வடமொழியில் தலைசிறந்த ஐம்பெருங் காவியங்களில் ஒன்று நைஷதம். மகாபாரதத்தில் வரும் நிஷத நாட்டு மன்னன் நளன் மற்றும் தமயந்தி கதையை ஒரு மகா காவியமாக ஸ்ரீ ஹர்ஷர் என்ற கவிஞர் இயற்றி இருக்கிறார். “நைஷதம் வித்வத் ஔஷதம்” என்றொரு பழமொழி உண்டு. இருபத்தி இரண்டு அத்தியாயங்களுடன் கூடிய, பல முடிச்சுகள் நிறைந்த கடினமான காவியம் இது. இது தவிரவும் ஸ்ரீ ஹர்ஷர் அத்வைத தத்துவ சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி உள்ளார். இந்த மகா கவிஞனை ஜயந்த சந்திரன் என்ற மாமன்னன் ஆதரவளித்து தன் அவைப் புலவராக கொண்டான்.
மேலும் படிக்கஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்
கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம், பாரதத்தின் அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணவ் முகர்ஜி, சீனாவுக்கு சென்று அங்கே பீஜிங்கில் ஒரு இராணுவ மருத்துவமனையில் இருந்த தொண்ணூற்று ஏழு வயது சீன முதியவரின் கையில், இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை அளித்தார். பாரதத்தின் உயரிய இந்த விருது P.V. கானே அவர்களுக்கு பின்னர் ஒரு சம்ஸ்க்ருத அறிஞருக்குக் கிடைத்தது என்றால் அது இந்த சீனக் குடிமகனுக்குத் தான். அந்த முதியவரின் பெயர்… மேலும் படிக்க
கற்பதற்கு எளிமையான கேரளத்தின் இரு காவியங்கள்
ஸ்ரீ கிருஷ்ண விலாசமும், ஸ்ரீ ராமோதந்தமும் கேரளத்தில் பிறந்த இரு காவியங்கள். கேரளத்தில் சம்ஸ்க்ருதம் கற்போருக்கு முக்கியமாக இரண்டு காவியங்களைச் சொல்லித் தருவர். ஸ்ரீ ராமோதந்தம் காவியத்தை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. ஸ்ரீ கிருஷ்ண விலாச காவியத்தை இயற்றியவர் சுகுமார கவி ஆவார். ஸ்ரீ கிருஷ்ண விலாசம் ஒரு மகா காவியத்துக்குண்டான எல்லா இலக்கணங்களுடன் பன்னிரண்டு காண்டங்களில் அமைந்துள்ளது. அழகிய சொல் நயம், சந்த நயங்களுடன் அமைந்துள்ள இக்காவியத்தின் ஒரே குறை, இது முழுமை அடையாமல் பாதியிலேயே நின்று விட்டது தான். சமஸ்க்ருதத்தை ஒரு சில வகுப்பினர் தான் கற்பார் என்று ஒரு கருத்து பரப்பப் பட்டுள்ளது. இதைப் பொய்யாக்கும்படியாக கேரளத்தில் எல்லா மக்களும் சாதி பாகுபாடின்றி சம்ஸ்க்ருதமும், ராமோதந்தம் முதலிய காவியங்களும் முற்காலத்திலேயே கற்றதற்கு சான்றுகள் உள்ளன. கடந்த சில பத்தாண்டுகள் வரை இது அரசு பாடத்திட்டத்திலேயே சொல்லித் தரப்பட்டது என்றால் இது எத்துணை பரவி இருந்தது என்று அறியலாம்.
மேலும் படிக்கவிளிகள் – ஸம்போதநம்
ஒருவரை அழைக்கையில் நீட்டி முழக்கி விளித்தால்தான் அவர் உடனே திரும்பிப் பார்ப்பார்; இறைவனையும் ‘சுவாமியே! சரணம் ஐயப்பா !!’ என்றுதான் விளிக்கிறோம்; ‘நாராயணா! ஓ மணிவண்ணா! நாகணையாய்!’ எனப் பெருங்குரலெடுத்துத்தான் பெருமாளை ஆழ்வார் விளிக்கிறார். ’பாசுபதா! பரஞ்சுடரே’ எனும் விளிகள் ஒரு பதிகம் முழுக்க மாசிலாமணீசுவரருக்கு அமைகிறது.
மேலும் படிக்கசீன மொழியும் சம்ஸ்க்ருதமும்
சீனமொழியும் சம்ஸ்க்ருத மொழியும் இந்த உலகின் மிகப் பழைய, பரவலான தாக்கத்தைக் கொண்ட செழுமையான மொழிகள். இவ்விரு மொழிகளுக்கும் பல ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இவ்விரண்டு மொழிகளுமே மானுட இனத்தின் முக்கியமான மொழிகளாம்.
மேலும் படிக்கவால்மீகி இராமாயணத்தின் உரைவளம்
கவிதை என்னும் மரக்கிளைமேலேறி அமர்ந்து ராம ராம என்று மதுரமொழியில் கூவும் குயிலாம் வால்மீகியை வணங்குகிறேன்! சிங்க நிகர் முனிவராம் வால்மீகி அவர் கவிதா வனத்தில் கர்ஜித்த குரலை ஒரே ஒரு முறை கேட்டாலும் நற்கதி அடையாதவர் யார்?! ராமகாதை என்னும் அமுதக் கடலை அள்ளி அள்ளி பருகியபின்னும் ஆசை தீராதவராம் அப்பழுக்கற்ற கவி வால்மீகியை வணங்குகிறேன்!! कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् | आरुह्य कविता शाखां वन्दे वाल्मीकि कोकिलम् || वाल्मीकेर्मुनिसिंहस्य… மேலும் படிக்க
அத்தியாயங்களுக்கு இத்தனை பெயர்களா!
எந்த வகை நீண்ட காவிய இலக்கியம் ஆனாலும், அதனுள் பல உட்பிரிவுகள் வைத்து பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயர் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கம். அதிகாரம், அத்தியாயம், சருக்கம், காண்டம், படலம், அங்கம் என்பன போன்ற பகுப்புகள் அல்லது பிரிவுகள் தமிழ், வடமொழி இலக்கியங்களில் உள்ளன. ‘அங்கம்’ பொதுவாக நாடக நூல்களில் அமைவது. தமிழில் பேராசிரியர் சுந்தரனாரின் மனோன்மணீய நாடகம் ஐந்து அங்கங்களோடு அமைந்துள்ளது; ஒவ்வோர் அங்கத்திலும் காட்சிகள் ‘களம்’ எனும் பெயரில் விரிகின்றன. மேற்கத்திய… மேலும் படிக்க