|
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||4-11||
பார்த² யே மாம் யதா² ப்ரபத்³யந்தே = பார்த்தா! யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ
தாந் அஹம் ததா² ஏவ ப⁴ஜாமி = அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்
மநுஷ்யா: ஸர்வஸ²: = மனிதர் யாங்கணும்
மம வர்த்ம அநுவர்தந்தே = என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः।
क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा॥१२॥
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்³தி⁴ம் யஜந்த இஹ தே³வதா:|
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்³தி⁴ர்ப⁴வதி கர்மஜா ||4-12||
இஹ மாநுஷே லோகே = இந்த மனிதவுலகத்தில்
கர்மணாம் ஸித்³தி⁴ம் காங்க்ஷந்த: = தொழில்களில் வெற்றியை விரும்புவோர்
தே³வதா: யஜந்தே = தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள்
ஹி கர்மஜா ஸித்³தி⁴: = தொழிலினின்றும் வெற்றி
க்ஷிப்ரம் ப⁴வதி = விரைவில் விளைவதன்றோ!
தொழில்களில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्मविभागशः।
तस्य कर्तारमपि मां विद्ध्यकर्तारमव्ययम्॥१३॥
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||
கு³ண கர்ம விபா⁴க³ஸ²: = குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி பிரிவுகளாக
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் = நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டது
தஸ்ய கர்தாரம் அபி = நானே அவற்றை செய்தேன் என்றாலும்
அவ்யயம் மாம் = அழிவற்றவனாகிய என்னை
அகர்தாரம் வித்³தி⁴ = கர்த்தா அல்லேன் என்று உணர்
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
न मां कर्माणि लिम्पन्ति न मे कर्मफले स्पृहा।
इति मां योऽभिजानाति कर्मभिर्न स बध्यते॥१४॥
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப²லே ஸ்ப்ருஹா|
இதி மாம் யோऽபி⁴ஜாநாதி கர்மபி⁴ர்ந ஸ ப³த்⁴யதே ||4-14||
மே கர்மப²லே ந ஸ்ப்ருஹா = எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை
மாம் கர்மாணி ந லிம்பந்தி = என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை
ய: இதி மாம் அபி⁴ஜாநாதி = இங்ஙனம் என்னை யறிவோன்
ஸ: கர்மபி⁴: ந ப³த்⁴யதே = கர்மங்களால் கட்டப்பட மாட்டான்
என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वैरपि मुमुक्षुभिः।
कुरु कर्मैव तस्मात्त्वं पूर्वैः पूर्वतरं कृतम्॥१५॥
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி⁴:|
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ||4-15||
பூர்வை: முமுக்ஷுபி⁴: அபி = முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும்
ஏவம் ஜ்ஞாத்வா = இதையுணர்ந்து
கர்ம க்ருதம் = தொழிலே செய்தனர்
தஸ்மாத் த்வம் = அதனால் நீயும்
பூர்வை: பூர்வதரம் க்ருதம் = முன்னோர்கள் முன்பு செய்தபடி
கர்ம ஏவ குரு = தொழிலையே செய்யக் கடவாய்.
முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் தொழிலையே செய்யக் கடவாய்.
किं कर्म किमकर्मेति कवयोऽप्यत्र मोहिताः।
तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ज्ञात्वा मोक्ष्यसेऽशुभात्॥१६॥
கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:|
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் ||4-16||
கிம் கர்ம கிம அகர்ம இதி = எது தொழில்; எது தொழிலல்லாதது என்ற விஷயத்தில்
கவய: அபி அத்ர மோஹிதா: = ஞானிகளும் இங்கே மயக்கமெய்துகிறார்கள்
யத் ஜ்ஞாத்வா = எதை தெரிந்து கொள்வதால்
அஸு²பா⁴த் மோக்ஷ்யஸே = தீங்கினின்றும் விடுபடுவாய்
தத் கர்ம தே ப்ரவக்ஷ்யாமி = அந்த கர்மத்தின் தத்துவத்தை உனக்கு சொல்லப் போகிறேன்
‘எது தொழில்; எது தொழிலல்லாதது’ என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.
