வடமொழி கற்க பத்து வழிகள்

1. பாட புத்தகங்கள் (Text books)books

இணையத்தில் சம்ஸ்க்ருதம் கற்க ஏராளமான புத்தகங்கள் – PDF வடிவிலும், வலைப் பக்கங்களாகவும் கிடைக்கின்றன. உதாரணமாக சித்ராபூர் மடத்தின் வலைப்பக்கத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாடங்களை சொல்லலாம். மிக எளிய முறையில் அமைந்துள்ள இந்த பாடங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன. மேலும் பல வலைப்பக்கங்கள் சம்ஸ்க்ருதம் கற்க உதவுகின்றன. தேடினால் கிடைக்கும்.  CBSE பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து சம்ஸ்க்ருதம் சொல்லித் தரப்படுகிறது. அந்த புத்தகங்களை வாங்கினால் வடமொழியை எளிதாக கற்கலாம்.

2. ஆசிரியர்கள் (Coaching)

சுயமாக கற்கும் முயற்சியிலிருந்து துணிந்து ஒரு ஆசிரியரை நாட முடிவு செய்து விட்டீர்களா… அதுவும் சாத்தியம் தான். முன்பெல்லாம் தெரிந்தவர்கள் மூலமாக தேடி தேடி களைத்துப் போக நேரிடும். இப்போது இணையத்தின் மூலமாக வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வடமொழி கற்கமுடியும்..  Language-School-Teachers.com போன்ற வலைப்பக்கங்களில் தேடினால் நாம் விரும்பும் எந்த மொழிக்கும் ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள். என் ஆசிரியரையும் நான் அப்படித்தான் கண்டடைந்தேன்.

3. தேடுபொறி (Search engines)

சமஸ்க்ருதத்தில் சில சந்தேகங்களை வலையில் தேட வேண்டுமா.. கூகிள் தேடுபொறியில் சம்ஸ்க்ருத தேடல் இருக்கிறது தெரியுமா? இது தவிர யூனிகோடு எழுத்துருக்களை யாகூ போன்ற எல்லா தேடுபொறிகளும் அனுமதிக்கின்றன. அதனால் நமக்கு தேவையான வடமொழி தேடுதலை எளிதாக மேற்கொள்ளலாம்.

4. எழுத்துருக்கள் (Script/Writing)

யூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது.  கூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.

5. வினைச்சொல் உருவாக்க… (Sanskrit Verb Generator)

ஏனைய இந்திய மொழிகளைப் போல், இலக்கண சிறப்பு அமைப்புகள் மிகுந்தது. வடமொழியின் வினைச்சொற்கள், இறந்த – நிகழ் – எதிர்கால அமைப்பைப் பொறுத்து சிறு மாற்றங்களை கொள்ளும்.  இதற்கு உதவும் வகையில் இந்த வலைப்பக்கம் உதவுகிறது.

6. வேற்றுமைகள் (Shabda – Declension Engine)

வினைச்சொற்கள் போலவே, வடமொழியில் பெயர்ச்சொற்களும் வேற்றுமை கொள்ளும்போது வேற்றுமை உருபுகளுக்கேற்ப சிறு மாற்றம் கொள்ளும். இதை எளிதாக அறிய இந்த பக்கம் உதவுகிறது.

7. அகராதிகள்

புதிதாக எந்த மொழியையுமே கற்கும்போது, ஒரு சிறிய அகராதியை வைத்திருப்பது மிகவும் அவசியம். வடமொழிக்கு புகழ் பெற்ற Monier Williams அகராதி மிகவும் உதவும். இது வலையில் இலவசமாக PDF கோப்பாக கிடைக்கிறது. இது தவிர, தேடும் வகையில் அகராதிகளும் (Cologne Dictionary, Spoken Sanskrit Dictionary) வலையில் கிடைக்கின்றன. வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றி பொருள் புரிந்து கொள்ள, Apte’s Sanskrit Dictionary உதவும்.

8. வீடியோக்கள் (Videos)

இணையத்தில் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ள உதவும் வகையில் பல்வேறு வீடியோக்கள் யூட்யூப் போன்ற வலைப்பக்கங்களில் கிடைக்கின்றன. அடிப்படையாக எழுத்துக்களை கற்பது துவங்கி, பேச்சு மொழியை அறியவும் உதவும் வீடியோக்கள் நிறைய இருக்கின்றன. இதுவும் தவிர ஆடியோ mp3 வடிவிலும் கற்றுக்க்கொள்ள உதவும் பக்கங்கள் இணையத்தில் உள்ளன.

9. வலைப்பதிவுகள் (Blogs, News)

வியப்புக்குரிய செய்தி என்னவெனில், சம்ஸ்க்ருதத்தில் ஏற்கனவே நிறைய பிளாகுகள் எழுதப்பட்டு வருகின்றன. பலரும் முழு சம்ஸ்க்ருதம், கொஞ்சம் இந்தி – சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் – சம்ஸ்க்ருதம் என்ற வகையில் எழுதி வருகிறார்கள். சம்ஸ்க்ருத ஆர்வலர்கள், மாணவர்கள் என்று பலர் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். பார்க்க:

10. வலைக்குழுக்கள்

வலைப்பதிவுகளைப் போலவே, ஏராளமான வலைக்குழுக்களும் சம்ஸ்க்ருதம் கற்க/பயன்படுத்த  உதவும் வகையில் இயங்கி வருகின்றன. பல வருடங்களாக இயங்கி வரும் சில குழுக்களில் பொதிந்து கிடக்கும் தகவல்கள் ஏராளம். சில சம்ஸ்க்ருத குழுக்கள்:

7 comments for “வடமொழி கற்க பத்து வழிகள்

மறுமொழி இடுக:

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.

உங்கள் கருத்து:

*