பகவத் கீதை

வேயினிக்க இசைத்திடும் கண்ணன்தான்
வேத மன்ன மொழிகளில், “பார்த்தனே
நீ இனிக்கவலாது அறப் போர் செய்தல்
நேர்மை” என்றதோர்செய்தியைக் கூறும் என்
வாயினிக்க வருந் தமிழ் வார்த்தைகள்
வையகத்தினர் நெஞ்சு கவர்ந்திடத்
தாய் இனிக்கருணை செயல் வேண்டும் நின்
சரண மன்றி இங்கோர் சரணில்லையே.

– பாரதியார்

பாரதியாரின் முன்னுரை
கீதையின் பெருமை
பாரதி பாமாலை

  1. அர்ஜுன விஷாத யோகம்
  2. ஸாங்கிய யோகம்
  3. கர்ம யோகம்
  4. ஞான கர்ம சந்யாச யோகம்
  5. சந்யாச யோகம்
  6. தியான யோகம்
  7. ஞான விஞ்ஞான யோகம்
  8. அக்ஷர பிரம்ம யோகம்
  9. ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
  10. விபூதி யோகம்
  11. விசுவரூப தரிசன யோகம்
  12. பக்தி யோகம்
  13. க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
  14. குணத்ரய விபாக யோகம்
  15. புருஷோத்தம யோகம்
  16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
  17. சிரத்தாத்ரய விபாக யோகம்
  18. மோஷ சந்நியாச யோகம்

பகவத் கீதை பற்றி குறிப்புகள்

பகவத் கீதை படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அநேகமாக நம்மில் எல்லாருக்குமே இருக்கும். பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் வார்த்தைகளில் கடல் போன்ற வேத – சாத்திர ஞானத்தின் சாரமாக கீதை விளங்குகிறது. கீதையின் விசேஷமே அது தனி மனிதர்களை நோக்கி பேசுகிறது. கீதையை படிப்பவர்கள் அர்ஜுனனாக உணர்ந்து கொண்டு, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் உபதேசங்களைக் கேட்கும் போது, அவரவர் துன்பங்களுக்கு மருந்தாக ஆகிறது.

கீதையை தக்க உரையின்றி புரிந்து கொள்வது கடினம். நவீன கால கீதை உரைகளில் பாலகங்காதர திலகர் எழுதிய உரை, அரவிந்த கோஷ் அவர்களின் கீதைக் கட்டுரைகள், நடராஜ குரு அவர்களின் உரை, மற்றும் மகாகவி பாரதியாரின் உரையும் சிகரம் போன்றவை. பாரதியார் சமஸ்க்ருதத்திலும் புலமை மிக்கவர். கீதை மூல ஸ்லோகங்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை, ரத்தின சுருக்கமாக விளக்க உரை எழுதி உள்ளார். சங்கதம் தளத்தில் பகவத் கீதை மூல ஸ்லோகங்களுடன், மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உரையை விளக்கமாக இணைத்துத் தருவதில் மிக்கப் பெருமை அடைகிறோம்.

கீதையில் புரிந்து கொள்ளக் கடினமான பகுதிகளும் உண்டு. மிக எளிதாக உதாரணங்களுடன் விளக்கப் படும் பகுதிகளும் உண்டு. கீதையின் சமஸ்க்ருத நடை அவ்வளவு கடினமானது அல்ல. சமஸ்க்ருதம் தெரிந்தவர்களுக்கு கீதை படிக்க இலகுவானது. அதே போல கீதையை மூலத்துடனும், உரையுடனும் படிப்பவர்களுக்கு சமஸ்க்ருதமும் இலகுவாக பிடிபட்டு விடும்.

இத்தளத்தில் வெளியாகி உள்ள கீதை உரையில், மூல ஸ்லோகங்களுக்கு அடுத்த படியாக பதவுரை எழுத கீதாபிரஸ் வெளியிட்டுள்ள புகழ் பெற்ற “தத்வ விவேசனி” நூல் உதவியாக இருந்தது. தெளிவுரையாக பாரதியாரின் உரையை அப்படியே இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏதுவாக பாரதியாரின் உரையை வலையேற்றி கிடைக்கச் செய்த தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றிகள் பல. இப்படைப்பில் ஏதேனும் பிழைகள் இருக்குமானால் இங்கே தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.