कर्मणो ह्यपि बोद्धव्यं बोद्धव्यं च विकर्मणः।
अकर्मणश्च बोद्धव्यं गहना कर्मणो गतिः॥१७॥
கர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம் போ³த்³த⁴வ்யம் ச விகர்மண:|
அகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ||4-17||
கர்மண: அபி = தொழிலின் இயல்பும்
போ³த்³த⁴வ்யம் = தெரிய வேண்டும்
அகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிற் கேட்டின் இயல்பும் தெரிய வேண்டும்
விகர்மண: ச போ³த்³த⁴வ்யம் = தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்
ஹி கர்மண: க³தி: க³ஹநா = ஏனெனில் கர்மத்தின் போக்கு ஆழமானது
தொழிலின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிலின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.
कर्मण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः।
स बुद्धिमान्मनुष्येषु स युक्तः कृत्स्नकर्मकृत्॥१८॥
கர்மண்யகர்ம ய: பஸ்²யேத³கர்மணி ச கர்ம ய:|
ஸ பு³த்³தி⁴மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ||4-18||
கர்மணி அகர்ம = செய்கையில் செயலின்மையும்
ச அகர்மணி கர்ம = செயலின்மையில் செய்கையும்
ய: பஸ்²யேத் = எவன் காணுகிறானோ
ஸ மநுஷ்யேஷு பு³த்³தி⁴மாந் = அவனே மனிதரில் அறிவுடையோன்
ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் = அந்த யோகி அனைத்துக் கர்மங்களையும் செய்கிறவன் (ஆகிறான்)
செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்தொழில் செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
यस्य सर्वे समारम्भाः कामसङ्कल्पवर्जिताः।
ज्ञानाग्निदग्धकर्माणं तमाहुः पण्डितं बुधाः॥१९॥
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: காமஸங்கல்பவர்ஜிதா:|
ஜ்ஞாநாக்³நித³க்³த⁴கர்மாணம் தமாஹு: பண்டி³தம் பு³தா⁴: ||4-19||
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: = எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம்
காம ஸங்கல்ப வர்ஜிதா: = விருப்ப நினைவு தவிர்ந்தனவோ
ஜ்ஞாநாக்³நி த³க்³த⁴ கர்மாணம் = எவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவோ
தம் பு³தா⁴: = அவனை ஞானிகள்
பண்டி³தம் ஆஹு: = அறிவுடையோன் என்கிறார்கள்
எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.
त्यक्त्वा कर्मफलासङ्गं नित्यतृप्तो निराश्रयः।
कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किञ्चित्करोति सः॥२०॥
த்யக்த்வா கர்மப²லாஸங்க³ம் நித்யத்ருப்தோ நிராஸ்²ரய:|
கர்மண்யபி⁴ப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ||4-20||
கர்ம ப²லா ஸங்க³ம் த்யக்த்வா = கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாக
நித்யத்ருப்த: நிராஸ்²ரய: = திருப்தியுடையோனாக சார்பற்று நிற்போனாக
ஸ: கர்மணி அபி⁴ப்ரவ்ருத்த: அபி = அவன் கர்மத்தில் நன்கு ஈடுபட்டிருந்தாலும் கூட
கிஞ்சித் ஏவ ந கரோதி = சிறிது கூட செய்வதே இல்லை (செயலற்றவனாவான்)
கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
निराशीर्यतचित्तात्मा त्यक्तसर्वपरिग्रहः।
शारीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्॥२१॥
நிராஸீ²ர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்³ரஹ:|
ஸா²ரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் ||4-21||
யதசித்தாத்மா = சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி
த்யக்த ஸர்வ பரிக்³ரஹ: = எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து
நிராஸீ² = ஆசையற்றவனாய்
கேவலம் ஸா²ரீரம் கர்ம குர்வந் = வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருந்தாலும்
கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவத்தையடைய மாட்டான்
ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீரத் தொழில் மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
यदृच्छालाभसन्तुष्टो द्वन्द्वातीतो विमत्सरः।
