வடமொழி சொற்கடல்

வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து வடமொழிக்கும் ஏராளமாக அகராதிகள் உள்ளன. வடமொழியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து வடமொழிக்கும் அகராதிகள் உள்ளனவா என்று ஒரு நண்பர் கேட்டார். அப்படி எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. வடமொழி அறிந்த தமிழர்கள் யாரும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை என்று தோன்றியது.

தமிழிலிருந்து சிலப்பதிகாரம் – மணிமேகலை, பெரியபுராணம் ஆகிய பழந்தமிழ் இலக்கியங்கள் பலவும் வடமொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அந்த அறிஞர்களுக்கு வடமொழி நன்கு அறிந்த காரணத்தினால் அகராதி எதுவும் உருவாக்க வேண்டும் என்று தோன்றாமல் – அல்லது அதற்கு ஒரு அவசியம் ஏற்படாமல் இருந்திருக்கலாம்.

நண்பர் ஜடாயு பிரபல கர்நாடக இசை கலைஞரும், சாஹித்ய கர்த்தாவுமான பாபநாசம் சிவன் ஒரு சம்ஸ்க்ருதம் – தமிழ் அகராதியை உருவாக்கி இருக்கிறார் என்று ஒரு குறிப்பு கொடுத்தார். இந்த குறிப்பைக் கொண்டு எளிதாக இந்த அகராதியை கண்டு பிடிக்க முடிந்தது.

இந்த வடமொழி சொற்கடல் 1954ம் வருடம் முதல் பதிப்பு வெளிவந்து பிறகு சமீபத்தில் 2000ல் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. “संस्कृत भाषा शब्द समुद्र: – द्राविड भाषार्त सहित: - தமிழ் பொருளுடன் வடமொழி சொற்கடல்” என்ற பெயரில் தற்போது என்னிடம் உள்ள இந்த பதிப்பு உள்ளே ஐந்து பாகங்களை உள்ளடக்கிய ஒரே புத்தகமாக இருக்கிறது.

வடமொழிச் சொல்லுக்கு பொருள் தருவதால் இதை அகராதி என்று சொல்லலாமே தவிர, வழக்கமான அகராதிகளைப் போல் இது தொகுக்கப் படவில்லை. சிவன் அவர்கள் இதை நூதனமான முறையில், சொல்லின் எதுகை மோனைகளை அடிப்படையாக கொண்டு தொகுத்திருக்கிறார். அதனால் அகராதியை உபயோகிக்கும் எண்ணத்தில் வார்த்தைகளை இதில் தேடுவது மிகக் கடினம் – மேலும் சாதாரண வினைச்சொற்கள், உரிச்சொற்கள் பெருமளவு இதில் இல்லை.

சில உதாரணங்கள்:

மூன்றாவது தரங்கத்தில்:

आननं – முகம்

काननं – காடு, பிரமன் முகம், ஜலம்

लेपनं- பூச்சு

वेपनं – நடுக்கம்

शोभनं – மங்களம்

இவ்வாறு புத்தகம் முழுவது எதுகை – மோனைகளைக் கொண்டே தொகுக்கப் பட்டுள்ளது.  சிவன் அவர்கள் பொதுவான அகராதி குறித்த எதிர்பார்ப்பையும் மனதில் கொண்டு ஒவ்வொரு பாகத்தில் இறுதியிலும், அந்த பாகத்தில் வந்த அத்தனை சமஸ்க்ருத சொற்களையும் அகரவரிசைப் படி கொடுத்திருக்கிறார்.

சொல்லப் போனால், சமஸ்க்ருதம் நன்கு அறிந்து அதில் கவிதைகள் – சாஹித்யங்கள் எழுத முனைபவர்களுக்கு இந்த புத்தகம் பெரும் உதவியாக இருக்கக் கூடும். பாபநாசம் சிவன் அவர்களே ஒரு வடமொழி கவிஞராகவும், சங்கீத மேதையாக இருப்பதாலும் இவ்வாறு தொகுத்துள்ளார். சமஸ்க்ருதம் கற்க விரும்புகிறவர்களுக்கு இந்த சொற்கடல் உதவும் என்று தோன்றவில்லை.

