அண்ணா ஹசாரே துதி

गान्धेर्महात्मनः मार्गमनुसृत्य सदाग्रहम्
भीषयन्सर्वकारं यो निराहारव्रतस्थितः ।। १ ॥

उत्कोचरोगसंत्रस्तान् सुप्तान् नः प्रत्यबोधयत् ।
उत्कोचभूतनाशाय सुशक्तं लोकपालकं ।। २ ॥

विदध्यात्संसदित्येवं कृतो येनाग्रहो दृढः
आहिमाचलमासेतोः ग्रामेषु नगरेषु च ।। ३ ॥

यस्य स्थैर्यं चार्जवं च श्लाघिते विस्मितैर्जनैः
अण्णाहजारेवर्यं तं प्रणमाम हृदा मुदा ॥ ४ ॥

उत्कोचं न प्रगृह्णामि न ददामि कदाचन
इत्येवं प्रतिजानाम देशार्थं स्वहिताय च ।। ५॥

अण्णाहजारेऽभिध एष योगी उत्कोचनिर्मूलनयज्ञदीक्षितः ।
निरामयो जीवतु हायनाः शतम् भवन्त्वमोघाः प्रथिता तदुद्यमाः ॥ ६ ॥

***

கா³ந்தே⁴ர்மஹாத்மன​: மார்க³மனுஸ்ருʼத்ய ஸதா³க்³ரஹம்
பீ⁴ஷயன்ஸர்வகாரம்ʼ யோ நிராஹாரவ்ரதஸ்தி²த​: || 1 ||

மகாத்மன் காந்தியினுடைய மார்க்கத்தை அனுசரித்து ஆகாரமின்றி இருந்து சர்க்காரை நடுங்க செய்தவரும்

உத்கோசரோக³ஸந்த்ரஸ்தான் ஸுப்தான் ந​: ப்ரத்யபோ³த⁴யத் |
உத்கோசபூ⁴தனாஸா²ய ஸுஸ²க்தம்ʼ லோகபாலகம்ʼ || 2 ||

(உத்கோச = ஊழல்), ஊழல் நோயை நடுக்கமடைய செய்தவரும் தூங்குபவர்களை எழுப்பியவரும் ஊழல் பூதம் நாசமடைய சக்தி உடையவரும் உலக ரட்சகரும்

வித³த்⁴யாத்ஸம்ʼஸதி³த்யேவம்ʼ க்ருʼதோ யேனாக்³ரஹோ த்³ருʼட⁴​:
ஆஹிமாசலமாஸேதோ​: க்³ராமேஷு நக³ரேஷு ச || 3 ||

இமயம் முதல் குமரி வரை கிராமங்களிலும் நகரங்களிலும் போராட்டத்தை திரட்டி நடத்தியவரும்

யஸ்ய ஸ்தை²ர்யம்ʼ சார்ஜவம்ʼ ச ஸ்²லாகி⁴தே விஸ்மிதைர்ஜனை​:
அண்ணாஹஜாரேவர்யம்ʼ தம்ʼ ப்ரணமாம ஹ்ருʼதா³ முதா³ || 4 ||

எவருடைய தைரியம் முனைப்பு ஆகியவற்றை கண்டு ஜனங்களால் சிலாகித்து மகிழப் படுகிறாரோ அந்த அண்ணா ஹசாரேவர்யரை மனம் மகிழ்ந்து வணங்குகிறேன்.

உத்கோசம்ʼ ந ப்ரக்³ருʼஹ்ணாமி ந த³தா³மி கதா³சன
இத்யேவம்ʼ ப்ரதிஜானாம தே³ஸா²ர்த²ம்ʼ ஸ்வஹிதாய ச || 5||

நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மை தருவதற்காக எப்போதும் லஞ்சம் கொடுக்க மாட்டேன் வாங்க மாட்டேன்

அண்ணாஹஜாரே(அ)பி⁴த⁴ ஏஷ யோகீ³ உத்கோசனிர்மூலனயஜ்ஞதீ³க்ஷித​: |
நிராமயோ ஜீவது ஹாயனா​: ஸ²தம் ப⁴வந்த்வமோகா⁴​: ப்ரதி²தா தது³த்³யமா​: || 6 ||

அண்ணா ஹசாரே என்ற பெயர் பெற்ற இந்த யோகி ஊழல் அழிப்பு யாகத்தை தொடங்கியவர் நூறாண்டு கடந்து திடமாக வாழட்டும்!

***

நில்லா உலகிது, நேர்வழிக் காந்தியக் கொள்கை வெறும்
செல்லாக் காசெனச் செப்பியோர் நாணிட, சேர்ந்து திரள்
பல்லாயிரவர் பணிசெய்திடப் பாழ் ஊழல் இருள்
இல்லாதொழிந்திட அண்ணாயிரச் சுடர் எழுந்ததுவே. 

மண்ணாள்வார் புரி ஊழல் எனும் ஒரு மாமதப் பேய் 
கண்ணாம் நாட்டினைக் காவு கொள்ளல் கண்டு கசிந்துருகி 
உண்ணா நோன்பிருந்து ஊரார் எலாம் ஒன்று சேரவைத்தார் 
அண்ணாயிரத்தார் அடித்தாமரைகள் எம் அடைக்கலமே. 

(அண்ணா ஹசாரே – தமிழில் அண்ணாயிரத்தார்)

[வடமொழி கவிதை: திரு.ஜி.எஸ்.எஸ். மூர்த்தி, தமிழ் மரபுக் கவிதையாக்கம்: திரு. ஜடாயு]

1 Comment அண்ணா ஹசாரே துதி

Write a Reply or Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன


  Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Hindi OR just Click on the letter)