समः सिद्धावसिद्धौ च कृत्वापि न निबध्यते॥२२॥
யத்³ருச்சா²லாப⁴ஸந்துஷ்டோ த்³வந்த்³வாதீதோ விமத்ஸர:|
ஸம: ஸித்³தா⁴வஸித்³தௌ⁴ ச க்ருத்வாபி ந நிப³த்⁴யதே ||4-22||
யத்³ருச்சா² லாப⁴ ஸந்துஷ்ட = தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாக
விமத்ஸர: = பொறாமையற்றவனாக
த்³வந்த்³வ அதீத: = இருமைகளைக் கடந்தவனாக
ஸித்³தௌ⁴ அஸித்³தௌ⁴ ச ஸம: = வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான்
க்ருத்வாபி ந நிப³த்⁴யதே = தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை
தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் தொழில் செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
गतसङ्गस्य मुक्तस्य ज्ञानावस्थितचेतसः।
यज्ञायाचरतः कर्म समग्रं प्रविलीयते॥२३॥
க³தஸங்க³ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ:|
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்³ரம் ப்ரவிலீயதே ||4-23||
க³தஸங்க³ஸ்ய = உலகப் பற்றை ஒழித்து
முக்தஸ்ய = உடற்பற்று மமதை ஆகியவற்றை ஒழித்து
ஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ: = ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றவன்
யஜ்ஞாய ஆசரத: = வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான்
ஸமக்³ரம் கர்ம ப்ரவிலீயதே = கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது
பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் தொழில்புரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
ब्रह्मार्पणं ब्रह्म हविः ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम्।
ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना॥२४॥
ப்³ரஹ்மார்பணம் ப்³ரஹ்ம ஹவி: ப்³ரஹ்மாக்³நௌ ப்³ரஹ்மணா ஹுதம்|
ப்³ரஹ்மைவ தேந க³ந்தவ்யம் ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா ||4-24||
அர்பணம் ப்³ரஹ்ம = வேள்வியில் உபயோகப் படும் பொருட்கள் பிரம்மம் தான்
ஹவி: ப்³ரஹ்ம = ஹோமம் செய்யப் படும் திரவியமும் பிரம்மம் தான்
ப்³ரஹ்மாக்³நௌ ஹுதம் = பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் செய்யும் செயலும் பிரம்மம்தான்
ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா தேந = பிரம்மத்தின் செய்கையில் ஊன்றி நிற்கின்ற அந்த யோகியினால்
க³ந்தவ்யம் ப்³ரஹ்ம ஏவ = அடையத்தக்க பயனும் பிரம்மம் தான்
பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
दैवमेवापरे यज्ञं योगिनः पर्युपासते।
ब्रह्माग्नावपरे यज्ञं यज्ञेनैवोपजुह्वति॥२५॥
தை³வமேவாபரே யஜ்ஞம் யோகி³ந: பர்யுபாஸதே|
ப்³ரஹ்மாக்³நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ||4-25||
அபரே யோகி³ந: = சில யோகிகள்
தை³வம் யஜ்ஞம் ஏவ = தேவருக்குச் செய்யப்படும் வேள்வியையே
பர்யுபாஸதே = வழிபடுகிறார்கள்
அபரே ப்³ரஹ்மாக்³நௌ = வேறு சிலர் பிரம்மத் தீயில்
யஜ்ஞேந ஏவ யஜ்ஞம் = வேள்வியையே ஆகுதி செய்து
உபஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்
சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.
श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति॥२६॥
ஸ்²ரோத்ராதீ³நீந்த்³ரியாண்யந்யே ஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி|
ஸ²ப்³தா³தீ³ந்விஷயாநந்ய இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி ||4-26||
அந்யே ஸ்²ரோத்ராதீ³நீ இந்த்³ரியாணி = வேறு சிலர் செவி முதலிய இந்திரியங்களை
ஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி = அடக்கம் என்னும் அக்னிகளில் ஆகுதி செய்கிறார்கள்
அந்யே ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந்= வேறு சிலர் ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களை
இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி = இந்திரியங்களாகிய தழல்களில் ஹோமம் செய்கிறார்கள்
வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.
सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते॥२७॥
ஸர்வாணீந்த்³ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே|
ஆத்மஸம்யமயோகா³க்³நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீ³பிதே ||4-27||
அபரே ஸர்வாணீ இந்த்³ரியகர்மாணி = வேறு சிலர் எல்லா இந்திரியச் செயல்களையும்
ப்ராணகர்மாணி ச = உயிர்ச்செயல்களையும்
ஜ்ஞாநதீ³பிதே = ஞானத்தால் ஒளிபெற்ற
ஆத்ம ஸம்யம யோகா³க்³நௌ = தன்னாட்சியென்ற யோகத் தீயில்
ஜுஹ்வதி = ஹோமம் செய்கிறார்கள்
வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.
द्रव्ययज्ञास्तपोयज्ञा योगयज्ञास्तथापरे।
स्वाध्यायज्ञानयज्ञाश्च यतयः संशितव्रताः॥२८॥
த்³ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக³யஜ்ஞாஸ்ததா²பரே|
ஸ்வாத்⁴யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்²ச யதய: ஸம்ஸி²தவ்ரதா: ||4-28||
அபரே த்³ரவ்யயஜ்ஞா = வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்
தபோயஜ்ஞா = தவத்தால் வேட்போர்
ததா² யோக³யஜ்ஞா ச = அதே போல யோகத்தால் வேட்போர்
ஸம்ஸி²தவ்ரதா: யதய: = அகிம்சை முதலிய கொள்கை உடையோர், முயற்சி செய்வோர்
ஸ்வாத்⁴யாய ஜ்ஞாநயஜ்ஞா = சிலர் ஞானத்தால் வேட்போர்
விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.
अपाने जुह्वति प्राणं प्राणेऽपानं तथापरे।
प्राणापानगती रुद्ध्वा प्राणायामपरायणाः॥२९॥
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததா²பரே|
ப்ராணாபாநக³தீ ருத்³த்⁴வா ப்ராணாயாமபராயணா: ||4-29||
அபரே ப்ராணாயாமபராயணா: = வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய்
ப்ராணஅபாநக³தீ ருத்³த்⁴வா = பிராணன் அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி
அபாநே ப்ராணம் ப்ராணே அபாநம் = அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும்
ஜுஹ்வதி = ஆகுதி பண்ணுகிறார்கள்
இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.
अपरे नियताहाराः प्राणान्प्राणेषु जुह्वति।
सर्वेऽप्येते यज्ञविदो यज्ञक्षपितकल्मषाः॥३०॥
அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி|
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ³ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: ||4-30||
அபரே நியதாஹாரா: = வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி
ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி = உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள்
ஏதே ஸர்வே அபி = இவ்வனைவரும்
யஜ்ஞவிதோ³ = வேள்வி நெறியுணர்ந்து
யஜ்ஞக்ஷபிதகல்மஷா: = வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
यज्ञशिष्टामृतभुजो यान्ति ब्रह्म सनातनम्।
नायं लोकोऽस्त्ययज्ञस्य कुतोऽन्यः कुरुसत्तम॥३१॥
யஜ்ஞஸி²ஷ்டாம்ருதபு⁴ஜோ யாந்தி ப்³ரஹ்ம ஸநாதநம்|
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம ||4-31||
குருஸத்தம = குரு குலத்தாரில் சிறந்தோய்
யஜ்ஞஸி²ஷ்ட அம்ருதபு⁴ஜ: = வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர்
ஸநாதநம் யாந்தி ப்³ரஹ்ம = என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள்
அயஜ்ஞஸ்ய அயம் லோக: ந அஸ்தி = வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை
அந்ய: குத: = வேறு (பர உலகம்) ஏது?
வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे।
कर्मजान्विद्धि तान्सर्वानेवं ज्ञात्वा विमोक्ष्यसे॥३२॥
ஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா விததா ப்³ரஹ்மணோ முகே²|
கர்மஜாந்வித்³தி⁴ தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ||4-32||
ஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா = இங்ஙனம் பலவித வேள்விகள்
ப்³ரஹ்மண: முகே² = வேதங்களின் வாயிலாக
விததா = விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன
தாந் ஸர்வாந் கர்மஜாந் = அவையெல்லாம் தொழிலிலே பிறப்பன
வித்³தி⁴ = என்று உணர்.
ஏவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே = இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்
பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் தொழிலிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
श्रेयान्द्रव्यमयाद्यज्ञाज्ज्ञानयज्ञः परन्तप।
सर्वं कर्माखिलं पार्थ ज्ञाने परिसमाप्यते॥३३॥
ஸ்²ரேயாந்த்³ரவ்யமயாத்³யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப|
ஸர்வம் கர்மாகி²லம் பார்த² ஜ்ஞாநே பரிஸமாப்யதே ||4-33||
பரந்தப பார்த² = பரந்தப அர்ஜுனா!
த்³ரவ்யமயாத் யஜ்ஞாத் = திரவியத்தைக் கொண்டு செய்யப்படும்
ஜ்ஞாநயஜ்ஞ: ஸ்²ரேயாந் = ஞானவேள்வி சிறந்தது
அகி²லம் கர்ம: ஸர்வம் = கர்மமெல்லாம்
ஜ்ஞாநே பரிஸமாப்யதே = ஞானத்தில் முடிவு பெறுகிறது
பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.
तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया।
उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः॥३४॥
தத்³வித்³தி⁴ ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா|
உபதே³க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத³ர்ஸி²ந: ||4-34||
ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா = வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும்
தத்³ வித்³தி⁴ = அதனை அறிந்துகொள்
தத்த்வத³ர்ஸி²ந: ஜ்ஞாநிந = உண்மை காணும் ஞானிகள்
தே ஜ்ஞாநம் உபதே³க்ஷ்யந்தி = உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்
அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि॥३५॥
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|
யேந பூ⁴தாந்யஸே²ஷேண த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||
यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव।
येन भूतान्यशेषाणि द्रक्ष्यस्यात्मन्यथो मयि॥३५॥
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|
யேந பூ⁴தாந்யஸே²ஷாணி த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||
யத் ஜ்ஞாத்வா = எதை அறிந்து கொண்ட பின்னர்
பாண்ட³வ புந: ஏவம் மோஹம் = பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கம்
ந யாஸ்யஸி = அடைய மாட்டாயோ
யேந பூ⁴தாநி அஸே²ஷாணி = இதனால் எல்லா உயிர்களையும், மிச்சமின்றி
ஆத்மநி அதோ² மயி த்³ரக்ஷ்யஸி = நின்னுள்ளேயும், பிறகு என்னுள்ளேயும் காண்பாய்.
அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.
अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि॥३६॥
அபி சேத³ஸி பாபேப்⁴ய: ஸர்வேப்⁴ய: பாபக்ருத்தம:|
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ||4-36||
ஸர்வேப்⁴ய: பாபேப்⁴ய: அபி = பாவிகளெல்லாரைக் காட்டிலும்
பாபக்ருத்தம: அஸி சேத் = நீ அதிகப் பாவியாக இருந்தாலும்
ஜ்ஞாநப்லவேந ஏவ = ஞானத்தோணியால்
ஸர்வம் வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி = அப்பாவத்தையெல்லாம் கடந்து செல்வாய்
பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.
यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात्कुरुतेऽर्जुन।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा॥३७॥
யதை²தா⁴ம்ஸி ஸமித்³தோ⁴ऽக்³நிர்ப⁴ஸ்மஸாத்குருதேऽர்ஜுந|
ஜ்ஞாநாக்³நி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத்குருதே ததா² ||4-37||
அர்ஜுந = அர்ஜுனா!