வடமொழி = தமிழ் நேரடியான அகராதிகள் எதுவும் இன்னமும் இருப்பதாக தெரியவில்லை. இனி யாராவது சமஸ்க்ருதம் அறிந்த தமிழர்கள் அதனை உருவாக்கினால்தான் உண்டு.

இந்தப் புத்தகம் பற்றி: http://shivanisai.net

 

தொடர்புடையவை
prev next

Tags: , , , , ,

7 மறுமொழிகள் வடமொழி சொற்கடல்

  1. RAVISANKAR on September 7, 2010 at 3:18 pm

    DEAR SIR,
    PLEASE INFORM ME WHERE THIS BOOK “VADAMOZHI SORKADAL” IS AVAILABLE FOR PURCHASE.PLEASE INFORM ME THE ADDRESS, PHONE NUMBERS ,E MAIL ADDRESS OF THE SHOP AND THE PERSON TO BE CONTACTED.
    WITH REGARDS
    V.RAVISANKAR

  2. சு பாலச்சந்திரன் on September 27, 2010 at 8:37 am

    டியர் ரவிசங்கர் ,

    30, கிருபாசங்கரி தெரு
    மேற்கு மாம்பலம்
    சென்னை 33 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும் , அந்த புத்தகத்தின் அட்டையில் இந்த முகவரியே அச்சிடப்பட்டு உள்ளது .

  3. b.balakrishnan on August 2, 2011 at 11:48 pm

    thayavu சித்து வடமொழி சொட்கடல் எங்கே கிடைக்கும். என்று பதில் தரவும் அன்புடன் பாலகிருஷ்ணன்.

  4. b.balakrishnan on August 4, 2011 at 11:14 pm

    வடமொழி சொட்கடல் என்ற தமிழ் சம்ஸ்க்ருதம் கோஷம் புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட முகவரிக்கு yeழுத்தப்பட்ட YEN KADIDHATHTHIRKU பதில் எனக்கு பல மாதங்கள் கழிந்தும் கிடைக்கப்பபெறவில்லை. எனவே தங்கள் வடமொழி சொட்கடல் PUTTHAKAM எங்கு கிடைக்கப்பெறலாம் என்பதை தயவுசெய்து தெரிவயுங்கள். பா.BALAKRISHNANHNAN.

  5. संस्कृतप्रिय: on August 5, 2011 at 10:05 am

    Dear Sri Balakrishnan,

    Papanasam Sivan’s grandson is in Chennai. You can contact him for the book. The address is here:
    http://shivanisai.org/contactus.htm

    Contact Address:
    Flat1-A, Sai Sakthi
    41, Umapathy Street
    West Mambalam
    Chennai
    PIN – 600 033
    India
    Mobile: +91 98403 48568
    E-mail: contactus@sangeethamingepaadalam.com

  6. K. Thirukkumaran on March 16, 2012 at 4:04 pm

    நீண்ட நாட்களாக தேடின புத்தகத்தின் விலாசம் உங்கள் மூலம் அறியபெற்றேன் . மிக்க நன்றி.
    வளர்க உங்கள் பணி.

  7. Nataraja Deekshidhar on April 16, 2012 at 6:49 am

    பாபநாசம் சிவன் அவர்களால் தொகுக்கப்பட்ட வடமொழி சொற்கடல் ஒரு அற்புதமானது. தாளக்கட்டுக்கு ஏற்ப வடமொழி வார்த்தைகளை அமைக்க அல்லது கவிதைகள் எழுத அல்லது இத்தனை எழுத்துக்களில் வார்த்தை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம். அடியேனிடம் பழைய பதிப்பு இருக்கின்றது. நேரடியாக வடமொழிச் சொல்லுக்கு தமிழ் அர்த்தம் தேடுதல் சற்று சிரமம் என்றாலும், வடமொழி ஆர்வலர்களால் இப்புத்தகம் இன்றும் விரும்பப்படுகின்றது.

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

*

உங்கள் கருத்து: