சங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்

கருத்து 1: சங்கதம் ஒரு இறந்து போன மொழிmyths_and_facts
கருத்து உடைபடுதல்:  “இறந்து போன மொழி” என்பதை விளக்கவும்

கருத்தின் மறுதலை: சில மேற்கத்திய போலி  சம்ஸ்க்ருத மொழியாளர்களும், இந்தியாவின் சில ‘பெயர் பெற்ற’ வரலாற்று ஆய்வாளர்களும் இந்த “இறந்து போன மொழி” பிரசாரத்தை துவக்கி தம்மை தாமே மகிழ்வித்துக் கொண்டுள்ளனர். இது இப்படியே படித்தவர்களின் ஃபேஷனும் ஆகிவிட்டது. இதே வகையில் பார்த்தால் லத்தீன் மொழிகூட பேச்சு மொழியாக இல்லாததால் இறந்து போன மொழி என்று யாராவது சொல்கிறார்களா? அப்படி பார்த்தால் சுமேரிய எகிப்திய மொழிகள் கூட இறந்து போனவைதான். இதே வகையில் தான் சங்கதமும் இருக்கிறதா?

இறந்து போன மொழி என்றால் சில வசதிகள் உண்டு:

  • அது தனிப்பட்ட மொழியாக ஒரு சிறு குழுமத்துக்குள் இருக்கும் (அதாவது “இறந்த மொழி” என்கிற கருத்தை நம்புகிறவர்களுக்குள்)
  • தன்னைச்சுற்றி ஒரு புகழ் வளையத்தைப் பெற்றிருக்கும் – அதன் மூலம் அந்த மொழியறிந்த மனிதர்களுக்கும் சிறப்பு கிடைக்கும்
  • பிராமணர்களைத் தவிர யாரும் அதை கற்க முயலுவதில்லை

நாம் பின்னால் சென்று கிமு 500 முதல் கி.பி 1600 வரையுள்ள காலத்தில் உள்ள நிலையை பார்ப்போம்.

  • சங்கதம் ஒரு சிறு குழுக்குள்ளேயே (பிராமணர்கள்) இருந்தது.
  • சங்கதம் ஒரு அரச மொழியாக பெருமையும் புகழும் கொண்டிருந்தது – அதன் மூலம் பிராமணர்களும் புகழ் கொண்டிருந்தார்கள்.
  • பிராமணர்களை தவிர ஏனைய மக்களில் ஒரு சிலரைத் தவிர யாரும் சங்கதத்தை கற்க முயலுவதில்லை.

ஆகையால் மேலே சொன்ன கருத்துக்கள் ‘இறந்து போன மொழி’ என சமஸ்க்ருதத்தை சொல்வதற்கு முன்னமே உண்மைகளாகத்தான் இருந்தது (இப்போது பிராமணர்களின் இடத்தை மேற்கத்திய சம்ஸ்க்ருத மொழியாளர்களும்,  வரலாற்று ஆய்வாளர்களும் பிடித்திருக்கிறார்கள்). அப்படியானால், சம்ஸ்க்ருதம் இறந்த மொழியாகவே இத்தனை நாளும் இருந்ததா என்ன? ஆமெனில் சம்ஸ்க்ருதத்தில் ஆயிரக்கணக்கான படைப்புகள் உருவாக காரணம் என்ன?

கருத்து 2:  சம்ஸ்க்ருதம் ஒரு கடினமான மொழி
கருத்து உடைபடுதல்:  “கடினமான மொழி” என்பதை விளக்கவும்

கருத்தின் மறுதலை:

எந்த மொழிதான் கடினமானது இல்லை? ஜெர்மானிய மொழியில் புணர்ச்சி விதிகள் இல்லை. மாண்டரின், ஜப்பானிய மொழிகள் சித்திர எழுத்துக்களாக ஏனைய கோடுகளைக் கொண்டு சிக்கலாக இருக்கின்றன. பிரெஞ்சு மொழியில் “r” என்ற ஒலி மட்டுமே போதும். உண்மை என்னவெனில் ஒவ்வொரு மொழியுமே நமது பார்வையைப் பொறுத்து கடினமானதாகத் தோன்றும். மாறவேண்டியது நமது பார்வைதான்.

சொல்லப் போனால், ஆங்கிலம்தான் மிக கடினமான மொழி. அதன் எழுத்துக்கும் ஒலியியல் தொடர்பு இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இரண்டு விதங்களில் எழுதப்படுகின்றன (capital and small). ஒவ்வொரு வார்த்தையின் ஒலிக்குரிப்பையும் தனியாக கற்கவேண்டும். அதன் இலக்கணம் ஒரே விதமாக அமையும் முறையை பெற்றிருக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வாக்கியங்களில் சரியான அடிக்கோடுகள் (punctuation) இல்லையென்றால் அர்த்தமே மாறிவிடும்.

இந்த ஒழுங்கீனங்கள் எதுவும் சம்ஸ்க்ருதத்தில் இல்லை. சம்ஸ்க்ருதத்தில் ஒலியியலுக்கு பின் ஒரு அறிவியலே (சிக்ஷா:) இருக்கிறது. சம்ஸ்க்ருதத்தில் ஆங்கிலத்தைப் போல இருவேறு எழுத்துக்கள் (capital, small) இல்லை. சாரியை – சந்தி அமைப்புகள் மிக நுணுக்கமாக இயற்கையான பேச்சு ஓட்டத்திற்கு தகுந்தார்ப்போல அமைந்துள்ளது. “பேசும் விதமே எழுதும் விதம்” (What You Listen is What You Read) என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. எழுத்துக்களை கற்றுக் கொண்டுவிட்டால், வேறொரு உதவி இல்லாமல் சுலபமாக எல்லா வார்த்தைகளையும் படித்து விட முடியும் – அதாவது ஆங்கிலத்தைப் போல் இல்லாமல், படிக்கும் போதும் கேட்கும் போதும், எந்த ஒரு வார்த்தையையும் யூகிக்கத் தேவை இல்லை. இப்படி ஒரு மொழியில் எழுத்திலிருந்து பேச்சு (text-to-speech) உருவாக்கும் மென் பொருட்களின் உருவாக்கம் எவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.  மென் பொருளில், எழுத்துக்களையும் ஒலியையும் உள்ளிட்டு விட்டால், வேறு எதுவும் தேவை இன்றி, மென்பொருள் அமைப்பு தானே படிக்க முடியும் – எந்த வார்த்தையையும்! மாணவர்கள் தன்னிச்சையான எழுத்துருக்களை சரியாக சொல்ல திக்கி திணறும் Spelling-bee போட்டிகள் எல்லாம் நீங்கி, ஆராய்ந்து வார்த்தைகளை அமைக்கும் முறை உருவாகும். இலக்கணம் ஒரு நெறிப்பாடுடன் கற்கப்படும்.சமஸ்க்ருத இலக்கணத்தில் உள்ள ஒவ்வொரு கலைச்சொல்லும் கூட அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இவ்வளவு ஏன், இலக்கணம் என்பதற்கு சம்ஸ்க்ருதத்தில் வியாகரணம் என்று சொல்கிறோம். இச்சொல்லை பிரித்தல் வி – பிரித்தல் + ஆ – ஆராய்தல் + கரண – செயல் படுத்தல் என்று ஆகும். பிரித்து ஆராய்தல் என்ற பொருள்வருகிறது.நாம் ஆங்கிலத்தை இளம் வயதிலேயே கற்கிறோம் – அப்போது அறிவு பூர்வமாக கேள்வி எதுவும் கேட்க தோன்றுவதில்லை – அதனால் ஆங்கிலம் எளிதானதாக தோன்றுகிறது. நான் அறிந்த சில மாணவர்கள் ஆங்கில வழியில் பாடங்களை கற்கவில்லை (அதாவது ஐந்தாவது வகுப்பு படிக்கும் வரை அவரவர் பிராந்திய மொழியிலேயே கற்று வந்துள்ளனர்). அவர்கள் ஆங்கில மொழி தேர்வின் போது அது கடினம்என்று  மிகவும் அஞ்சுவர்.

கருத்து 3:  சம்ஸ்க்ருத மொழியால் எந்த பயனும் இல்லை.
கருத்து உடைபடுதல்:  “மொழியினால் பயன்” என்பதை விளக்கவும்

கருத்தின் மறுதலை: செயல் இல்லாமல் விளைவு இல்லை.

பண வருவாய் பயன்: (Monetary Benefit)

  • சம்ஸ்க்ருத மொழி ஆராய்ச்சியாளர்கள்  என்று போலியாக சொல்லிக் கொள்பவர்கள், பழைய சம்ஸ்க்ருத புத்தகங்களை ஆராய்ந்து, பழக்க தோஷத்தாலோ, ஆதாரமில்லாமல் தவறாக புரிந்து கொண்டோ, அந்த புத்தகங்களைப் பற்றி புதிய புத்தகங்கள் எழுதி பயன் அடைகிறார்கள். அந்த புத்தகங்கள் வெளிவந்த பின், சமஸ்க்ருதத்தை விரும்புவது – வெறுப்பது குறித்த சர்ச்சை கிளம்புகிறது.
  • தெற்காசியாவில் உள்ள சம்ஸ்க்ருத அறிஞர்கள் (இந்தியாவில் பிறந்து விட்டதாலேயே) அவர்கள் பெற்று விட்ட அரை வேக்காட்டு அறிவைக் கொண்டு, மேலே சொன்ன ஆராய்ச்சியாளர்களுக்கு தவறான தகவல்களை ஊட்டுகிறார்கள்.
  • வைதீகர்கள் வேறு யாரும் ஏற்று செய்ய முடியாமல் தமக்கே கிடைத்து விட்ட உரிமையில் யாகம் நடத்துவதன் மூலம் பயன் பெறுகிறார்கள்.

தற்பெருமை பயன்கள் (Ego-boosting)

  • பெயர் பெற்ற வரலாற்று ஆய்வாளர்கள் தங்களது கோட்பாடுகளை வரலாறாக கூறி, ஏனையவர்களை கேள்வி கேட்க முடியாமல் செய்து பயன் அடைகிறார்கள்
  • மாணவர்கள் சமஸ்க்ருதத்தை கற்று மற்ற சம்ஸ்க்ருதம் தெரியாதவர்களை மட்டம் தட்டி பயன் பெறுகிறார்கள்
  • பதிவர்கள் தாம் எழுதுவது யாருக்கும் புரியாமல் போகட்டும் என்று சமஸ்க்ருதத்தை தொட்டு தற்பெருமை கொள்கிறார்கள்.
ஒரு புதிய மொழியை கற்பதில் பல பயன்கள் உள்ளன. பயனை நிர்ணயிப்பது அவரவரை சேர்ந்ததாகும்.
கருத்து 4: சம்ஸ்க்ருதம் நிறைவான மொழி – அதுவே எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி – கணினி பயன்பாட்டுக்கு ஏற்ற மொழி
கருத்து உடைபடுதல்:  “நிறைவான மொழி” என்பதை விளக்கவும்

கருத்தின் மறுதலை:

இது வலது சாரி சம்ஸ்க்ருத ஆர்வலர்களுக்கு மிகப் பிடித்தமான ஒன்று. இந்த படத்தைப் பாருங்கள். சம்ஸ்க்ருதம் இந்தோ – ஐரோப்பிய மொழிகளுள் ஒரு மூலையில் இருக்கிறது. கல்வியாளர்களின் PIE (Proto-Indo-European) மொழிகள் குறித்த கருத்துக்கள் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. இந்த கருத்துக்களின் உந்து சக்தியாக பண வருவாய் இருக்கிறதே தவிர உண்மை சிறிதளவும் இல்லை. பல பேர்கள், சம்ஸ்க்ருதம் கணினிக்கு ஏற்ற மொழி என்று Forbes இதழ் குறிப்பிட்டதாக சொல்கிறார்கள். இது எவ்வளவு தூரம் தவறாக குறிப்பிடப் படுகிறது என்று தெரியவில்லை. கணினிக்கு ஏற்றது என்னவெனில், சம்ஸ்க்ருதம் போன்ற ஒரு மொழியை வரையறுக்க பாணினி உபயோகித்த முறையான விதிகள் தான்.  வேறு எந்த மொழியும் இவ்வாறு முறையான விதிகளை பெறவில்லை. இந்த முறை கணினிக்கு ஏற்றதே தவிர, அந்த மொழியே அல்ல.

கருத்து 5: சம்ஸ்க்ருதம் என்ற வார்த்தையை எப்படி சொல்வது? Sanskrit, Samskrit, Samskrita, Sanskrita, Samskritam?
கருத்து உடைபடுதல்: எப்படி சொல்வது என்பதை விளக்கவும்
கருத்தின் மறுதலை:
பிரிட்டிஷார்  அதை  Sanskrit என்று ஆங்கிலப் படுத்தினர். அவர்கள்தான் ஆங்கிலம் உட்பட எந்த மொழியையுமே சரியாக உச்சரிக்கக் கற்பதில்லையே! வட இந்தியர்கள் Samskrit என்று கடைசி “ம்” என்ற எழுத்தை விழுங்கி (இந்தி மொழிக்கு ஏற்றார்போல) உச்சரிக்கிறார்கள். தமிழர்களோ சமஸ்க்ருதம் (Samasgridam) என்று உச்சரிக்கிறார்கள். இதன் நடுவில் தான் Samskrit, Samskrita, Sanskrita போன்ற உச்சரிப்புகள் இருக்கின்றன.

சரியான உச்சரிப்பு சன்ஸ் + க்ரி  + தம் – [where n is nasalized, just like ‘song’, Ri is like ‘ee’ in tweet ]. ऋ (Ri) ரி என்ற எழுத்து உச்சரிப்பது குழப்பும். பற்களின் மேலே நாவால் லேசாக தொட்டு உச்சரிக்கவேண்டும்.

திரு வாசு ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய ஆங்கில பதிவின் மொழியாக்கம்

6 Comments சங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்

  1. செல்வா

    //வேறு எந்த மொழியும் இவ்வாறு முறையான விதிகளை [ப்]பெறவில்லை//

    வேறு எந்த மொழியும்? ஏன் தமிழ் மொழி முறையான விதிகளைப் பெறவில்லையா? உங்கள் கருத்துகளைத் தெரிந்துகொள்ளக் கேட்கிறேன்.

    இன்னொரு கேள்வி, சமசுக்கிருதத்துக்கு அகர வரிசை எங்கிருந்து வந்தது? மற்ற இந்திய-ஐரோப்பிய மொழிகளில் இல்லாதவகையில், தமிழ் மொழியை ஒத்து வருகின்றதே? இது ஏதோ போட்டா போட்டிக்காகக் கேட்கவில்லை. தமிழ் மொழிக்கும், சமசுக்கிருத மொழிக்கும் உள்ள உறவுகளை நேர்மையுடன், சாய்வின்றி அலசவும், கருத்தாடவும் தடையாக அவ்வவ் மொழி “சாய்வாளர்கள்” இருக்கின்றார்கள். யாதும் ஊரே என்னும் தமிழனுக்கு வடமொழி என்பதால் வேறுபாடு வந்துவிடாது. வடமொழி என்றால் சமசுக்கிருதம் மட்டும் என்பதும் அல்ல (பல நேரங்களில் சமசுக்கிருதத்தைத்தான் குறிக்கும்). வடமொழி தென் மொழி என்பது தமிழர்களின் நெங்கால வழக்கு. வடமொழியைத் தமிழர்கள் தொன்று தொட்டு போற்றியும், காத்துமே வந்துள்ளனர்.

    செல்வா
    கனடா

  2. siva sankaran

    mr.Raja the name “vada mozhi” was given by tholkaappiyar without intention of seperating it from south indians.Because in his timeperiod samaskritham named after its geographical locality

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)