யதா² ஸமித்³த⁴ அக்³நி = நன்கு கொளுத்துண்ட தீ
ஏதா⁴ம்ஸி ப⁴ஸ்மஸாத் குருதே = விறகுகளைச் சாம்பராக்கி விடுகிறதோ
ததா² ஜ்ஞாநாக்³நி: = அதே போல ஞானத் தீ
ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத் குருதே = எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்
நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
न हि ज्ञानेन सदृशं पवित्रमिह विद्यते।
तत्स्वयं योगसंसिद्धः कालेनात्मनि विन्दति॥३८॥
ந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் பவித்ரமிஹ வித்³யதே|
தத்ஸ்வயம் யோக³ஸம்ஸித்³த⁴: காலேநாத்மநி விந்த³தி ||4-38||
இஹ ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் = இவ்வுலகத்தில் ஞானத்தைப் போல்
பவித்ரம் ஹி ந வித்³யதே = தூய்மை தரும் பொருள் வேறெதுவுமில்லை
தத் காலேந யோக³ஸம்ஸித்³த⁴: = தக்க பருவத்தில் கடைப்பிடித்து யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன்
ஸ்வயம் ஆத்மநி விந்த³தி = தனக்குத்தானே ஆத்மாவிடம் எய்தப் பெறுகிறான்
ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
श्रद्धावाँल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति॥३९॥
ஸ்²ரத்³தா⁴வாம்¿ல்லப⁴தே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்³ரிய:|
ஜ்ஞாநம் லப்³த்⁴வா பராம் ஸா²ந்திமசிரேணாதி⁴க³ச்ச²தி ||4-39||
ஸம்யதேந்த்³ரிய: = இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாக
தத்பர: ஸ்²ரத்³தா⁴வாந் = சாதனையிலேயே ஒன்றிய சிரத்தையுடையோன்
ஜ்ஞாநம் லப⁴தே = ஞானத்தையடைகிறான்
ஜ்ஞாநம் லப்³த்⁴வா = ஞானத்தையடைந்த பின்
அசிரேண பராம் ஸா²ந்திம் அதி⁴க³ச்ச²தி = விரைவிலே பர சாந்தி பெறுகிறான்
பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः॥४०॥
அஜ்ஞஸ்²சாஸ்²ரத்³த³தா⁴நஸ்²ச ஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி|
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுக²ம் ஸம்ஸ²யாத்மந: ||4-40||
அஜ்ஞ ச ஸ்²ரத்³த³தா⁴ந் ச = அறிவும் சிரத்தையுமின்றி
ஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி = ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான்
ஸம்ஸ²யாத்மந: அயம் லோக: ந அஸ்தி = ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை
பர: ந ஸுக²ம் ச ந = மேலுலகமில்லை; இன்பமுமில்லை
அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
योगसन्न्यस्तकर्माणं ज्ञानसञ्छिन्नसंशयम्।
आत्मवन्तं न कर्माणि निबध्नन्ति धनञ्जय॥४१॥
யோக³ஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சி²ந்நஸம்ஸ²யம்|
ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய ||4-41||
தனஞ்ஜயா! = அர்ஜுனா
யோக³ ஸந்ந்யஸ்த கர்மாணம் = யோகத்தால் செய்கைகளைத் துறந்து
ஜ்ஞாந ஸஞ்சி²ந்ந ஸம்ஸ²யம் = ஞானத்தால் ஐயத்தை அறுத்து
ஆத்மவந்தம் = தன்னைத் தான் ஆள்வோனை
கர்மாணி ந நிப³த்⁴நந்தி = கட்டுப்படுத்த மாட்டா
யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
तस्मादज्ञानसंभूतं हृत्स्थं ज्ञानासिनात्मनः।
छित्त्वैनं संशयं योगमातिष्ठोत्तिष्ठ भारत॥४२॥
தஸ்மாத³ஜ்ஞாநஸம்பூ⁴தம் ஹ்ருத்ஸ்த²ம் ஜ்ஞாநாஸிநாத்மந:|
சி²த்த்வைநம் ஸம்ஸ²யம் யோக³மாதிஷ்டோ²த்திஷ்ட² பா⁴ரத ||4-42||
தஸ்மாத் பா⁴ரத = ஆகவே பாரதா
ஹ்ருத்ஸ்த²ம் = நெஞ்சில் நிலைகொண்டிருக்கும்
அஜ்ஞாநஸம்பூ⁴தம் ஆத்மந: ஏநம் ஸம்ஸ²யம் = அஞ்ஞானத்தால் தோன்றும் இந்த ஐயத்தை
ஜ்ஞாந அஸிநா: சி²த்த்வா = ஞானவாளால் அறுத்து
யோக³ம் ஆதிஷ்ட²: உத்திஷ்ட² = யோக நிலைகொள், எழுந்து நில்
அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.
ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
श्रिकृष्णार्जुन सम्वादे ज्ञानकर्मसन्नयासयोगो नाम चतुर्थोऽध्याय: || 4 ||
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.