பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5

பர்த்ருஹரி நமது சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றியுள்ளார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள். இந்த சுபாஷிதங்களுக்கும் பிற்காலத்தில் ராமசந்திர புதேந்திரர் என்பார் விரிவான உரை எழுதியுள்ளார். இந்த தொடரில் பர்த்ருஹரியின் சுபாஷிதங்களுடன், ராமசந்திரரின் உரையில் முக்கிய அம்சங்களுடன் இணைத்து தரப்பட்டுள்ளது. இத்தொடர் சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோருக்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறோம்.

மேலும் படிக்க

சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்

சம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.



கொங்குதேர் வாழ்க்கை முதலிய குறுந்தொகை பாடல்கள் சம்ஸ்க்ருதத்தில்!

தமிழ் சங்க நூல்களில் எட்டுத் தொகை என்னும் தொகுப்பில் உள்ள மிகப் பழமையான நூல் குறுந்தொகை. பல்வேறு உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட நூலும் இதுவே. இயற்கையின் ஊடாக காதலை பொருத்தி அகத்திணையில் அமைந்துள்ள நானூறு பாடல்கள் கொண்ட நூல். இருநூறுக்கும் மேற்பட்ட புலவர்கள் எழுதிய செய்யுள்கள் இதில் உள்ளன. தமிழில் மிக முக்கியமான இலக்கியமான குறுந்தொகை சம்ஸ்க்ருதத்தில் ஸ்ருங்கார பத்யாவளி என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. சிருங்காரம் என்பது அழகியல், பத்யாவளி என்பது மாலையாக தொகுக்கப் பட்ட கவிதை… மேலும் படிக்க

அறுபது வருடங்களின் பெயர்கள்…

ஹிந்துக்களின் நாட்காட்டி கணக்கு அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையில் அமைந்தது. இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு முறை அறுபது வருடங்கள் ஆன பிறகு மீண்டும் முதலில் இருந்து துவங்கும். ஒவ்வொரு வருடப் பஞ்சாங்கத்திலும் அந்த வருடத்திற்கான பெயர் முக்கியமாக இருப்பதைக் காணலாம். இந்த வருடம் துர்முக வருடம். சென்ற ஆண்டு மன்மத ஆண்டு. இந்த ஆண்டுக் கணக்குகள் சூரியனைச் சுற்றி வியாழன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு வியாழ வட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த… மேலும் படிக்க

காசிகா – இலக்கண உரை

சம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க

மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை?

சம்ஸ்க்ருதத்தில் எழுத முடியாத உச்சரிப்பில் மட்டுமே உள்ளவை என்று எதுவும் அனேகமாக இல்லை. எல்லா உச்சரிப்புகளுக்கும் சம்ஸ்க்ருதத்தில் அக்ஷரங்கள் அல்லது எழுத்துக்கள் உள்ளன. எழுத்தை எழுத எந்த லிபியை வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம். தேவநாகரி, கிரந்தம் போன்ற எந்த லிபியை எடுத்துக் கொண்டாலும் அதில் எல்லா உச்சரிப்புகளையும் எழுதி வைக்கவும் இயலும். மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் விதை இந்த ஓரிரு எழுத்துக்களில் அமைந்துள்ள மந்திரங்கள் ஆகும்.

மேலும் படிக்க